தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதை யாராலும் தடுக்க முடியாது சீனா அதிபர் !!

தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதை யாராலும் தடுக்க முடியாது சீனா அதிபர் !

சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதை யாராலும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார் இது தைவானுக்கு ஆதரவான அனைத்து சக்திகளுக்கும் எதிரான எச்சரிக்கையாக சர்வதேச பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது இன்னும் சொல்லப்போனால் இது சீன அதிபரின் தைவான் ஆதரவு சக்திகளுக்கு எதிரான நேரடி எச்சரிக்கை என்றால் மிகையாகாது.

கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் சீனா தைவானுக்கு பல்வேறு விதங்களில் ராணுவ ரீதியான நெருக்கடிகளை அவ்வப்போது ஏற்படுத்தி வந்தது குறிப்பாக போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை சீனா தினசரி அடிப்படையில் தைவான் நாட்டின் வான் எல்லை மற்றும் கடல் எல்லைக்குள் அனுப்பி வந்தது இதனை தைவான் ராணுவ அதிகாரிகள் இத்தகைய சீனாவின் ராணுவ செயல்பாடுகளை வழக்கமான ஒன்றாக ஆகும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

சீனாவை பொறுத்தவரையில் தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும், வரலாற்று ரீதியாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இன்றைய தைவான் சீன பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது பின் நாட்களில் கம்யூனிச ஆட்சியில் இருந்து பிரிந்தவர்கள் தைவானுக்கு சென்று தனி குடியரசு நாடாக தங்களை அறிவித்துக் கொண்டனர் அதன் அடிப்படையில் தைவான் அரசு இன்றும் சீனாவின் பிரச்சாரங்களை நிராகரித்து விட்டு தைவான் மக்களே தங்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிப்பர் அதை சீன அரசு மதித்து அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது புத்தாண்டு உரையின்போது தைவான் ஜலசந்திக்கு இரு பக்கமும் ( அதாவது சீனா மற்றும் தைவான் ஆகிய இரு நாடுகளையும் குறிப்பிட்டு) வசிக்கும் மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் எனவும் ஒரே குடும்பம் எனவும் யாராலும் இந்த உறவுகளை பிரிக்க முடியாது எனவும் இந்த தேசிய இணைப்பின் உறுதியை யாராலும் தளர்த்த முடியாது எனவும் சீன அரசின் தேசிய ஊடகமான CCTV இல் ஒளிபரப்பப்பட்ட அந்த உரையின்போது தெரிவித்தார் மேலும் அவர் சீனா தைவான் ஒருங்கிணைப்பு காலத்தால் தவிர்க்க முடியாதது எனவும் இரு பக்கத்தில் வசிக்கும் மக்களும் இந்த பொதுவான நோக்கத்தை ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைந்த புத்துணர்ச்சி பெற்ற சீனாவின் மகிமையில் மகிழ்ச்சி அடைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் தைவானின் புதிய அதிபராக லாய் சிங் டே பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு சீனா மேலும் அசுரத்தனமாக தைவானுக்கு ராணுவ அழுத்தங்களை கொடுத்து வருகிறது இதன் காரணமாக அப்போது முதல் இப்போது வரை தைவான் சீனா இடையேயான பதட்ட நிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்த புதிய தைவான் அதிபரை சீனா பிரிவினைவாதி என முத்திரை குத்தி வருகிறது தைவானின் புதிய அதிபர் லாய் சிங் அமெரிக்காவின் குவாம் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அதை விமர்சித்த சீன அரசு சீனப் போர்க்கப்பல்களை தைவானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் அதிக அளவில் குவித்து நெருக்கடி ஏற்படுத்தியது.

சீனா தைவானை தன்னோடு இணைப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது குறிப்பாக ராணுவ பலத்தை அதற்கு பிரயோகம் செய்வதையும் சீனா தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது அதற்கு பல்வேறு ராணுவ ரீதியான ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது கடந்த ஆண்டு அந்த வகையில் தைவானை சுற்றி இரண்டு கட்டங்களாக போர் ஒத்திகைகளை சீன ராணுவம் மேற்கொண்டது மேலும் இத்தகைய ராணுவ செயல்பாடுகளை தைவான் உடைய பிரிவினைவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எனவும் தைவான் உடைய இத்தகைய செயல்பாடுகள் தொடர்ந்தால் சீனாவின் நடவடிக்கைகளும் தொடரும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கும் தைவான் நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா தைவான் ராணுவத்திற்கு பல்வேறு விதமான ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது இது சீனாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த ஆயுத வியாபாரம் காரணமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் கசப்பான நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன அந்த வகையில் சீனா தொடர்ந்து அமெரிக்காவை தைவான் உடன் எவ்வித ராணுவ உறவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரிக்கை செய்து வருகிறது மட்டுமின்றி தைவானுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.