Breaking News

Day: May 19, 2020

விரைவில் கோவை சூலூர் படைத்தளத்தில் செயல்பாட்டுக்கு வரும் இரண்டாவது தேஜஸ் படையணி !!

May 19, 2020

மே மாத இறுதிக்குள் இந்திய விமானப்படை தனது இரண்டாவது தேஜஸ் படையணியை செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா கூறுகையில் “முதலாவது தேஜாஸ் படையணியை ஜூலை 2016ல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தோம், இரண்டாவது படையணியை இந்த வருடம் ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வர இருந்த நிலையில் கொரோனா தொற்றால் தாமதம் ஏற்பட்டது” என்றார். இந்த இரண்டாவது தேஜஸ் படையணி இந்திய விமானப்படையின் 18ஆவது படையணி ஆகும். இந்த […]

Read More

இரு முக்கிய ஹிஸ்புல் பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

May 19, 2020

காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். முக்கிய ஹிஸ்புல் பயங்கரவாதியான ஜினைத் சேஹ்ரை மற்றும் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான். காஷ்மீரில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று வீரர்களும் காயமடைந்துள்ளனர்.2 காஷ்மீர் காவல்துறை சிறப்பு படை வீரர்களும் ஒரு சிஆர்பிஎப் வீரரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாவாகடல் பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது.

Read More

பாக் சதி: இந்தியா மீதான தலிபான்கள் விமர்சனத்திற்கு ஆஃப்கன் அரசு பதிலடி !!

May 19, 2020

கத்தார் நாட்டில் தலிபான்கள் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியா கடந்த 40வருட காலமாக ஆப்கானிஸ்தானில் மோசமான பங்கு வகித்து வருவதாக விமர்சனம் ஒன்றை வெளியிட்டது. தற்போது இந்த விமர்சன அறிக்கைக்கு ஆஃப்கானிஸ்தான் அரசின் வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அரசின் அறிக்கையில் இந்தியா மிக நீண்ட காலமாக ஆஃப்கானிஸ்தானுடைய நட்பு நாடாக விளங்கி வருவதாகவும், ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருவதாகவும், கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, ராணுவம் போன்ற துறைகளில் […]

Read More

இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாக் அச்சப்பட வேண்டும் இந்திய விமானப்படை தளபதி !!

May 19, 2020

இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் எப்போதெல்லாம் இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் பாகிஸ்தான் அச்சப்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்திய மண்ணில் பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். மேலும் அவர் கூறுகையில் இந்திய ராணுவம் அரசு விரும்பினால் தாக்குதல் நடத்த முழு அளவில் தயாராக உள்ளது எனவும், இந்திய விமானப்படை எல்லை தாண்டி தாக்குதல் நடத்துமா என கேட்டதற்கு […]

Read More

மஹாராஷ்டிர மாநிலத்தில் நக்ஸல் தாக்குதல் இரண்டு காவலர்கள் வீரமரணம் !!

May 19, 2020

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மஹாராஷ்டிர மாநிலத்தில் போயார்கோட்டி வனப்பகுதியில் நக்ஸல்கள் இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். விரைவு நடவடிக்கை குழு மற்றும் சி60 கமாண்டோக்கள் நக்ஸல்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு காவலர்கள் வீரமரணம் அடைந்தனர், மூவர் காயமடைந்தனர். நான்கு நக்ஸல்களும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

Read More

47ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் இந்திய விமானப்படைக்கு தேஸாஸ் போர் விமானம் !!

May 19, 2020

இந்திய விமானப்படைக்கு சுதேசி தளவாடங்களை வாங்கும் பொருட்டு 47ஆயிரம் கோடி ருபாய்க்கு இலகுரக தேஜாஸ் போர் விமானங்களை வாங்கவுள்ளதாக விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 83 தேஜாஸ் போர் விமானங்களை 39ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், கூடுதலாக புதிய படையணி ஒன்றினை எழுப்ப 8ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் தேஜாஸ் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கையெழுத்தாகும் எனவும் கூறினார். மேற்குறிப்பிட்ட 83தேஜாஸ் […]

Read More

லடாக்கில் படைக்குவிப்பில் இந்தியா; சீனாவும் படைக்குவிப்பில் ஈடுபடுகிறது

May 19, 2020

பாங்கோங் ஏரி பகுதியில் மே மாதத் தொடக்கத்தில் இரு நாட்டு படைகளும் மோதலில் ஈடுபட்டதற்கு பிறகு இரு நாட்டு எல்லைப் பகுதியும் பதற்றத்தில் உள்ளது.தற்போது இரு நாட்டு படைகளும் லடாக்கில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கு முன்பும் இந்த பகுதியில் பலமுறை சிறு சண்டைகள் நடந்துள்ளன. கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள டெம்சோக்,சுமாய் மற்றும் தௌலட் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுவருகின்றன. கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் திடீரென சீன வீரர்கள் டென்ட் அமைத்து […]

Read More

வேட்டையை தொடங்கிய தரைப்படை காஷ்மீரின் 2 முக்கிய பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு !!

May 19, 2020

இந்திய தரைப்படை சமீபத்தில் காஷ்மீரின் மிக முக்கியமான 10 பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. கூடிய விரைவில் இவர்களை காலி செய்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலையில் ஶ்ரீநகரின் நவாகடல் பகுதியில் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள டாக்டர் சய்ஃபூல்லா மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ஜூனையத் ஆகியோர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஹிஸ்புல் இயக்கத்தின் காஷ்மீர் பிரிவு தலைவனான ரியாஸ் நாய்க்கூவின் இடத்தில் சய்ஃபூல்லா […]

Read More

காஷ்மீரில் தொடங்கிய என்கௌன்டர்-3 வீரர்கள் காயம்

May 19, 2020

காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.2 காஷ்மீர் காவல்துறை சிறப்பு படை வீரர்களும் ஒரு சிஆர்பிஎப் வீரரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாவாகடல் பகுதியில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது.

Read More

இந்தியப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிடும் நேபாளம்

May 19, 2020

இந்தியாவுடனான பிரச்சனைக்குரிய பகுதிகள் என நேபாளம் நினைக்கும் லிபூலேஹ்,கலபனி மற்றும் லிம்பியுதுரா பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானது ஆகும்.இருந்தும் நேபாளம் இவற்றை தனது பகுதிகள் என்று கூறி வருகிறது. மகாகாளி ஆற்றுக்கு அருகே உள்ள நிலங்களை தங்களுக்கு சொந்தமானது என நேபாளம் கூறி வருகிறது.புதிய வரைபடத்தை அந்நாட்டின் கேபினட் கமிட்டிக்கு அளித்துள்ளார் நில மேலாண்னை அமைச்சர் பத்ம ஆர்யல்.இதற்கு அந்நாட்டின் கேபினட் கமிட்டியும் அனுமதி […]

Read More