Day: August 9, 2020

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

August 9, 2020

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை தடுத்த வீரர்கள் ஒரு பயங்கரவாதியை வீழ்த்தியுள்ளனர்.மேலும் இரு பயங்கரவாதிகள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகாடி செக்டார் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி நடைபெற்றுள்ளது.சண்டைக்கு பிறகான தேடுதல் வேட்டையின் போது ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு ஏகே துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Read More

நேபாள இராணுவத்திற்கு 10 வென்டிலேட்டர்கள் வழங்கிய இந்திய இராணுவம்

August 9, 2020

இந்திய இராணுவம் பத்து வென்டிலேட்டர் கருவிகளை நேபாள இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.இந்த வென்டிலேட்டர்கள் நேபாள இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் முதற்கொண்டு நேபாளத்திற்கு முதல் குரல் கொடுத்து உதவுவது இந்திய இராணுவம் மட்டுமே.பல இக்கட்டான சூழ்நிலைகளில் இந்திய இராணுவம் நேபாளத்திற்கு உதவி செய்துள்ளது. இந்தியாவின் இந்த செயலை நேபாள இராணுவம் பாராட்டியுள்ளது.

Read More

எதரிகள் மீது தாக்குதல் நடத்த 100 ஆயுதம் தாங்கிய ஹெரோன் ஆளில்லா விமானங்கள்

August 9, 2020

சீனா மற்றும் பாக்கிற்கு எதிரான தாக்கும் சக்தியை அதிகரிக்கும் பொருட்டு சுமார் 100 ஆயுதம் தாங்கிய ஹெரான் ட்ரோன்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது ஒப்புதலுக்காக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ட்ரோன்களில் லேசர் வழிகாட்டு குண்டுகள்,நெடுந்தூர வான்-தரை ஏவுகணைகள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.தற்போது எல்லையில் பிரச்சனை பெரிதாகி வருவதால் இந்த திட்டம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. […]

Read More

தௌலத் பெக் ஓல்டியில் கட்டுமானத்தை அதிகரிக்கும் சீனா-இரவு ஆபரேசன்களுக்காக சின்னூக் அனுப்பி வைப்பு

August 9, 2020

இந்திய சீனா எல்லையில் காரகோரம் அருகே உள்ள கடைசி இந்திய நிலைக்கு அருகே 16000 அடி உயரத்தில் சின்னூக் வானூர்தி இரவு நேர ஆபரேசன்களுக்காக பறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தௌலத் பெக் ஓல்டி பகுதியில் சீன இராணுவம் சாலை மற்றும் மற்ற கட்டுமானங்களை அதிகப்படுத்தி வருகிறது. இங்கு பதற்றத்தை குறைக்க மேஜர் ஜெனரல் தலைமையில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.இரவு நேர ஆபரேசன்களுக்கும் அதிக உயரம் வாய்ந்த பகுதிகளில் பறக்கவும் சின்னூக் ஏற்றதாக உள்ளதால் நம்மால் எளிதாக சிறப்பு படைகளை […]

Read More

இந்திய போர்க்கப்பல்களை கண்காணிக்க சீன ட்ரோன்கள் பெறும் பாக்

August 9, 2020

இந்தியாவிற்கு எதிராக சீனா மற்றும் பாக் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக சீனா சுமார் 100DJI கண்காணிப்பு ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.இந்த ட்ரோன்கள் உதவியுடன் பாக் இந்திய கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா மோதல் காரணமாக இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக அளவிலான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னும் பாகிஸ்தானிற்கு சீனா ட்ரோன்கள் வழங்கியிருந்தாலும் இந்த முறை அதிக அளவில் வழங்கியுள்ளது.

Read More

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு;101 ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்க முடிவு

August 9, 2020

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு என்ற பிரதமரின் கனவிற்கு தற்போது இந்தியா தயார் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 101 ஆயுதங்களின் லிஸ்ட் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டில்லரி ,துப்பாக்கிகள்,கார்வெட் கப்பல்கள்,சோனார் அமைப்புகள்,போக்குவரத்து விமானங்கள்,இலகுரக தாக்கும் வானூர்திகள்,ரேடார்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

சீனாவுக்கு புரிதலை ஏற்படுத்துவது சவாலான பணியாக உள்ளது : வெளியுறவு துறை

August 9, 2020

சீனாவுடன் ஒரு புரிதலை மேற்கொள்வது மிகப் பெரிய சவாலான பணியாக உள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார். இரு நாடுகளும் பல்வேறு வகையிலும் ஒத்துபோனாலும் இரு நாடுகளுக்கு இடையேயான புரிதல் ஏற்படுத்துவது சவாலான பணியாக உள்ளது என அவர் கூறியுள்ளார். இந்திய சீன எல்லைப்பகுதியில் மோதல் போக்கு நீடித்து வரும் வேளையில் இந்த கூற்றை ஜெய்சங்கர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது.

Read More

மீண்டும் மேஜர் ஜெனரல்கள் அளவிலான பேச்சுவார்த்தை-என்ன நடந்தது?

August 9, 2020

சனியன்று மீண்டும் ஒரு முறை இந்திய சீன நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேசியுள்ளனர்.தௌலத் பெக் ஓல்டி மற்றும் தெஸ்பங் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைவிலக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தௌலத் பெக் ஓல்டி பகுதியின் சீன எல்லைக்குள் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.ஐந்தாம் கட்ட கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தையின் போது இந்திய இராணுவம் முழு படைவிலக்கம் […]

Read More