இந்த ஆண்டின் முதல் நாளிலேயே அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல், ட்ரம்ப் ஹோட்டலில் குண்டுவெடிப்பு, நியூயார்க் துப்பாக்கி சூடு !
2025 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே அமெரிக்காவில் மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று வெவ்வேறு கோர சம்பவங்கள் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன இந்த சம்பவங்கள் அந்த நாடு முழுவதும் மக்களிடையே பா பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கோபத்தையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது இந்த மூன்று சம்பவங்கள் பற்றி அமெரிக்க அரசு விரிவான விசாரணை நடத்த விசாரணை மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலாவது சம்பவம் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றுள்ளது புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் போது சம்சுதீன் ஜப்பார் என்கிற நபர் தனது வாகனத்தை மிக வேகமாக ஓட்டி சென்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தில் மோதியதில் 15 பேர் கொல்லப்பட்டனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் இதன் பின்னர் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
42 வயதான சம்சுதீன் ஜப்பார் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் மற்றும் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர் ஆவார் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் பங்குபெற்ற இவர் அமெரிக்க ராணுவத்தில் ஸ்டாப் சார்ஜன்ட் அந்தஸ்தில் பணியாற்றியவர் ஆவார் இந்திய ராணுவத்தில் இது அவில்தார் மேஜர் பதவிக்கு நிகரானதாகும், இவர் தாக்குதல் நடத்த பயன்படுத்திய வாகனத்தில் பின்புறத்தில் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தின் கொடியை கட்டி வைத்துள்ளார்.
அமெரிக்க காவல்துறை மற்றும் FBI மத்திய குற்ற புலனாய்வுத்துறை ஆகியவை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இது பயங்கரவாத தாக்குதலாக கருதப்படும் நிலையில் சம்சுதீன் ஜப்பார் எந்த நோக்கத்திற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றியும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருவதாக விசாரணை அதிகாரிகள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர் சம்சுதீன் ஜப்பார் இந்த தாக்குதலை தனி ஆளாக நடத்தி இருக்க முடியாது என அவர்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் இன் ட்ரம்ப் ஹோட்டல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டெஸ்லா நிறுவன தயாரிப்பாளர் சைபர் கார் ஒன்று வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் கொல்லப்பட்டுள்ளார் மேலும் அந்த ஹோட்டலில் இருந்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர் தற்போதைக்கு இது பயங்கரவாத தாக்குதலாக இருக்குமா? என்பது சந்தேகிக்கப்படுகிறது ஆனால் இது பற்றி உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை இந்த சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நியூ ஏர்லியன்ஸ் நகரத்தில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட அதே வாகனத்தை போன்ற வாகனமும் இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் சம்பவத்தில் வெடித்து சிதறிய வாகனத்திற்கு அருகில் வெடிப்பதற்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு கிளப்பிற்கு வெளியே நின்று கொண்டிருந்த மக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அதிர்ஷ்டவசமாக இவர்கள் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழல் இல்லை எனவும் இவர்கள் அனைவரும் பிழைத்துக் கொள்வர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,
உடனடியாக காவல்துறையினரும் சம்பவ பகுதிக்கு விரைந்து விரைந்து சென்றுள்ளனர் தற்போது இந்த தாக்குதல் நடத்திய நபர் பற்றியோ அவர் எங்கு இருக்கிறார் என்பது பற்றியோ எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை இந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களும் ஒட்டுமொத்த அமெரிக்கா முழுவதும் கோபத்தையும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகை அல்ல