ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய 10 இந்தியர்கள் நாடு திரும்பினர் !!

  • Tamil Defense
  • April 26, 2024
  • Comments Off on ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய 10 இந்தியர்கள் நாடு திரும்பினர் !!

ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்ய ராணுவத்திற்கு உதவி பணியாளர்கள் தேவைப்படுவதால் வெளிநாட்டு பணியாளர்களை அதற்கு ரஷ்யா வேலைக்கு எடுத்து வந்ததது இதில் சில இந்திர்களும் கலந்து கொண்டு இந்த வேலைக்காக ரஷ்யா சென்றனர். அப்படி சென்றவர்கள் தாங்கள் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கி உள்ளதாகவும் ஆகவே இந்திய அரசு தங்களை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டனர், இது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக சென்ற இவர்களை ரஷ்ய ராணுவம் போர் முனைக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாகவும் அப்படி இரண்டு இந்தியர்கள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு சண்டையில் சிக்கி இறந்ததாகவும், அதே போல தங்களையும் ரஷ்ய ராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாகவும் அவர்கள் வெளியிட்ட காணொளி வாயிலாக தெரிவித்தனர் .

இப்படி வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த ராணுவ உதவியாளர்களுக்கு தகுந்த சண்டை பயிற்சிகள் அளிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது ஆகும். தொடர்ந்து இந்திய அரசு தீவிரமான ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக இந்தியர்களை ரஷ்ய தரப்பு விடுவித்து அனுப்பி வைத்துள்ளது அவர்கள் 10 பேரும் தற்போது நாடு திரும்பி உள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசும்போது தொடர்ந்து இந்திய அரசு ரஷ்ய அரசை வலியுறுத்தி வந்ததாகவும் இதுவரை இந்திய அரசை தொடர்பு கொண்ட அனைவரும் மீட்கப்பட்டு உள்ளதாகவும் இனி வேறு சில இந்தியர்கள் உள்ளதாகவும் அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்

சமீபத்தில் ஜம்மு காஷீமீரின் ஜம்மு பகுதியை சேர்ந்த ஒருவரை மீட்குமாறு அவரது குடும்பத்தினர் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டதின் அடிப்படையில் தற்போது அதற்கான நடவடிக்கைகளை ரஷ்ய வெளியுறவு ராணுவ அமைச்சகங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை 200 இந்தியர்கள் இந்த பணிக்காக ரஷ்யா சென்றுள்ளதாகவும் இந்திய பிரஜைகள் இத்தகைய ஆபத்தான வேலைகளில் சேர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.