பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட கூடிய மேலதிக சு30 போர் விமானங்களை பெற விரும்பும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • October 8, 2022
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட கூடிய மேலதிக சு30 போர் விமானங்களை பெற விரும்பும் இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை விமானத்திலிருந்து ஏவப்படும் Brahmos-A பிரம்மாஸ் ஏ ரக ஏவுகணைகளால் மிகுந்த திருப்தி அடைந்துள்ள நிலையில் அவற்றை சுமக்கும் விமானங்களை அதிகளவில் பெற நாட்டம் காட்டி வருகிறது.

ஏற்கனவே தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் உள்ள சுகோய்-30 Su-30MKI படையணியின் 18 போர் விமானங்களும் இத்தகைய பிரம்மாஸ்-ஏ ஏவுகணைகளை சுமக்க கூடியவை ஆகும்.

தற்போது இந்திய விமானப்படை கூடுதலாக இத்தகைய 20 சுகோய்-30 போர் விமானங்களை பெற விரும்புகிறது, மொத்தமாக தற்போது இத்தகைய 40 விமானங்களை பெற விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகோய்-30 கனரக போர் விமானத்தின் உடலின் நடுப்பகுதியை இந்த 2,500 கிலோ எடை கொண்ட ஏவுகணையை சுமக்கும் விதமாக வலுப்படுத்த பல மேம்பாட்டு பணிகளை HAL செய்த பிறகு DRDO விமானத்தில் ஏவுகணையை இணைக்க தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை செய்யும்.

DRDO பிரம்மாஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை முறையே 350 – 400ல் இருந்து 500 கிலோமீட்டராக அதிகரித்து உள்ள நிலையில் , சுமார் 800 கிலோமீட்டர் பாயும் ரகத்தையும் உருவாக்கி வருகிறது, அத்தகைய ஏவுகணையை கொண்டு எதிரி எல்லைக்குள் நுழையாமலேயே தாக்குதல் நடத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.