1 min read

6 லட்சம் கோடி -இந்திய வரலாற்றில் பிரமாண்ட பாதுகாப்பு பட்ஜெட் ??

2021ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் தீவிரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்த 5 ஆண்டுகளில் தன்னிறைவு எனும் இலக்கை நோக்கி பாதுகாப்பு படைகள் பயணிக்க உள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. ஆகவே பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 85.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 6லட்சம் கோடி ருபாய்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் நமது பாதுகாப்பு பட்ஜெட் 3.37 லட்சம் கோடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 min read

சீனா பாகிஸ்தான் இணை இந்தியாவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தல் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே பேட்டி !!

இந்திய தரைப்படை தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதையொட்டி தலைநகர் தில்லியில் தரைப்படை தளபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே, “சீனா பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான மற்றும் பிற ஒத்துழைப்புகள் பெரிய அளவில் அதிகரித்து உள்ளதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாக பயன்படுத்தி வருவதாகவும் அதை இந்தியா சமாளிக்கும் எனவும் கூறினார். மேலும் பேசுகையில் […]

1 min read

91ஆவது கே9 வஜ்ரா டெலிவரி அசத்தும் L&T !!

குஜராத் மாநிலம் ஹசீரா பகுதியில் அமைந்துள்ள லார்சன் டுப்ரோ தொழிற்சாலையில் K9 வஜ்ரா தயாரிக்கபட்டு வருகின்றன. சில நாட்கள் முன்னர் தரைப்படைக்கான 91ஆவது K9 வஜ்ரா தயாரித்து ஒப்படைக்கப்பட்டது. இந்த கே9 வஜ்ராக்கள் பாலைவன சூழல்களில் திறம்பட இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 min read

அத்துமீறி நுழைந்த 6 பாகிஸ்தான் இளைஞர்கள் பாக். இடம் மீண்டும் ஒப்படைப்பு !!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் பஞ்சாப் மாநில எல்லை வழியாக ஊடுருவ முயன்றனர். அப்போது அவர்களை நமது எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்து சோதனையிட்டு விசாரித்தனர். பின்னர் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகளோ பொருட்களோ இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் பாக் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1 min read

50%க்கும் அதிகமான இந்திய ராணுவ வீரர்கள் தீவிர மன உளைச்சலால் பாதிப்பு !!

யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய பாதுகாப்பு படையினரின் நலன்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். இந்த அமைப்பு சார்பில் கர்னல் ஏ.கே. மோர் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்திய ராணுவ வீரர்களில் 50% க்கும் அதிகமானோர் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக பயங்கரவாத எதிர்ப்பு போரில் பங்கெடுப்பது, குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது, பொருளாதார மற்றும் குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவை […]

1 min read

லடாக்கில் சீன ராணுவ வீரர் கைது !!

லடாக்கின் சுஷூல் செக்டாரில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய வீரர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணைக்கு பின்னர் அவரை சீன ராணுவத்திடம் ஒப்படைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இப்படி பிடிபட்ட சீன வீரர் விசாரணைக்கு பின்னர் சீன படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 min read

பாக்கிற்கு உளவு பார்த்த முன்னாள் இராணுவ வீரர்-கைது செய்த பாதுகாப்பு படை

பாக்கின் உளவு நிறுவனத்திற்கு முக்கியமாக தகவல்களை பகிர்ந்ததாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கராச்சியில் உள்ள ஒருவருக்கு முன்னாள் இராணுவ வீரர் சௌரப் சர்மா என்பவர் முக்கியத் தகவல்கள் அனுப்புவதாக லக்னோவில் உள்ள இராணுவ உளவுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் ஆபரேசன் க்ராஸ் கனெக்சன் என்னும் பெயரில் அவரை இராணுவ உளவுப் பிரிவு கண்காணிக்க தொடங்கியுள்ளது.கடந்த நான்கு வருடங்களாக அவர் பாக் உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது பின்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீன் […]

1 min read

காஷ்மீரில் சுமார் 3கிமீ தூரம் பனியில் சுமந்து சென்று தாயையும் சேயையும் வீட்டில் சேர்த்த ராணுவத்தினர் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் துனிவார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பஸல்போரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்தார். இதையடுத்து ராணுவத்தினர் பஸல்போராவில் இருந்து துனிவார் வரை சுமார் 3.5 கிமீ அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் சுமந்து சென்று பத்திரமாக வீடு சேர்த்தனர்.

1 min read

ராஜஸ்தானில் பயிற்சியின் போது பாரா சிறப்பு படை அதிகாரி மரணம் !!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய தரைப்படையின் சிறப்பு படையின் 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன் இயங்கி வருகிறது. இங்கு 10ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் பாலைவனம், நீர்நிலைகளில் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது 4 வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கெய்லானா ஏரியில் குதித்தனர். மூன்று வீரர்கள் வெளிவந்த நிலையில் நான்காவதாக குதித்த கேப்டன் பதவி வகிக்கும் அதிகாரி மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணி […]

1 min read

பிரம்மாஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள் ஏற்றுமதிக்கான நாடுகளின் பட்டியல் !! 

இந்தியா சமீப காலமாக தனது ஆயுத தேவையை உள்நாட்டு தயாரிப்புகளை கொண்டு பூர்த்தி செய்வதிலும், அந்த தளவாடங்களை ஏற்றுமதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் பிரம்மாஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான நாடுகளின் பட்டியலை தயாரித்து உள்ளது. பிரம்மாஸ்: ஃபிலிப்பைன்ஸ் மிக நீண்ட காலமாகவே ஆர்வம் காட்டி வந்த நிலையில் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதை தவிர இந்தோனேசியா வியட்நாம் ஐக்கிய அரபு அமீரகம் […]