பாக்கில் மீண்டும் பயங்கரவாதி கொலை கைவரிசை காட்டிய இந்திய உளவுத்துறை !!
நேற்று பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் உள்ள பாரா எனுமிடத்தில் லஷ்கர் இ இஸ்லாம் எனும் பயங்கரவாத அமைப்பின் தளபதியான ஹாஜி அக்பர் அஃப்ரிடி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டான், இவன் பாகிஸ்தான் உளவுத்துறையான ISI – Inter Services Intelligence உடைய நம்பகமான நபர்களில் ஒருவனும் ஆவான், இந்த சம்பவம் மீண்டும் பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பையும் அச்சத்தையும் பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறை இடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த லஷ்கர் இ இஸ்லாம் அமைப்பு தீவிர மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத கொள்கைகளை அடிப்படையாக கொண்டதாகும் அவ்வப்போது பல சமுதாயத்தினருக்கு மிரட்டல்களை விடுப்பதற்கு பெயர் போன இயக்கமாகவும் விளங்கியுள்ளது குறிப்பாக காஷ்மீரில் காஷ்மீரிய பண்டிட்டுகளை வெளியேறும்படி மிக தீவிரமாக மிரட்டல்களை விடுத்த நிகழ்வுகளும் உண்டு, இப்படி அவர்களை காஷ்மீரில் இருந்து வெளியேற்றியதில் இந்த அமைப்பு மறைமுகமான பங்கு வகித்துள்ளது.
இந்த ஹாஜி அக்பர் அஃப்ரிடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ உடன் வைத்திருந்த தொடர்புகள் பற்றிய தகவல்கள் கசிந்தன கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் மர்ம நபர்களின் ஈடுபாடு உள்ள கொலைகள் இல்லாத சூழல் நிலவிய நிலையில் கடந்த சில வாரங்களில் நடைபெற்ற அத்தகைய இரண்டாவது கொலை இதுவாகும்.
ஆகவே மீண்டும் இந்திய வெளிநாட்டு உளவுத்துறை தனது கைவரிசையை காட்ட துவங்கியுள்ளது பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இடையே பெரும் அச்சத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது, பாகிஸ்தான் ராணுவம் அரசு மற்றும் உளவுத்துறைகள் இத்தகைய கொலைகளை தடுக்க முடியாமல் திணறி வருவதும் இந்திய அரசு மறைமுகமாக இதை செய்வது நாங்கள் தான் என்ற தொனியில் அவ்வப்போது பொதுவெளியில் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.