Day: October 8, 2022

350 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் காவல்துறை !!

October 8, 2022

குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு 7ஆம் தேதி அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படை தனது C-429 மற்றும் C-454 ரக அதிவேக இடைமறிப்பு மற்றும் ரோந்து கலன்களை களமிறக்கி ரோந்து பணி மேற்கொண்டது. இந்த நிலையில் நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான சர்வதேச கடல்சார் எல்லையை அத்துமீறி 5 நாட்டிகல் மைல் உள்நுழைந்த பாகிஸ்தானிய படகை குஜராத் மாநிலம் ஜகாவ் பகுதியில் இருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல்படை […]

Read More

அடுத்த வருடம் வெளிவரும் அதிநவீன சுதேசி ATAGS MGS பிரங்கி அமைப்பு !!

October 8, 2022

அடுத்த ஆண்டு ஏற்கனவே Defence Research & Development Organisation வடிவமைத்து Bharat Forge நிறுவனம் தயாரித்த ATAGS Advanced Towed Artillery Gun System எனப்படும் சுதேசி பிரங்கியின் MGS Mounted Gun System வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ATAGS பிரங்கி Tatra T815 27ET96 28 300 8×8 லாரியில் பொருத்தப்படும் இதனை MArG Monted Artillery Gun எனவும் அழைப்பார்கள், லாரியில் பொருத்தப்படுவதை தான் மவுண்டட் என கூறுகிறார்கள். இந்த […]

Read More

இந்திய ட்ரோன்கள் மற்றும் மிதவை குண்டுகள் மீது ஆர்வம் காட்டும் ஆஃப்ரிக்க நாடுகள் சீனாவுக்கு போட்டி !!

October 8, 2022

தற்போது உக்ரைனிலும் அர்மீனியாவிலும் நடைபெற்று வரும் போர்கள் மிதவை குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தேவையை நன்கு உணர்த்தியுள்ளன, இதனால் ஆஃப்ரிக்க நாடுகள் இவற்றை பெற விரும்புகின்றன. ஆனால் ஐரோப்பிய மற்றும் பிற மேற்கு நாடுகளின் தயாரிப்புகள் அதிக விலை கொண்டவையாக உள்ளன அதே நேரத்தில் மலிவான சீன தயாரிப்புகள் மிகவும் தரம் குறைந்தவையாக உள்ளன, இவற்றிற்கு பதிலாக இந்திய தயாரிப்புகள் உள்ளன. அதாவது மேற்கு நாடுகளின் தயாரிப்புகளை விடவும் 40% மலிவானதாகவும் தரமானதாகவும் உள்ளன ஆகவே […]

Read More

10 மெகா ஜூல் திறன் கொண்ட நடுத்தர ரக மின்காந்த பிரங்கி Rail Gun அமைப்பு விரைவில் சோதனை !!

October 8, 2022

மஹாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் அமைந்துள்ள Defence Research and Development Organisation உடைய ஒரு பிரிவான ARDE Armament Research and Development Establishment அமைப்பு ஒரு முக்கிய சாதனையை புரிந்துள்ளது. அதாவது 10 Mega Joule மெகா ஜூல் திறன் நடுத்தர ரெயில் கன் Rail Gun அமைப்பை உருவாக்கி உள்ளது, இதை மின்காந்த பிரங்கி என்றும் சொல்லலாம் விரைவில் இது சோதனை செய்யப்பட உள்ளது. இதனால் 500 கிராம் முதல் 1 கிலோ […]

Read More

மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு சிறப்பு நிதி கோர உள்ள இந்திய கடற்படை !!

October 8, 2022

இந்திய கடற்படையின் உயர்மட்ட குழு ஒன்று விரைவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி ஆதார பிரிவை அடுத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான சிறப்பு நிதிக்கான கோரிக்கை அளிக்க நாட உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு நிதிக்கு ஒப்புதல் கிடைத்தால் முதல்கட்ட பணிகள் துவங்கும் குறிப்பாக இந்திய கடற்படையின் Warship Design Bureau போர்கப்பல் வடிவமைப்பு முகமை மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை துவங்கும் என கூறப்படுகிறது. இந்திய கடற்படை […]

Read More

விரைவில் தேஜாஸ் போர் விமான தொழிற்சாலையை பார்வையிடும் அர்ஜென்டினா குழு !!

