அணு ஆயுதங்களை வேகமாக அதிகரிக்கும் சீனா அமெரிக்க அறிக்கை; இந்தியாவுக்கு ஏற்படும் சிக்கல்கள் !
கடந்த வாரம் அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அமெரிக்காவின் கணிப்பை விட வேகமாக அதாவது இரு மடங்கு அதிகமாக சீனா ஒவ்வொரு ஆண்டும் தனது அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவத்தின் DIA Defence Intelligence Agency பாதுகாப்பு உளவு முகமை கடந்த 2020 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவிடம் 200 அணு ஆயுதங்கள் இருந்ததாகவும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் அது 400 அணு ஆயுதங்கள் என்ற எண்ணிக்கையை தொட்டுவிடும் எனவும் முன்னர் கூறியிருந்தது.
ஆனால் தற்போது அதே அமைப்பு ஏற்கனவே சீனா 500க்கும் அதிகமான அணு ஆயுதங்களை தயாரித்து விட்டதாகவும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1000 அணு ஆயுதங்களை சீனா கொண்டிருக்கும் எனவும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவலை வெளியிட்டுள்ளது இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த ஆயிரம் அணு ஆயுதங்களில் அதிக அளவிலான அணு ஆயுதங்கள் அமெரிக்காவை சென்றடைய கூடிய திறன் கொண்டவையாக இருக்கும் என்பதாகும்.
மேலும் அந்த அறிக்கையில் சீனா தனது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாகவும் மேலும் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருவதாகவும் இதை சீனா தனது லட்சிய நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பதாக இருந்த சீனாவின் அணு ஆயுத நவீனமயமாக்கல் முயற்சிகள் தற்போதைய அதிகரிப்பு மற்றும் நவீன மயமாக்கல் முயற்சிகளின் முன்பு அளவிலும் நவீனத்துவத்திலும் மிகவும் சிறிதாக காணப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த விவரங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு சீன ராணுவ பலம் பற்றி பிரசூரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒருபுறம் அமெரிக்கா இத்தகைய கணிப்புகளை வெளியிட்டு இருந்தாலும் சீனா இத்தனை வேகமாக எதற்காக தனது அணு ஆயுதங்களை அதிகரித்து மற்றும் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது என்பது பற்றி எவ்வித விளக்கமும் கிடைக்காமல் உள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது தான் அந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பேசும்போது சீன ராணுவ அதிகாரிகள் சீனாவின் அணு ஆயுத அதிகரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் முயற்சிகள் பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை என கூறுகின்றனர் சீன ராணுவ அதிகாரிகள் சீனாவின் இத்தகைய செயல்பாடுகளுக்கு பின்னால் இருக்கும் அடிப்படை காரணம் பற்றி வெளிப்படையாக இல்லை எனவும் ஒரு ராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவ உளவு முகமை தனது அறிக்கையில் இதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது அதாவது முதலாவது காரணம் அமெரிக்காவுடனான போட்டி அதாவது அமெரிக்க ராணுவத்திற்கு சவால் விடும் வகையில் பலம் பெறுவது இரண்டாவது காரணம் தன்னிடம் பலம் வாய்ந்த சிறப்பான ஆயுதங்களை வைத்துக்கொண்டு புவிசார் அரசியலில் காய் நகர்த்துவது ஆகும் இதன் ஒரு பகுதியாக சீனா அதிக அளவில் போர்க்களத்தில் உபயோகப்படுத்தும் வகையிலான சிறிய வகை அணு ஆயுதங்களையும் தயாரித்து வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது இதன் மூலமாக சீன ராணுவ அதிகாரிகள் முன்பு அணு ஆயுதப் போர் கட்டுப்படுத்த முடியாது என்ற தங்களது சிந்தனையில் இருந்து மாறி வருவதாகவும் கருத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கடந்த பல ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சமீபத்தில் சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அந்த பேச்சுவார்த்தையின் போதும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் சீனாவின் அணு ஆயுத அதிகரிப்பு மற்றும் நவீன மயமாக்கல் திட்டங்கள் பற்றி பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன சீன தலைவர்கள் அனைவரும் தங்கள் நாட்டு ராணுவத்தை அமெரிக்காவிற்கு இணையான உலகளாவிய சக்தியாக ஒரு தரம்மிக்க ராணுவமாக உருவாக்குவதை கொள்கையாகக் கொண்டுள்ளனர் இது கவலை அளிக்கும் விஷயமாகும்.
