இந்திய கடலோர காவல் படைக்கான 20 அதிநவீன கலன்களின் கட்டுமான பணிகள் துவங்கியது !
இந்திய கடலோர காவல் படைக்கான 20 அதிநவீன ரோந்து கலன்களை கட்டுவதற்கான பணிகள் மும்பையில் அமைந்துள்ள MDL Mazagon Docks Limited மும்பை மசகான் கப்பல் கட்டுமான தளத்தில் துவங்கியுள்ளது, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 14 FPV Fast Patrol Vessels அதிவேக ரோந்து கலன்கள் மற்றும் 6 NGOPV – Next Generation Offshore Patrol Vessels அடுத்த தலைமுறை கடலோர ரோந்து கலன்கள் என ஒட்டுமொத்தமாக 20 அதிநவீன ரோந்து கலன்களை சுமார் 2684 கோடி மதிப்பில் கட்டமைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இவற்றின் கட்டுமான பணிகள் துவங்கியதை குறிக்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அடையாளமாக ஒரு உலோகத்துண்டு வெட்டப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் மூத்த இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மும்பை மசகான் கப்பல் கட்டுமான தள நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த 20 அதிநவீன ரோந்து கலன்களும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை ஆகும் இவற்றில் ஆளில்லா வானூர்திகள் மற்றும் AI Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு திறன் அமைப்புகள், Integrated Bridge System (IBS) ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் Integrated Machinery Control System (IMCS) ஒருங்கிணைந்த இயந்திர கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களும் உட்புகுத்தப்படும்.
இந்த 20 அதே நவீன ரோந்து கலன்களும் அடுத்த சில ஆண்டு கால கட்டத்தில் கட்டமைக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் இந்த காலகட்டம் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது இந்த இருபது அதிநவீன ரோந்து கலன்களும் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்துவது மட்டுமின்றி ஏதேனும் பிரச்சனைகள் அல்லது சிக்கல்களின் போது உடனடியாக கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பேருதவியாக இருக்கும் என்றால் மிகை ஆகாது.