October 8, 2022

அர்ஜென்டினா விமானப்படையின் போர் விமான தேர்வில் அமெரிக்க F-16, சீன JF-17 மற்றும் இந்திய LCA TEJAS ஆகிய மூன்று போர் விமானங்களும் போட்டியில் உள்ள நிலையில் இந்தியா இந்த ஒப்பந்தத்தை பெற தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த மாதம் இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் அர்ஜென்டினா சென்று அந்நாட்டு விமானப்படை தளபதியை சந்தித்து தேஜாஸ் போர் விமானத்தை பற்றி விளக்கி இந்தியா வந்து பார்வையிட […]

Read More

ரஷ்யாவையும் க்ரைமியாவையும் இணைக்கும் பாலத்தை தகரத்த உக்ரைன் ரஷ்யாவுக்கு பெருத்த அடி !!

October 8, 2022

கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா க்ரைமியாவை கைபற்றிய பிறகு தனியாக தீவு போலிருந்த அந்த பகுதியை ரஷ்ய நிலப்பரப்புடன் இணைக்க சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 19 கிலோமீட்டர் நீள ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை ரஷ்யா கட்டியது. இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்னர் ரஷ்யா தெற்கு உக்ரைனுக்கு இந்த பாலம் மூலமாக படைகளை க்ரைமியாவுக்கு நகர்த்தி அங்கிருந்து தெற்கு உக்ரைனில் உள்ள முன்னனி பகுதிகளுக்கு நகர்த்தி வந்தது, […]

Read More

ரஷ்யாவை நேட்டோ தாக்க வேண்டும் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி !!

October 8, 2022

உக்ரைனிய அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கக்கூடாது அந்த வகையில் நேட்டோ அமைப்பானது ரஷ்யாவை தாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா தாக்குதல் நடத்தும் வரை பொறுமையாக இருந்துவிட்டு பின்னர் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பதை விடவும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை உடன் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பதை பற்றி சிந்தித்தாக வேண்டும் என தெரிவித்தார். இந்த கருத்துக்களை அவர் ஆஸ்திரேலியாவை சேரந்த லோவி அமைப்புக்கு அளித்த உரையில் தெரிவித்தார், இந்த […]

Read More

தங்கள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை பராமரிக்க இந்திய உதவி கோரிய எகிப்து !!

October 8, 2022

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் உலகளாவிய ரீதியில் ரஷ்யாவின் ஆயுத வாடிக்கையாளர்கள் ரஷ்ய ஆயுதங்களை பராமரிக்க திணறி வருகின்றனர். அந்த வகையில் எகிப்திய விமானப்படை தன்னிடம் உள்ள Mi-17 வரிசை ஹெலிகாப்டர்கள் மற்றும் Mig-29M2 ரக போர் விமானங்கள் ஆகியவற்றை பராமரிக்க திண்டாடி வருவதாகவும், ஆகவே தற்போது இந்திய விமானப்படையிடம் அவற்றை பராமரிப்பதற்கான உதிரி பாகங்களை தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவின் HAL இந்த மிக்-29 போர் விமானங்களுக்கான […]

Read More

பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட கூடிய மேலதிக சு30 போர் விமானங்களை பெற விரும்பும் இந்திய விமானப்படை !!

October 8, 2022

இந்திய விமானப்படை விமானத்திலிருந்து ஏவப்படும் Brahmos-A பிரம்மாஸ் ஏ ரக ஏவுகணைகளால் மிகுந்த திருப்தி அடைந்துள்ள நிலையில் அவற்றை சுமக்கும் விமானங்களை அதிகளவில் பெற நாட்டம் காட்டி வருகிறது. ஏற்கனவே தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் உள்ள சுகோய்-30 Su-30MKI படையணியின் 18 போர் விமானங்களும் இத்தகைய பிரம்மாஸ்-ஏ ஏவுகணைகளை சுமக்க கூடியவை ஆகும். தற்போது இந்திய விமானப்படை கூடுதலாக இத்தகைய 20 சுகோய்-30 போர் விமானங்களை பெற விரும்புகிறது, மொத்தமாக தற்போது இத்தகைய 40 விமானங்களை பெற […]

Read More