அண்மை செய்திகள்

பாக்கில் உள்நாட்டு போர் தொடங்கியதா ? கலவரமான கராச்சி !

October 22, 2020

பாக் இராணுவம் அங்குள்ள சிந்து மாகாண காவல்துறை தலைவரை கடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு நிலவரம் பதற்றத்துடன் காணப்படுகிறது. சிந்து காவல் துறை தலைவர் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த பாக் இராணுவ தளபதி நேரடியாகவே இந்த சம்பவத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாக்கின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப்பின் மருமகனை கைது செய்ய கராச்சி காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் விதம் இந்த செயலை பாக் இராணுவம் செய்ததாக கூறப்படுகிறது. […]

Read More

எல்லையில் இந்திய இராணுவத்திடம் பிடிபட்ட சீன வீரர்

October 19, 2020

லடாக் பகுதியின் சுமார்-தெம்சோக் பகுதியில் சீன இராணுவ வீரர் ஒருவரை இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர்.தவறுதலாக அவர் இந்திய இராணுவ எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய இராணுவம் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. உளவு பார்க்கும் நோக்கில் வந்தாரா அல்லது வழிதவறி வந்தாரா என்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read More

சீன எல்லையில் ஏழு இடங்களில் எல்லையை கடந்த இந்திய இராணுவம்

October 17, 2020

இந்திய சீன எல்லையான LAC-ல் இந்திய இராணுவம் ஏழு இடங்களில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கு பதிலடியாக இந்திய இராணுவமும் ஏழு இடங்களில் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா இந்தியாவுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இதுவே காரணம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இந்தியா எடுத்த ஆக்சன் காரணமாகவே சீனா பேச்சுவார்த்தைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்கோங் ஏரியில் இந்தியா ஆக்கிரமித்த மலைப் பகுதியில் இருந்து இந்தியா வெளியேற மறுத்து விட்டது.மேலும் […]

Read More

பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை

October 17, 2020

250கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க வல்ல பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடலோர பகுதியில் உள்ள பாலசோர் தீவில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை நமது டிஆர்டிஓ மேம்படுத்தியது ஆகும். ஏற்கனவே இந்த ஏவுகணை நமது Strategic Forces Command-ல் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்க்க வல்ல ருத்ரம் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்தில் இந்த பிரித்வி-2 ஏவுகணையை […]

Read More

காஷ்மீரில் ஒரு பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

October 17, 2020

காஷ்மீரின் அனந்தநாக்கில் நடைபெற்று வரும் சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.இன்று அதிகாலை இந்த என்கௌன்டர் தொடங்கியது. ஆபரேசன் லார்னூ எனும் பெயரில் இந்த என்கௌன்டர் நடத்தப்பட்டுள்ளது. ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.அவனிடமிருந்து ஒரு ஏகே துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது.

Read More

சரணடைந்த பயங்கரவாதி; வீரர்கள் காலில் விழுந்த தந்தை

October 17, 2020

வெள்ளியன்று பாதுகாப்பு படைகள் என்கௌன்டர் வீடியோ ஒன்று வெளியிட்டன.அதில் ஒரு பயங்கரவாதி வீரர்கள் முன்னிலையில் சரணடைவது பதிவு செய்யப்பட்டிருந்தது. “ஜகாங்கீர் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்துவிடு.நீ மறைந்திருக்கும் இடத்தை நாங்கள் சுற்றிவளைத்துவிட்டோம்.உனக்கு எதும் நேராது என உறுதியளிக்கிறோம்” என ஒரு வீரர் பயங்கரவாதியை சரணடைய கூறுவார். உங்கள் குடும்பத்திற்காகவாது சரணடைந்து விடு என வீரர் மறுபடியும் கூறுவார்.ஜகாங்கீர் தனது மறைவிடத்தை விட்டு ட்ரௌசருடன் வெளிவருவது தெரிந்த பிறகு அங்கு வேறு யாரும் உள்ளனரா என வீரர் ஒருவர் கேட்பார். […]

Read More

நவம்பரில் படையில் இணையும் நான்கு ரபேல் விமானங்கள்

October 16, 2020

எல்லை மோதல் நடைபெற்று வரும் வேளையில் இந்தியா ரபேல் விமானங்களை படையில் இணைத்து வருகிறது.ஏற்கனவே ஐந்து விமானங்கள் படையில் இணைக்கப்பட்டுள்ள வேளையில் வரும் நவம்பர் மாதம் மேலும் நான்கு விமானங்கள் படையில் இணைக்கப்பட உள்ளது. மேலும் படையில் புதிய விமானங்கள் இணைக்கப்பட்ட சில நாட்களிலேயே அவை நடவடிக்கைகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.இந்த நான்கு விமானங்களும் படையில் இணையும் பட்சத்தில் இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 9ஆக உயரும். இந்த விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு […]

Read More

இரு தாக்குதலில் 20 பாக் வீரர்கள் உயிரிழப்பு

October 16, 2020

பாக்கின் குவாதர் மற்றும் கைபர் பக்துன்வா பகுதியில் பாக் படைகள் மீது நடைபெற்ற இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 20 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாக்கின் வடக்கு வசிரிஸ்தானின் ராஸ்மக் பகுதியில் பாக் படைகள் மீது பலுசிஸ்தான் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் குறைந்தது 6 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொரு தாக்குதலில் பாக் வீரர்கள் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 14 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Read More

பிரான்சில் விமானப்படை குழு-மேலும் ரபேல் விமானங்கள் இணைக்க திட்டம்

October 15, 2020

இந்தியா இரண்டாவது தொகுதி ரபேல் விமானங்களை படையில் இணைக்க தயாராகி வரும் வேளையில் இந்திய விமானப்படை குழு ஒன்றை பிரான்சிற்கு அனுப்பியுள்ளது.இந்த குழு அங்கு பயிற்சி பெறும் இந்திய விமானிகள் குழுவை சந்தித்து பேசியுள்ளது. அடுத்த நான்கு வாரங்களில் இரண்டாம் தொகுதி ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளது.தற்போது முதல் தொகுதி ஐந்து விமானங்கள் வெற்றிகரமாக படையில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதலே பல இந்திய விமானப்படை குழு பிரான்ஸ் சென்று ரபேல் புரோஜெக்ட் குறித்து கேட்டறிந்து […]

Read More

பாக் படைகள் மீது பலுசிஸ்தான் பேராளிகள் தாக்குதல்-12 வீரர்கள் உயிரிழப்பு

October 15, 2020

பாக்கின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாக் படைகள் மீது பலுசிஸ்தான் போராளிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் குறைந்தது 12 பாக் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக் வீரர்கள் ரோந்து பணியில் இருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ செய்தி பிரிவு கூறியுள்ளது.

Read More