6 டிவிஷன்களை சீன எல்லைக்கு நகர்த்தும் இந்தியா !!

May 20, 2022

இந்திய தரைப்படை சுமார் 6 டிவிஷன் அளவிலான படைகளை சீனா உடனான எல்லையோரம் நகர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் வீரர்கள் பாகிஸ்தான் எல்லை மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். ஒரு டிவிஷனில் 15,000 காலாட்படை வீரர்கள் மற்றும் 8000 இதர உதவி படைப்பரிவுகளை சேர்ந்த படை வீரர்கள் என மொத்தமாக 23,000 வீரர்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பஞ்சாபில் இரு பாக் உளவாளிகள் To

May 20, 2022

பஞ்சாபின் அம்ரிஸ்டரில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-க்கு வேலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொல்கத்தாவை சேர்ந்த ஜாபர் ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த முகமது ஷாம்சத் என்ற இருவரை கைது செய்துள்ளன பாதுகாப்பு படைகள். அம்ரிஸ்டரில் உள்ள இராணுவ கன்டோன்மென்ட் மற்றும் விமான படைத் தளம் ஆகியவற்றின் புகைப்படங்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

நேவல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்த கடற்படை

May 19, 2022

சீ கிங் வானூர்தியில் இருந்து DRDO தயாரிப்பு NASM எனப்படும் நேவல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்திய கடற்படை. ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை களத்தில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.சீ கிங் வானூர்தியில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்ட கானொளியும் நமது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://youtube.com/shorts/JDUFmJQW2hA?feature=share

Read More

நாளை கடலில் இறக்கப்படும் இரண்டு புதிய போர் கப்பல்கள் !!

May 16, 2022

மும்பை நகரில் அமைந்துள்ள மஸகான் கப்பல் கட்டுமான தளம் ஸ்கார்பீன் நீர்மூழ்கி, விசாகப்பட்டினம் நாசகாரி மற்றும் நீலகிரி ஃப்ரிகேட் என நாட்டின் மூன்று முன்னனி ரகங்களை சேர்ந்த போர் கப்பல்களை கட்டி வந்தது. இதில் கடைசி ஸ்கார்பீன் சமீபத்தில் படையில் இணைக்கப்பட்ட நிலையில், நாளை விசாகப்பட்டினம் ரக கப்பல் ஒன்றும் நீலகிரி ரக கப்பல் ஒன்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் விழாவில் கடலில் இறக்கப்பட உள்ளன. விசாகப்பட்டினம் ரக நாசகாரி போர் கப்பல்களில் […]

Read More

மொரிஷியஸ் நாட்டில் இந்திய கடற்படை தளத்தில் P8 விமானங்கள் இறங்கும் வசதி சீனாவுக்கு அடுத்த செக் !!

May 16, 2022

இந்தியா மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தனது இருப்பை வலுப்படுத்தும் விதமாக மொரிஷியஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அதாவது மொரிஷியஸ் நிலப்பரப்பில் இருந்து 1100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகலேகா தீவில் மிகப்பெரிய ராணுவ தளம் ஒன்றை கட்டமைத்து வருகிறது. இங்கு ஒரு 10,000 அடி நீள விமான ஒடுபாதை மற்றும் கப்பல்கள் வந்து நிற்க கூடிய தளம், வீரர்களுக்கான தங்கும் வசதிகள் என பெரிய ராணுவ தளம் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவால் கட்டப்பட்டு வருகிறது, […]

Read More

லா ரீயூனியன்: ஃபிரெஞ்சு கடற்படையுடன் இணைந்து கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

May 16, 2022

இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு தான் ரீயூனியன் ஆகும் இது ஃபிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானது மடகாஸ்கர் நாட்டிற்கு கிழக்கே 680 கிலோமீட்டர் தொலைவிலும் மொரிஷியஸ் நாட்டிற்கு தென்மேற்கே 180 கிலோமீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. கடந்த வாரம் மேற்குறிப்பிட்ட தீவில் இருந்து இந்திய கடற்படையும் ஃபிரெஞ்சு கடற்படையும் இணைந்து மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டாக கண்காணிப்பில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்திய கடற்படையின் P8 கடல்சார் தொலைதூர கண்காணிப்பு – […]

Read More

இந்தியாவின் தேஜாஸ் மற்றும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரிப்பு !!

May 16, 2022

சமீபத்தில் இந்தியாவின் HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் PADC – Philippine Aerospace Development Corporation ஃபிலிப்பைன் ஏரோஸ்பேஸ் மேம்பாட்டு கழகம் இடையோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக எதிர்காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான இலகுரக போர் விமானமான LCA TEJAS, இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரான LCH, அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரான ALH Dhruv – த்ரூவ் மற்றும் இலகுரக பயன்பாட்டு […]

Read More

அமெரிக்க ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட BOEING போயிங் நிறுவனத்தின் ஆளில்லா வானூர்தி !!

May 16, 2022

அமெரிக்காவின் BOEING போயிங் நிறுவனம் “Phantom Eye” எனப்படும் ஒரு அதிக உயரத்தில் அதிக நேரம் (HALE – High Altitude High Endurance) பறக்க கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்றை தயாரித்துள்ளது. குறிப்பிட்டு சொன்னால் BOEING நிறுவனத்தின் ஒரு பிரிவான Boeing Phantom Works தான் அமெரிக்க ராணுவத்தின் தொடர்ச்சியான உளவு கண்காணிப்பு தகவல் சேகரிப்பு ஆகிய தேவைகளை சந்திக்கும் வகையில் இதனை வடிவமைத்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆளில்லா வானூர்தி அமெரிக்க கடற்படையின் தகவல்தொடர்பு […]

Read More

இந்திய ராணுவ லாரிகளை வாங்கிய மொராக்கோ !!

May 16, 2022

மொராக்கோ நாட்டின் தரைப்படை இந்திய தயாரிப்பு ராணுவ லாரிகளை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது டாடா குழுமத்தின் (TATA) தயாரிப்பான LPTA-2038 6×6 லாரிகளில் 619 லாரிகளை தற்போது மொராக்கோ தரைப்படை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே 1239 6×6 லாரிகளையும், LPTA – 715 4×4 ரக TATA தயாரிப்பு லாரிகளையும் மொராக்கோ தரைப்படை பயன்படுத்தி வருவது கூடுதல் சிறப்பாகும்.

Read More

பயிற்சியின் போது கரடியால் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் !!

May 13, 2022

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எல்மன்டார்ஃப் ரிச்சர்டஸன் அமெரிக்க கூட்டு ராணுவ தளத்தில் அமெரிக்க தரைப்படையின் பாராசூட் படையினர் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த வீரர்களின் ஒரு சிறு குழு அடர்ந்த காட்டு பகுதியில் போர் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு இருந்த போது கரடி ஒன்று ஒரு வீரரை மிகவும் கொடுரமாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து அலாஸ்கா மாகாண வனத்துறை வீரர்கள் கரடியை பிடிக்க விரைந்துள்ளனர்.

Read More