Author: Tamil Defense

லடாக்கில் புதிய போர்பயிற்சியை மேற்கொண்ட இராணுவ வீரர்கள்

June 29, 2022

இந்திய இராணுவம் லடாக்கில் ஒரு புதிய பயிற்சியை மேற்கொண்டுள்ளது.பிலிட்ஸ்கிரீக் எனப்படும் இந்த முறையானது எதிரிகளை அதிகவேகமாக தாக்கும் முறையாகும்.இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாசி ஜெர்மனி பயன்படுத்திய வெற்றிகரமான முறையாகும். கடந்த வாரம் ஐந்து நாள் வடக்கு கட்டளையக தளபதி லெப் ஜென் உபேந்திர திவேதி அவர்கள் லடாக்கில் இருந்த போது இந்த பயிற்சியினை அவர் மேற்பார்வையிட்டார்.நாசி ஜெர்மனியின் பிலிட்ஸ்கிரீக் முறையானது அதிவேக மின்னல் தாக்குதல் நடத்துவது தான்.தாக்கும் பிரிவில் பல விதமான இராணுவ படைப்பிரிவுகள் இருக்கும்.அதாவது […]

Read More

7வது நீலகிரி ரக ஸ்டீல்த் பிரைகேட் கப்பல் தயாரிப்பு ஆரம்பம்

June 29, 2022

புரோஜெக்ட் பி17ஏ திட்டத்தின் கீழ் இந்தியா நீலரிகி ரக பிரைகேட் கப்பல்களை கட்டி வருகிறது.இந்த கப்பல்களின் வரிசையில் ஏழாவது கப்பலுக்காக ஆரம்ப பணிகள்(Y- 12654) ஜீன் 28 அன்று தொடங்கப்பட்டது. ரியர் அட்மிரல் ஹரிஸ் அவர்கள் இந்த விழாவை தொடங்கி வைத்தார்.மசகான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்திய கடற்படை மற்றும் மசகான் கப்பல் கட்டும் தளத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. நீலகிரி ரக பிரைகேட் கப்பல்கள் […]

Read More

லேசர் வழிகாட்டு டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை- முழுத் தகவல்கள்

June 28, 2022

இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள லேசர் வழிகாட்டு டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.அர்ஜீன் டேங்கில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது இலக்கை மிகத்துல்லியமாக தாக்கியது. சோதனையின் போது ஏவுகணை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது மற்றும் அதன் அனைத்து உட்அமைப்புகளும் திருப்திகரமாக செயல்பட்டுள்ளது.ERA எனப்படும் Explosive Reactive Armour (வெடிப்பை தாங்கும் கவசம் ) பொறுத்தப்பட்ட டேங்கை தாக்க இந்த ஏவுகணையில் tandem High Explosive Anti-Tank (HEAT) வெடிபொருள் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு ஏவு அமைப்புகளில் இருந்து […]

Read More

எகிப்து நாட்டிற்கு தேஜஸ் விமானங்களை விற்க திட்டம்

June 27, 2022

இந்தியா எகிப்து நாட்டிற்கு தனது தேஜஸ் விமானங்களை விற்க முன்வந்துள்ளது. 70 தேஜஸ் LCA-LIFT விமானங்களை இந்தியா எகிப்து நாட்டிற்கு விற்க முன்வந்துள்ளது. எகிப்து தனது சீன தயாரிப்பு K-8E பயிற்சி விமானத்தை படையில் இருந்து நீக்கி அதற்கு பதிலாக புதிய விமானங்களை வாங்க உள்ளது.இந்த திட்டத்திற்கு தான் இந்தியா தற்போது தனது தேஜஸ் விமானங்களை அளிக்க முன்வந்துள்ளது.கிட்டத்தட்ட 70 தேஜஸ் lead-in fighter training (LIFT) விமானங்களை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. மேலும் இந்த விமானங்களை […]

Read More

வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுகிறதா இராணுவமா ?

