47ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் இந்திய விமானப்படைக்கு தேஸாஸ் போர் விமானம் !!

  • Tamil Defense
  • May 19, 2020
  • Comments Off on 47ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் இந்திய விமானப்படைக்கு தேஸாஸ் போர் விமானம் !!

இந்திய விமானப்படைக்கு சுதேசி தளவாடங்களை வாங்கும் பொருட்டு 47ஆயிரம் கோடி ருபாய்க்கு இலகுரக தேஜாஸ் போர் விமானங்களை வாங்கவுள்ளதாக விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 83 தேஜாஸ் போர் விமானங்களை 39ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், கூடுதலாக புதிய படையணி ஒன்றினை எழுப்ப 8ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் தேஜாஸ் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கையெழுத்தாகும் எனவும் கூறினார்.

மேற்குறிப்பிட்ட 83தேஜாஸ் மார்க் 1ஏ விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் அடுத்த காலாண்டிற்குள் செயல்படுத்தப்படும் எனவும், அது எங்களின் பிரதான முயற்சிகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.