அமெரிக்க கடற்படை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் !!

அமெரிக்க கடற்படை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் !!

இரண்டு நாட்களுக்கு முன்பதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகத்தின் கீழ் இயங்கும் படைகள் ஏமன் நாட்டில் ஹவுத்தி பயங்கரவாத கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தின, இந்த தாக்குதலில் அமெரிக்க கடற்படையின் யூ எஸ் எஸ். ஹாரி எஸ் டீரூமன் USS HARRY S TRUMAN CVN -75 என்னும் நிமிட்ஸ் ரக அணுசக்தியால் இயங்கக்கூடிய பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எப் ஏ 18 போர் விமானங்கள் ஈடுபட்டன.

அப்படி ஒரு எப் ஏ18 FA – 18 போர் விமானம் ஏமன் நாட்டில் பல்வேறு இலக்குகள் மீது குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்திவிட்டு விமானம் தாங்கி கப்பலை நோக்கி திரும்பி வரும் வழியில் அதே பகுதியில் இயங்கி வந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யூ எஸ் எஸ் கெட்டிஸ்பர்க் USS GETTYSBURG CG-64 என்னும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை நாசகாரி போர்க்கப்பல் மேல் குறிப்பிடப்பட்ட எப் ஏ 18 போர் விமானத்தை நோக்கி வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது இதில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆனாலும் அதை இயக்கிய இரண்டு விமானங்களும் அதிர்ஷ்டவசமாக விமானம் அளிக்கப்படுவதற்கு முன்னதாக விமானத்தை விட்டு வெளியேறி தப்பித்துள்ளனர் அதில் ஒரு விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் உடனடியாக கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் அமெரிக்க கடற்படை மீட்டதாகவும் தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று பத்திரமாக நிலையான நிலைமையில் இருப்பதாகவும் இந்த சம்பவம் எதிரிகள் தாக்குதல் காரணமாக நிகழ்ந்தது அல்ல மாறாக ஏதோ ஒரு தவறு காரணமாக அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் காரணமாகவே நடைபெற்றுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க கடற்படை முழு அளவிலான துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி ஒரு மூத்த அமெரிக்க கடற்படை அதிகாரி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேல் குறிப்பிடப்பட்ட சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று மணி அளவிலும் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதி நேரத்தின்படி மாலை 7 மணிக்கு செங்கடல் பகுதியில் நடைபெற்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம் இரு விமானிகள் இயக்கக்கூடிய இரட்டை இருக்கை கொண்ட எப் ஏ18 போர் விமானம் எனவும் இது ஹாரி எஸ் ட்ரூமேன் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து இயங்கும் “முதலாவது விமானம் தாங்கி வான் படை அணியை” “Carrier Air Wing One” சேர்ந்தது எனவும் மேலும் மேல் குறிப்பிடப்பட்ட போர்க்கப்பலில் இருந்து இயங்கும் ஒரே இரட்டை இருக்கை FA – 18 போர் விமான படையணி அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஓசியானா நகரில் அமைந்துள்ள கடற்படை வான் படைத்தளத்தில் இருந்து இயங்கும் RED RIPPERS என பட்டப்பெயர் கொண்ட VFA-11 எனும் Strike Fighter Squadron 11 பதினோராவது தாக்குதல் போர்விமான படையணியை சேர்ந்தது எனவும் தெரிவித்தார்.

அதேபோல மேற்குறிப்பிட சம்பவத்திற்கு பொறுப்பான USS GETTYSBURG போர் கப்பல் அமெரிக்க கடற்படையின் Tico என செல்லமாக அழைக்கப்படும் TICONDEROGA ரக Guided Missile Cruiser வழிகாட்டப்பட்ட ஏவுகணை நாசகாரி போர் கப்பல் ஆகும், இவை ஏறத்தாழ 10,000 டன்கள் எடை கொண்டவை ஆகும் இவற்றில் அதி நவீன AEGIS COMBAT SYSTEM ஏஜிஸ் போர் அமைப்பு மற்றும் AN/SPY – 1 PESA 3D RADAR எனும் முப்பரிமான ரேடார் அமைப்பும் உள்ளது, முதலாவது குறிப்பிடப்பட்ட ஏஜிஸ் அமைப்பானது பல்வேறு வகையான இலக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டு அவற்றை தாக்கி அழிப்பதற்கு உதவும் அமைப்பாகும் இது உலகில் தற்போது வெகுசில நாடுகளின் கடற்படை போர்க்கப்பல்களில் மட்டுமே உள்ளது, மேலும் இந்த வகை போர்க்கப்பல்களில் சுமார் 110 செங்குத்தாக ஏவுகணைகளை ஏவு குழாய்களும் உள்ளன இந்தக் கப்பலில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், குறுந்தூர மற்றும் இடைதூர பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணை – எதிர்ப்பு ஏவுகணைகள், தரை தாக்குதல் ஏவுகணைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நீரடி கணைகள் மற்றும் பல்வேறு ஆயுத அமைப்புகள் உள்ளன.

இந்த கெட்டிஸ்பர்க் போர்க்கப்பல் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள நார்போல்க் கடற்படை தளத்தை தளமாக கொண்டு இயங்கும் கப்பல் ஆகும், தற்போது இந்த போர்க்கப்பல் மேலே குறிப்பிடப்பட்ட ட்ரூமன் விமானம் தாங்கி கப்பல் படையணியில் செயலாற்றி வருகிறது அந்த வகையில் கடந்த வாரம் தான் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கடற்படைகள் பங்கெடுக்கும் வணிக கப்பல் பாதுகாப்பு நடவடிக்கையான ஆபரேஷன் ப்ராஸ்பரிட்டி கார்டியன் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக மேல் குறிப்பிட்ட விமானம் தாங்கி கப்பலுடன் செங்கடல் பகுதியில் நுழைந்தது. மேலே குறிப்பிட்ட கெட்டிஸ்பர்க் போர் கப்பலுக்கு ட்ரு மேன் விமானம் தாங்கி கப்பல் படையணிக்கு வான் பாதுகாப்பு அளிப்பது தான் பிரதான கடமையாகும் அந்த வகையில் இந்தப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி தான் ஒட்டுமொத்த ட்ரூமன் விமானம் தாங்கி கப்பல் படையணியின் வான் பாதுகாப்பு கட்டளை அதிகாரி ஆவார்.

அந்த வகையில் ஏமன் நாட்டில் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வந்த அமெரிக்க போர் விமானத்தையே தவறுதலாக இந்த போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தற்போது வரையில் இந்த தாக்குதலுக்கு அங்கு போர்க்கப்பல் பயன்படுத்திய ஆயுதத்தை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட ஏஜிஸ் அமைப்பானது மிகவும் துல்லியமாக எதிரிகளையும் நட்பு படைகளையும் கண்டறியும் திறன் கொண்டதாகும் அதனுடைய கணினி அமைப்புகள் பல்வேறு வகையான இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றைப் பிரித்து அறிந்து எதிரி இலக்குகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும் அப்படி இருக்கையில் இந்த தவறு நடந்துள்ளது அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகே இதன் உண்மையான காரணம் என்னவென்பது தெரியவரும் என்பது கூடுதல் தகவலாகும்.