காரணம் சீன கம்யூனிச கட்சி தலைவர்கள் மற்றும் சீன அதிபர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியின் போது சீன ராணுவத்தின் வெள்ளி விழா பொன்விழா வைர விழா ஆகியவற்றை கொண்டாடும்போது முக்கியமான ராணுவ முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவார் அந்த வகையில் வருகிற 2027 ஆம் ஆண்டு சீனா ராணுவத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது தற்போதைய சீன அதிபர் ஜி சின் பின் 2027 ஆம் ஆண்டு வாக்கில் சீன ராணுவம் தைவானை முழுவதும் படையெடுத்து பிடித்து சீனாவுடன் இணைக்கும் பலத்தை பெற்றிருக்கும் என குறிப்பிட்டு இருந்தது மிக முக்கியமான தகவலாகும்.
சீனா இப்படி தனது ராக்கெட் படை அணு ஆயுதப்படைகள் ஆகியவற்றில் அதிக பணத்தை முதலீடு செய்வதற்கு தைவான் படையெடுப்பு நோக்கமும் ஒரு காரணமாக நிச்சயமாக இருக்கும் அப்படி தைவான் மீது சீனா படையெடுக்கும் போது தெய்வானுக்கு ஆதரவாக அமெரிக்கா அல்லது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தலையிடாமல் இருப்பதை தவிர்க்கும் விதமாகவும் சீனா தனது அணு ஆயுதங்களை அதிகரித்து மற்றும் நவீன மயமாக்கி வரலாம் என சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் புவிசார் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
சீனாவை பொறுத்தவரையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 அதிக சக்தி, குறைந்த சக்தி கொண்ட பல்வேறு அணு ஆயுதங்களை படையில் இணைத்து வருகிறது மேலும் 2035 ஆம் ஆண்டு வாக்கில் மேலும் ஆயிரம் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட அனுசார் பொருட்கள் கைவசம் உள்ளது இதற்காக ட்ரீட்டீயம் மற்றும் ப்ளூட்டோனியம் ஆகியவற்றின் தயாரிப்பையும் வேகப்படுத்தியுள்ளது இப்படி சீனா நிலம் வான் கடல் ஆகியவை சார்ந்த போர் முறைகளிலும் அதேபோல அணு விண்வெளி சைபர் மின்னணு போர் முறை ஆகியவற்றிலும் சிறந்து விளங்குவதற்காக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தியாவும் சில சிக்கல்களை சந்திக்கிறது ஏற்கனவே சீனாவுடன் தென் சீன கடல் பகுதியில் வியட்னாமுடன் இணைந்து கச்சா எண்ணெய் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்தியாவிற்கு இது சிக்கலை ஏற்படுத்துகிறது சீனா முதலில் அணு ஆயுதங்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை அதிகாரப்பூர்வமாக கொண்டிருந்தாலும் சில நேரங்களில் சீனாவுக்கு எதிராக முழு அளவிலான தாக்குதல் நடைபெற்றால் அணு ஆயுத பிரயோகம் செய்யப்படுவதற்கான அறிகுறிகளும் சீனாவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவும் முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்க மாட்டோம் என்ற கொள்கையை கொண்ட நாடாகும் மேல் குறிப்பிட்ட சிக்கல் காரணமாக தற்போது இந்தியாவும் தனது அணு ஆயுத பிரயோகக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர் ஏற்கனவே சீனாவுடன் எல்லையோரம் பிரச்சனை நிலவிவரும் நிலையில் தற்போது அவற்றை சுமுகமாக தீர்ப்பதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த காலங்களில் சீனா இத்தகைய ஒப்பந்தங்களை மீறி உள்ள வரலாற்றையும் நாம் கருத்தில் கொண்டு நமது அணு ஆயுத தாக்குதல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைப்பது காலத்தின் கட்டாயமாகிறது அந்த வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் சூழல்களுக்கு ஏற்ப அணு ஆயுதங்களை பிரயோகிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என சரியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பொறுப்பான ஒரு நாடாக முதலில் அணு ஆயுதங்களை பிரயோகிக்க மாட்டோம் என்ற கொள்கையை இந்தியா அறிவித்திருக்கும் அதே நேரத்தில் தனது பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் அவற்றை பிரயோகிக்கவும் தயங்க கூடாது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.