June 26, 2022

பாதுகாப்பு படைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் தற்போது அக்னிபாத் என்னும் திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது.இதன் நோக்கம் சிறிய ஆனால் வலிமைமிகு படையை உருவாக்குவது என கூறப்படுகிறது.இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்களும் நடைபெறுவதை நாம் அறிவோம். அக்னிபாத் திட்டத்தின் நேரடி நோக்கம் குறித்து தெளிவாக அறியப்படவில்லை எனினும் ஓய்வூதியம் மற்றும் சம்பளங்களை குறைத்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை இராணுவ தளவாடங்கள் வாங்க பயன்படுத்தலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இதன் நீண்ட காலத் திட்டம் […]

Read More

இந்தோனேசியா செல்லும் கடற்படை தளபதி- புதிய தளவாடங்கள் வாங்க உள்ளதா இந்தோனேசியா ?

June 26, 2022

இந்த வருடத்தில் இந்திய கடற்படை தளபதி இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குவாட் நாடுகள் எனப்படும் இந்தியா , அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆசியன் நாடுகளுடன் மிக நெருங்கிய உறவை பேண முயற்சித்து வருகின்றன.இதன் பகுதியாக தான் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமாரின் இந்த இரு நாட்டு பயணங்கள் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான தேதிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டு வரும் நிலையில் […]

Read More

வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை செய்த இந்திய கடற்படை

June 25, 2022

இந்திய கடற்படை செங்குத்தாக ஏவப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணை ஒன்றை இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. மாக் 4.5 வேகம் செல்லக்கூடிய 60கிமீ தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய Vertical Launch Short Range Surface to Air Missile (VL-SRSAM) ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையோரம் சோதனை செய்துள்ளது.இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள அஸ்திரா வான்-வான் ஏவுகணை அடிப்படையாக கொண்டு இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இதே போன்ற பாரக் 8 ஏவுகணை மேம்படுத்தி […]

Read More

நடுவானில் எரிபொருள் நிரப்பி உதவி செய்த UAE விமானப்படை- நன்றி தெரிவித்த IAF

June 25, 2022

எகிப்து நாட்டுடன் விமானப்பயிற்சி மேற்கொள்ள இந்திய விமானப்படையின் சுகாய் விமானங்கள் எகிப்து பறந்தன.அவ்வாறு செல்லும் வழியில் ஆறு மணி நேர இடைவிடாத பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரக நாட்டின் விமானப்படை விமானம் நமது சுகாய் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியது.இதற்கு இந்திய விமானப்படையும் தனது நன்றியினை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டின் MRTT விமானங்கள் சுகாய் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பி உதவியுள்ளன. மேலும் விமானப்படை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இரு அருமையான […]

Read More

மேம்படுத்தப்பட்ட கெஸ்ட்ரால் கவச வாகனம் படையில் இணைப்பு

June 25, 2022

டாடா தயாரிப்பு மேம்படுத்தப்பட்ட டாடா கெஸ்ட்ரால் இன்பான்ட்ரி காம்பட் வாகனம் இந்திய இராணுவத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மிக எளிதாக இயக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த வாகனத்தில் இருந்து 1800மீ தொலைவு வரை பார்க்க முடியும். இந்த வாகனத்தின் மேற்புறம் பொருத்தப்பட்டுள்ள ஆயுதங்களை வாகனத்தின் உட்புறம் இருந்தே இயக்க முடியும் என வடக்கு இராணுவ கட்டளையகத்தின் கமாண்டர் லெப் ஜென் உபேந்திர டிவிவேதி அவர்கள் கூறியுள்ளார்.

Read More

இந்திய இராணுவ தளவாடங்களை வாங்குகிறா ஆர்மீனியா ?

June 25, 2022

இந்தியாவிடம் உள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் குறித்து அறிய அர்மேனிய நாட்டு இராணுவ குழு இந்தியா வந்துள்ளது. இந்தியா வந்த ஆர்மேனிய இராணுவ குழுவிற்கு இந்திய தனியார் நிறுவனங்கள் இந்திய பாதுகாப்பு படைகளுக்காக மேம்படுத்திய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் குறித்து விவரிக்கப்பட்டது. soft kill option மற்றும் ட்ரோனின் சிக்னலை ஜாம் செய்வது என இருவகை திறனும் கொண்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. இது தவிர இந்திய நிறுவனமான Tonbo Imaging நிறுவனம் […]

Read More