Author: Jecinth Albert

ஹாங்காங் அடக்குமுறை விஷயத்தில் சீனாவுக்கு முழு ஆதரவு : நேபாள அரசு !!

June 4, 2020

சமீப காலமாக நேபாள அரசு சீன ஆதரவு நிலைபாட்டுடன் செயல்பட்டு வருவது தெரிந்தது தான், ஆனால் தற்போது இந்த ஆதரவு நிலையை நேபாளம் மிகவும் தீவிரப்படுத்தி கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹாங்காங் பகுதியை அடக்குமுறை மூலமாக ஒருங்கிணைக்க சீனா முயன்று வருகிறது இதற்கு நேபாளம் முழுமையாக ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், தைவான் உட்பட பல சர்வதேச நாடுகள் இதற்கு எதிராக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேபாளம் சீனாவுக்கு ஆதரவு […]

Read More

கல்வான் நாலா பகுதியில் இருந்து பின்வாங்கிய சீன படையினர்; ஜூன் 6 இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை !!

June 4, 2020

இந்தியா மற்றும் சீனா இடையே சுமார் 1 மாத காலமாக லடாக்கில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் நேற்று கல்வான் நாலா பகுதியில் இருந்து சீன படையினர் பின்வாங்கி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 6ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவங்களின் சார்பில் லெஃப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்வு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. லடாக்கில் சம அளவில் படைகளை குவித்துள்ள இரு […]

Read More

விண்வெளி படைப்பிரிவை உருவாக்கிய ஜப்பான் !!

June 4, 2020

கடந்த மே 18 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டாரோ கானோ தலைமையில் விண்வெளி படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பிரிவு டோக்கியோ அருகே உள்ள ஜப்பானிய விமானப்படையின் ஃப்யூச்சி விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும். தற்போது இப்பிரிவில் 20வீரர்கள் உள்ளனர். 2023ஆம் ஆண்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது 100 வீரர்கள் இப்பிரிவில் இருப்பர் என கூறப்படுகிறது. 16,000 வீரர்கள் கொண்ட அமெரிக்காவின் விண்வெளி படையை போன்று தனி ராணுவ படைப்பிரிவாக இயங்காமல் […]

Read More

காஷ்மீரில் அதிரடி: 2019 புல்வாமா தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி கொலை, பழிதீர்த்த பாதுகாப்பு படையினர் !!

June 3, 2020

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அஸ்தான் மொஹல்லா பகுதியில் உள்ள கங்கான் கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற என்கவுன்டரில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அவனது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் எனும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதி இஸ்மாயில் ஆல்வி என்பவன் ஜெய்ஷ் இ மொஹம்மது இயக்க தலைவன் மசூத் ஆசாரின் மருமகன் ஆவான், இவனுக்கு புல்வாமா தாக்குதலில் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவனுடன் கடந்த 2017ஆம் […]

Read More

இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க உள்நாட்டு தயாரிப்பில் அதிநவீன ஏவுகணை !!

June 3, 2020

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் புதிய ஏவுகணை ஒன்றை தயாரித்து வருகிறது. இந்த புதிய ஏவுகணை ஏற்கனவே படையில் உள்ள அஸ்திரா ஏவுகணையின் புதிய வடிவமாகும். இந்த புதிய ஏவுகணை அஸ்திரா மார்க் 2 என அழைக்கப்படலாம், மேலும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாராகும் இந்த ஏவுகணை சுமார் 150கிமீ தொலைவு வரை சூப்பர்சானிக் வேகத்தில் சென்று இலக்கை வானிலேயே தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த […]

Read More

இத்தாலி எகிப்து மெகா ஆயுத ஒப்பந்தம்; மத்திய கிழக்கில் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உருவெடுக்கும் எண்ணமா ??

June 3, 2020

எகிப்து நாட்டில் ராணுவம் ஆட்சிக்கு வந்த பின்னர் எகிப்து நாட்டின் ராணுவ வலிமையை அதிகரிக்க தற்போதைய அதிபர் அல் சீஸி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது இத்தாலியிடம் இருந்து சுமார் 9.1பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான இருதரப்புபேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மெகா ஒப்பந்தம் ஏறத்தாழ இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதாகவும் அப்படி இறுதி செய்யப்பட்டால் எகிப்தின் வரலாற்றிலேயே […]

Read More

காஷ்மீரில் என்கவுன்டர்; மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் !!

June 3, 2020

இன்று காலை தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அஸ்தான் மொஹல்லா கங்கான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க பெற பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். தரைப்படை, மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடி வந்த போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கினர். சிறிது நேரத்தில் மூன்று பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்தினர். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் […]

Read More

இந்திய சீன எல்லை பிரச்சினை கவலையளிக்கிறது – ரஷ்யா !!

June 3, 2020

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் நிலவி வரும் எல்லைப் பிரச்சினை கவலையளிப்பதாக உள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் ரோமன் பபூஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பதற்றம் இருநாடுகளுக்கும் நண்பண் என்ற முறையில் ரஷ்யாவுக்கு கவலையளிப்பதாகவும், இதனை சுமுகமாக இருநாடுகளும் முடித்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார் மேலும் பேசுகையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இதற்கென தேவையான நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் […]

Read More

கிழக்கு லடாக்கில் கணிசமான அளவில் சீன படைகள் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

June 3, 2020

கிழக்கு லடாக்கில் கணிசமான அளவில் சீன படைகள் நிலைநிறுத்தப்பட்டுளதாகவும் இதற்கு பதிலடி கொடுக்க சமமான அளவில் இந்திய படைகள் அங்கு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அரசு சார்பில் இதுவே முதலாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இது உள்ளது. சீனர்கள் ஒரு பகுதி தங்களது என கருதுவதால் தான் இப்பிரச்சினை ஆகவே சீன அரசு இதுகுறித்து தீவிரமாக யோசனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் கூறுகையில் இந்தியா தேவையின்றி யாரையும் அவமதிக்காது […]

Read More

இந்திய இஸ்ரேல் உறவில் நெருக்கம் அதிகரிப்பு இஸ்ரேலிய தூதர் !!

June 3, 2020

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரோன் மல்கா தி பிரின்டி ஊடகத்தின் ஷேகர் குப்தாவிடம் அளித்த பேட்டியில் கொரோனா தொற்று காலத்தில் இந்திய இஸ்ரேலிய உறவு பலப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தொலைபேசி மூலமாக ஆலோசனை மேற்கொண்டதாகவும, கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் உயிரியல் ஆராய்ச்சி கல்லூரி ஆகியவை இணைந்து […]

Read More