Author: Tamil Defense

இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினால் பணையக் கைதிகளை ஒவ்வொருவராக கொல்வோம்-ஹமாஸ் கடும் எச்சரிக்கை

October 10, 2023

இஸ்ரேல் காசாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணைய கைதிகளை ஒவ்வொருவராக கொள்வோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சனி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகின்றன. கமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் காசாவிற்கு செல்லும் குடிநீர் சப்ளை உணவு மற்றும் […]

Read More

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த 300 இஸ்ரேலியர்கள்; காசா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

October 8, 2023

சனி அன்று காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத குழு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இதனை அடுத்து காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மறைந்துள்ள இடங்களை தரைமட்டமாக்குவோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 232 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் இஸ்ரேலின் 22 இடங்களில் இஸ்ரேல் மற்றும் கமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல் நீடித்துள்ளது. இதில் குறைந்தது […]

Read More

இஸ்ரேல்- காசா மோதல் தற்போதைய நிலவரம் என்ன ? முழு தகவல்கள்

October 8, 2023

இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்களை ஏவியும் கடல் தரை மற்றும் வான் வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்தும் காசா மீது போர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அங்குள்ள ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இது தொடர்பான காணொளிகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது காசாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தரைவழியாக […]

Read More

பஞ்சாபில் MRSAM வான் பாதுகாப்பு அமைப்பை களம் இறக்கிய இந்தியா- காரணம் என்ன?

October 8, 2023

இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணை (MRSAM) அமைப்பை பஞ்சாபின் அடம்பூர் பகுதியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி உள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் டி ஆர் டி ஓ மற்றும் இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி நிறுவனத்தால் இணைந்து மேம்படுத்தப்பட்டதாகும். வானில் வரும் எதிரியின் இலக்குகளை வானிலேயே தாக்கி அழிக்கும் திறன் பெற்றது இந்த ஏவுகணை அமைப்பு. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ் 400 வான் […]

Read More

என்ன நடக்கிறது இஸ்ரேலில்? தற்போதைய நிலவரங்கள்

October 7, 2023

பாலஸ்தீனியர்கள் இன்று இஸ்ரேல் மீது ஐந்தாயிரம் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். 50 முதல் 60 ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் பாரா கிளைடிங் வாகனங்கள் உதவியுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்குப் பிறகு இஸ்ரேல் தேசிய நெருக்கடி அறிவித்து போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வெறும் மோதல் அல்ல இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட போர் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு கூறியுள்ளார். […]

Read More

பிரான்ஸ் செல்லும் பாதுகாப்பு துறை அமைச்சர் நீர்மூழ்கிகள் வாங்கத் திட்டமா ?

October 7, 2023

அரசு முறை பயணமாக அடுத்த வாரம் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து பல்வேறு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படுவது குறித்து வெளியான தகவலை அடுத்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து வானூர்தி எஞ்சின் மற்றும் போர் விமானங்கள் இணைந்து தயாரிக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. பிரான்சை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் இத்தாலி நாட்டிற்கும் பயணம் செய்ய உள்ளார் […]

Read More

இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்துவோம்- பென்டகன் உறுதி

October 7, 2023

இந்தியா உடனான பாதுகாப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்துவோம் என பென்டகன் கடந்த வெள்ளி அன்று கூறியுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்தியா உடனான அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பென்டகன் கூறியுள்ளது. 1997 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி உறவு ஏதும் இன்றி இருந்தது. ஆனால் தற்போது 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் ஏற்றுமதி இறக்குமதி வளர்ந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் இந்தோ பசிபிக் […]

Read More

பாகிஸ்தான் அணு ஆயுத தளத்தில் விபத்தா? வெளியான முக்கிய தகவல்கள்!!

October 6, 2023

பாகிஸ்தானின் அணு ஆயுத துறை அமைந்துள்ள டி ஜி கான் எனும் இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வெடி விபத்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பலுசிஸ்தான் மற்றும் கைபர் பத்துன்னுவா எனும் இரு இடத்திலும் ஏற்பட்ட விபத்தில் 65 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு மிகக் குறைந்த நேரத்திலேயே இந்த டிஜி கான் எனும் இடத்திலும் விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Read More

மேலும் 40 C-295M போக்குவரத்து விமானங்கள் வாங்க உள்ள இந்தியா ?

October 6, 2023

இந்திய விமானப்படை தனது போக்குவரத்து பிரிவை தற்போது வலுப்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 சி-295 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது. மேலும் இந்த விமானங்களை இந்தியாவின் டாட்டா நிறுவனம் மற்றும் ஏர்பஸ் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ளன.மொத்தமாக 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். தற்போது பாதுகாப்புத் துறையில் இருந்து வெளிவரும் செய்திகள் மூலமாக இந்தியா மேலும் 40 […]

Read More

ஏழு பில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட உள்ள சுகாய் விமானங்கள்

October 5, 2023

இந்திய விமானப்படையில் உள்ள சுகாய் விமானங்களை 7 பில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக விமானப்படை கூறி உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுகாய் விமானங்களுக்கு புதிய அதி நவீன தொழில்நுட்பங்கள் ரேடார்கள் மற்றும் ஏவியானிக்ஸ் பொருத்தப்படும். தற்பொழுது இந்திய விமானப்படையில் 272 சுகாய் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் விமானப் படையின் முதுகெலும்பாக உள்ளன. தற்போது இந்த விமானங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வந்தாலும் நவீன போர் முறைக்கு ஏற்றவாறு இந்த விமானங்களை மேம்படுத்துவது அவசியமாகும். தற்போது […]

Read More