கொரானாவிற்கு எதிரான போர்; கொல்கத்தா கப்பல் கட்டும் தளம் செய்ததை பாருங்கள்

  • Tamil Defense
  • April 4, 2020
  • Comments Off on கொரானாவிற்கு எதிரான போர்; கொல்கத்தா கப்பல் கட்டும் தளம் செய்ததை பாருங்கள்

போருக்கு தேவையான போர்கப்பல்களை கட்டி கடற்படைக்கு அனுப்பும் கொல்கத்தா கப்பல்கள் கட்டும் தளம் இந்தியாவின் சிறந்த தளமாகும்.கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் அல்லது GRSE கோரானாவிற்கு எதிரான போருக்காக 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த தளம் கொரானாவிற்கு எதிரான போரில் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளது.

கோவிட்-19 தொற்று உலகம் முழுதும் தீவிரமாக பரவி கிட்டத்தட்ட 50000 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகையே கிட்டத்தட்ட எந்த பணியும் செய்யவிடாமல் முடக்கி வைத்துவிட்டது எந்த நோவல் கொரானா வைரஸ்.பரவலை தடுக்க உலகம் முழுதும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவும் தன்னால் முயன்ற அளவு இந்த கொரானா பரவலை தடுக்க முயற்சிகள் செய்து வருகிறது.

21 நாட்களுக்கு மொத்த இந்தியாவும் முடக்கப்பட்டு தற்போது பரவல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரவல் சங்கிலியை உடைப்போம் என்ற முழக்கத்தோடு சுய தனிமைப்படுத்துதல் என்பதையும் இந்தியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போரில் பங்கெடுத்துள்ள கொல்கத்தா தளம் பிரதமர் கேர்ஸ் என்ற கொரானா தடுப்பு நிதிக்கு 1 கோடி ரூபாய் அளித்துள்ளது.