அண்மை செய்திகள்

இந்த ஆண்டு ஒரு போர்க்கப்பல் மற்றும் அடுத்த ஆண்டு மீதமுள்ள S-400 டெலிவரி செய்ய உள்ள ரஷ்யா !!

April 24, 2024

ரஷ்யா விரைவில் இந்தியாவுக்கு ஒரு போர் கப்பலையும் அடுத்த ஆண்டு இந்தியா ஆர்டர் செய்த மீதமுள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளையும் டெலிவரி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இவை இந்திய படைகளில் இணையும் போது கடல்சார் பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை இவற்றின் டெலிவரியை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய […]

Read More

பிரம்மாஸ் டெலிவரிக்கு முன்னதாக ஃபிலிப்பைன்ஸை ஒட்டி பறந்த சீன கண்காணிப்பு ட்ரோன் !!

April 22, 2024

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்தது, இந்த டெலிவரிக்கு ஃபிலிப்பைன்ஸ் தயாராகி கொண்டிருக்கும் போதே மேற்கு ஃபிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ராஃபி டிமா எனும் ஊடகவியலாளர் பார்வையில் பறந்து கொண்டிருந்த சீன ராணுவத்தின் WZ-7 ரக கண்காணிப்பு ட்ரோன் பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன, இந்த ட்ரோன் பறந்து கொண்டிருந்த பகுதி தென்சீன கடல்பகுதிக்கு உட்பட்ட வடமேற்கு ஃபிலிப்பைன்ஸிற்கு அருகேயான பகுதியாகும். மேற்குறிப்பிட்ட […]

Read More

சண்டையின் போது போர் கப்பலில் ஏற்பட்ட கோளாறு மறைத்த டென்மார்க் முப்படை தளபதி டிஸ்மிஸ் !!

April 8, 2024

டென்மார்க் கடற்படையின் HDMS IVER HUIDETFIELD ஐவர் ஹூயிட்ஃபெல்ட் வான் பாதுகாப்பு ஃப்ரிகேட் ரக போர் கப்பல் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு குழுவின் ஒரு அங்கமாக கடல்சார் வணிகத்தை பாதுகாக்க செங்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் 9ஆம தேதி ஏமன் ஹூத்தி பயங்கரவாதிகள் ஏவிய நான்கு ட்ரோன்களை கண்டறிந்த மேற்குறிப்பிட்ட கப்பலின் குழுவினர் உடனடியாக அவற்றை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கைகளை துவங்கினர் ஆனால் அப்போது கப்பலின் பல்வேறு அமைப்புகளில் கோளாறுகள் ஏற்பட்டன. […]

Read More

முதல்முறையாக சுமார் 21,000 கோடியை கடந்த இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி !!

April 7, 2024

இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2023-2024 நிதியாண்டில் சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன மேலும் இது கடந்த ஆண்டை விட சுமார் 32.5 மடங்கு அதிகம் என்ற தகவலும் வெளியாகி உள்ளன, மேலும் கடந்த பத்தாண்டுகளில் இது சுமார் 31 முறை வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஏற்றுமதியில் தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 60 சதவிகிதம் அளவுக்கு பங்களிப்பு செய்துள்ளன அரசு […]

Read More

இந்தியாவில் முதல்முறையாக இங்கிலாந்து கடற்படை கப்பல்களின் பராமரிப்பு !!

April 6, 2024

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னை அருகே அமைந்துள்ள Larsen & Toubro லார்சென் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் காட்டுபள்ளி கப்பல் கட்டுமான தளத்திற்கு இங்கிலாந்து கடற்படையின் ஒரு பிரிவான RFA- Royal Fleet Auxillary அதாவது உதவி கப்பல்கள் படைப்பிரிவை சேர்ந்த இரண்டு கப்பல்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்தடைந்தன. RFA ARGUS ஆர்கஸ் மருத்துவ வசதிகள் மற்றும் வான் நடவடிக்கை ஆதரவு கப்பலாகும் (Primary Casualty Evacuation & Aviation Support) மற்றும் RFA […]

Read More

சிரிய தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் மிக மூத்த ஈரானிய அதிகாரிகள் மரணம் !!

