அமெரிக்காவை தாக்கும் தொலைவுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பாகிஸ்தான் அமெரிக்கா குற்றச்சாட்டு !!

அமெரிக்காவை தாக்கும் தொலைவுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பாகிஸ்தான் அமெரிக்கா குற்றச்சாட்டு !!

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அமெரிக்க அரசு பாகிஸ்தான் நாட்டின் தேசிய ஏவுகணை மேம்பாட்டு முகமை மற்றும் அதற்கு பாகங்களை சப்ளை செய்யும் மூன்று நிறுவனங்கள் மீது பல்வேறு வகையான தடைகளை விதித்தது அதற்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 19ஆம் தேதி மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் அமெரிக்காவை கூட தாக்கும் தொலைவிற்கு பயணிக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதாவது பொதுவாக இந்தியாவை மட்டுமே தனது தேசிய பாதுகாப்பு எதிரியாக கருதி ஆயுதங்களை வாங்கியும் மேம்படுத்தியும் வந்த பாகிஸ்தான் தற்போது உலகின் மற்றொரு பகுதியில் இருக்கும் ஒரு நாட்டை கூட தாக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை தயாரித்து வருவது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதாவது அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது பாகிஸ்தானுடைய இந்த செயல்பாடுகள் காரணமாக தற்போது இயற்கையாகவே அமெரிக்காவுக்கு ஆபத்து அல்லது ஊறு விளைவிக்கும் செயல்பாடுகள் ஆகவே கருத முடியும் இதற்கு வேறு எந்த காரணங்கள் உள்ளதாகவும் பார்க்க முடியவில்லை பாகிஸ்தானுடைய இந்த பலிஸ்டிக் ஏவுகணைகள் திட்டத்தின் நோக்கங்கள் பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாகவும் கூறியுள்ளார் ஒரு காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் சர்வதேச அளவிலான போரில் பக்க பலமாக இருந்த நட்பு நாடான பாகிஸ்தான் மீது அமெரிக்கா வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு உலக மற்றும் புவிசார் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேல் குறிப்பிட்ட அதிகாரி மேலும் விரிவாக இந்த விவகாரம் பற்றி பேசும் போது பாகிஸ்தான் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பங்களை அதிக அளவில் மேம்படுத்தி உள்ளதாகவும் இனியும் மேம்படுத்தி வருவதாகவும் குறிப்பாக தொலைதூரம் பயணிக்கும் பலஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் முதல் கணிசமான அளவில் பெரிய ராக்கெட் மோட்டார்களை சோதனை செய்யும் கருவிகளையும் கூட மேம்படுத்தி உள்ளதாகவும் இந்தப் போக்கு இப்படியே நீடித்தால் மிக விரைவில் பாகிஸ்தான் தெற்காசிய பிராந்தியத்தை தாண்டி அமெரிக்காவை கூட தாக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை பெற்றுவிடும் என கூறினார்.

ஏற்கனவே பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்னர் அமெரிக்க அரசால் விதிக்கப்பட்ட பல்வேறு வகையான தடைகள் ஒரு தலைப்பட்சமானது எனவும் இந்த தடைகள் காரணமாக பிராந்திய ராணுவ சமநிலை பாதிக்கப்படும் எனவும் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது மேலும் தற்போது அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பைனர் பாகிஸ்தான் மீது முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் எதுவும் அளிக்க பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதற்கு உடனடியாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை பின்னர் இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் இத்தகைய ஆயுதங்களை உருவாக்குவது தன்னுடைய சொந்த பாதுகாப்பிற்காக தான் எனவும் பாகிஸ்தானுடைய இறையாண்மையே பாதுகாக்கவும் தெற்காசியாவில் பிராந்திய சமநிலை மற்றும் அமைதியை பேணவும் மட்டுமே பாகிஸ்தான் இத்தகைய ஆயுதங்களை தயாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் இந்த விவகாரம் பற்றி பேசும் போது அமெரிக்கா பாகிஸ்தான் மீது தடைகள் விதிப்பதற்கு காரணம் பாகிஸ்தானுடைய ஏவுகணை திட்டங்கள் குறித்த கவலையே ஆகும் ஏனென்றால் அமெரிக்கா அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை அமல்படுத்துவதில் முழு உறுதியை கொண்டுள்ளது அந்தச் சட்டத்தில் பாகிஸ்தான் இதுவரை கையெழுத்திடவில்லை மிக நீண்ட நாட்களாகவே தொடர்ச்சியாக பாகிஸ்தானுடைய ஏவுகணை திட்டங்கள் பற்றிய கவலைகளை நாங்கள் வெளிப்படுத்தி வந்தோம்.

பாகிஸ்தானுடைய தொலைதூர பலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது அதேபோல பாகிஸ்தானுடைய இந்தத் திட்டங்களுக்கு அமெரிக்கா ஒருபோதும் ஆதரவு அளிக்காது எனவும் இது அமெரிக்காவின் நீண்ட நாள் கொள்கை முடிவு எனவும் ஆகவே அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து இத்தகைய பொருளாதார தடைகள் மற்றும் பல்வேறு முறைகளை பயன்படுத்தி எங்களது தேசிய பாதுகாப்பு உறுதி செய்து கொள்வோம் மேலும் அமெரிக்க நிறுவனங்களை இத்தகைய சக்திகள் தவறுதலாக பயன்படுத்திக் கொள்வதை தடுத்து நிறுத்துவோம் எனவும் ஆனால் தொடர்ந்து பாகிஸ்தான் அரசுடன் சுமுகமான முறையில் இந்த பிரச்சினையை சரி செய்து கொள்ள விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் ஏங்கி வரும் சில சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் திடீரென அமெரிக்க அரசு பாகிஸ்தான் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுப்பதும் இந்திய அரசின் கோரிக்கை அல்லது வற்புறுத்தலின் பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாக இருக்கலாம் என கருதுகின்றனர் சமீப காலமாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான புவிசார் அரசியல் மற்றும் ராணுவ ரீதியான ஒத்துழைப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன குறிப்பாக அமெரிக்கா இந்திய ராணுவத்திற்கு பல்வேறு அதிநவீன ஆயுத அமைப்புகளையும் தளவாடங்களையும் விற்பனை செய்துள்ளது இது தவிர பல்வேறு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும் இந்தியாவுடன் அமெரிக்கா செய்து கொண்டுள்ளது இது அனைத்தும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அவர்கள் பேசும்போது இந்தியா மற்றும் அமெரிக்க ஆகியவை ஒன்றாக இணைந்து ஏவுகணை தயாரிப்பு திட்டங்களிலும் ஈடுபட்டு உள்ளன, இதுவும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் இத்தகைய செயல்பாடுகளை பாகிஸ்தான் ஒருதலை பட்சமானதாகவும் தெற்காசியாவில் பிராந்திய சமநிலையை பாதிக்கும் செயல்பாடுகளாகவும் பார்க்கிறது எனவும் அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டின் படியான ஆபத்துகள் மேற்கை நோக்கியது அல்ல மாறாக கிழக்கை நோக்கியது எனவும் கருதுவதாக குறிப்பிட்டனர், நிச்சயமாக பாகிஸ்தான் மேற்கை நோக்கி தனது ஆயுதங்களை திருப்பாது மாறாக கிழக்கை நோக்கிய அதாவது இந்தியாவை நோக்கிய தனது ஆயுதங்களை எப்போதும் வைத்திருக்கும் என அவர்கள் கூறுவது கூடுதல் தகவலாகும்.