இந்தியாவின் போர் விமான இறக்குமதியை நிறுத்த போகும் தேஜாஸ் !!

  • Tamil Defense
  • January 4, 2021
  • Comments Off on இந்தியாவின் போர் விமான இறக்குமதியை நிறுத்த போகும் தேஜாஸ் !!

1960களில் ஜெர்மானிய வடிவமைப்பின் தாக்கம் அதிகம் இருக்கும் ஹெச்.எஃப் 20 மாருட் போர் விமான தயாரிப்புக்கு பின்னர் இந்தியா தொடங்கிய திட்டம் தான் தேஜாஸ்.

மாருட் விமானம் ஹெ.ஏ.எல் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலும் தேஜாஸ் விமானத்தின் தயாரிப்பு பணிகளை ஏ.டி.ஏ அமைப்பு தான் மேற்கொண்டது.

காலப்போக்கில் தேஜாஸ் திட்டத்தை ஹெச்.ஏ.எல் எடுத்து கொள்ள விரக்தியடைந்த ஏ.டி.ஏ அமைப்பு அடுத்த கட்ட பணிகளை நோக்கி நகர்ந்தது.

தேஜாஸ் மார்க்2 எனப்படும் நடுத்தர எடை போர்விமானம் எனும் திட்டத்தை துவக்கியது, இந்த வகை போர்விமானத்தை கொண்டு இந்திய விமானப்படை தனது மிராஜ்2000 மற்றும் மிக்29 ரக விமானங்களின் இடத்தை நிரப்ப விரும்புகிறது.

அடுத்ததாக ஏ.டி.ஏ இந்திய கடற்படைக்காக விமானந்தாங்கி கப்பல்களில் இருந்த இயங்கும் போர் விமானத்திற்கான பணிகளை துவக்கி உள்ளது, இந்த விமானம் “ரஃபேல் எம்” க்கு நிகரானது அதே நேரம் அதில் 5ஆம் தலைமுறை தொழில்நுட்பங்களும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

மேலும் ஏ.டி.ஏ அமைப்பு ஆம்கா எனப்படும் 5.5 தலைமுறை போர் விமானத்திற்கான பணிகளையும் துவங்கி உள்ளது, இதிலும் மார்க்1 மற்றும் மார்க்2 ஆகிய வடிவங்கள் உண்டு.

இவை அனைத்தும் வெற்றி பெற்றால் 2030க்கு பின்னர் இந்தியா அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு பின்னர் போர் விமான இறக்குமதி இல்லா மூன்றாவது நாடாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.