April 6, 2024

சீரிய தலைநகர் டமாஸ்கஸில் ஈரானிய தூதரகம் மற்றும் கனேடிய தூதரகம் இடையே அமைந்துள்ள ஒரு கட்டிடத்தை சரமாரியாக திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் குண்டுவீசி தாக்கியது, மாஸ்ஸேஹ் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்த கட்டிடம் இந்த தாக்குதலில் முற்றிலும் அழிக்கப்பட்டு தரைமட்டமாகி உள்ளது. இதில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர், அவர்களில் 8 ஈரானியர்கள், 2 சீரியர்கள் மற்றும் 1 லெபனானியர் அடங்குவர் மேலும் கொல்லப்பட்ட ஈரானியர்களில் இதில் ஈரானின் குத்ஸ் படையின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் […]

Read More

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக மற்றொரு புதிய கூட்டணி ??

April 4, 2024

ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒன்றினைந்து இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளுடன் புதிய பாதுகாப்பு கூட்டுறவை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக ஜப்பானிய ஊடகமான க்யோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஐந்து நாடுகளும் மேற்குறிப்பிட்ட புதிய ஒப்பந்தத்தின்படி இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் கூட்டு ராணுவ பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை பன்மடங்கு அதிகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுபயணமாக செல்லும் ஜப்பானிய பிரதமர் […]

Read More

சென்னையில் போதையில் பொதுமக்களை அரை நிர்வாணமாக கடிக்க பாயந்த இங்கிலாந்து கடற்படை வீரர் !!

April 3, 2024

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு வெளிநாட்டு இளைஞர் போதை தலைக்கேறிய நிலையில் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தும் அடிக்கவும் கடிக்கவும் பாய்ந்தார் இந்த சம்பவத்தால் ராயபேட்டை பகுதியில் சற்று நேரத்திற்கு பெரும் பதட்டம் பரவியது, முதலில் இவர் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி என செய்திகள் வெளியாகின தற்போது இவர் இங்கிலாந்து கடற்படை வீரர் என தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னை […]

Read More

உலகின் மிகப்பெரிய விமானப்படையான அமெரிக்காவை பின்தள்ளும் சீனா ??

April 3, 2024

சமீபத்தில் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏற்கனவே சீன கடற்படை அதிக கப்பல்கள் மற்றும் கலன்களை கொண்டுள்ளதால் அமெரிக்காவை பின்தள்ளி உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருமாற்றம் அடைந்த நிலையில் தற்போது அமெரிக்க விமானப்படையை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய விமானப்படையாக உருவெடுக்க உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் தளபதியான அட்மிரல் ஜாண் சி அக்கிலினோ கடந்த மார்ச் 21ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் பாராளுமன்ற கமிட்டியின் முன்பு […]

Read More

அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றிய சீனா – தீவிரமாகும் பிரச்சனை

April 1, 2024

இந்தியா சீனா இடையே ஏற்கனவே உள்ள பிரச்சனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது அருணாச்சல பிரதேசத்தின் பெயரை சீனா மாற்றி வரைபடம் வெளியிட்டுள்ளது.திபத்தின் ஒரு பகுதி தான் அருணாச்சல பிரதேசம் என ஏற்கனவே சீனா கூறி வரும் நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தின் பெயரையும் சீனா மாற்றி வெளியிட்டுள்ளது. ” ஷாங்கான்” என அருணாச்சலை பெயர் மாற்றம் செய்துள்ளதை அடுத்து எல்லைப் பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயரையும் மாற்றி வெளியிட்டுள்ளது.ஆனால் இந்தியா தொடர்ந்து சீனாவின் இந்த செயல்பாட்டிற்கு […]

Read More