ஹோவிட்சர்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், UH கடல்சார் ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் ‘மேக்-இன்-இந்தியா’திட்டத்தை நோக்கிய ஒரு பெரிய உந்துதலில், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு வெவ்வேறு ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு ரூ.70,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கடற்படைக்கு 60 மேட்-இன்-இந்தியா UH […]
Read Moreஒரு சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டரின் மகன் சந்தோஷ் குமார் தன் தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற வேட்கையோடு படையில் இணைந்தார்.ஆறு மாத கடும் பயிற்சிக்கு பிறகு அவர் நேரடியாகவே களத்தில் பயங்கரவாதிகளை சந்தித்து ஐந்து பயங்கரவாதிகளில் மூன்று பயங்கரவாதிகளை 2001 நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் போது வீழ்த்தினார். சந்தோஷ்குமார் உத்திரபிரதேசத்தின் காசிப்பூரை சேர்ந்த வீரர்.அவர் டெல்லி நடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் இணைந்த போது அவருக்கு வயது வெறும் 21 தான்.அவருக்கு சண்டையிட செல்லமுடியவில்லையே என வருத்தம் […]
Read Moreஅமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி1-பி லான்சர் சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் “ஜப்பான் கடல்” பகுதியில் நுழைந்தது. இதனையடுத்து ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான மிக்-31 ரக போர் விமானம் ஒன்று அமெரிக்க விமானத்தை வழிமறித்து குறிப்பிட்ட பகுதியில் இருந்து திரும்ப அனுப்பியது. ரஷ்யாவின் அரசு ஊடகமான டாஸ் இதுபற்றி வெளியிட்ட செய்தியில் அமெரிக்க விமானம் ரஷ்ய எல்லையை கடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு இதே போன்று மேற்குறிப்பிட்ட அதே பகுதியில் அமெரிக்க கடற்படை நாசகாரி […]
Read More