33% வீழ்ச்சி அடைந்த ஆயுத இறக்குமதி !!

சுவீடனை சேர்ந்த சிப்ரி அமைப்பு தனது வருடாந்திர ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதில் இந்தியாவின் 2011-2020 காலகட்டத்தில் ஆயுத தளவாட இறக்குமதி சுமார் 33% சரிவை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது இந்தியா பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய எடுக்கும் முயற்சிகளுக்கு சான்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டது ரஷ்யா எனவும் அமெரிக்கவுடனான ஆயுத இறக்குமதி 46% வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே தேஜாஸ் போன்ற முக்கிய உள்நாட்டு ஒப்பந்தங்களை செயல்படுத்திய நிலையில்,

விரைவில் சில முக்கிய ஆயுத தளவாட இறக்குமதி ஒப்பந்தங்களையும் செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.