பாதுகாப்பு துறையில் தன்னிறைவு என்ற பிரதமரின் கனவிற்கு தற்போது இந்தியா தயார் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள 101 ஆயுதங்களின் லிஸ்ட் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்டில்லரி ,துப்பாக்கிகள்,கார்வெட் கப்பல்கள்,சோனார் அமைப்புகள்,போக்குவரத்து விமானங்கள்,இலகுரக தாக்கும் வானூர்திகள்,ரேடார்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.