ரேடர்களால் கண்டுபிடிக்க முடியாத உலோகத்தை உருவாக்கிய ஐஐடி கான்பூர் இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு புரட்சி !!

ரேடர்களால் கண்டுபிடிக்க முடியாத உலோகத்தை உருவாக்கிய ஐஐடி கான்பூர் இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு புரட்சி !!

உலகம் முழுவதும் தற்போதைய மாறிவரும் அதிக நவீன போர் முறைகளுக்கு ஏற்ப பல உலக நாடுகள் அதிலும் குறிப்பாக அமெரிக்கா சீனா இங்கிலாந்து ரஷ்யா ஜப்பான் தென்கொரியா மற்றும் பல முன்னணி ஐரோப்பிய நாடுகள் ரேடார் மற்றும் சோனார்களால் கண்டுபிடிக்க முடியாத உலோகவியல் தொழில்நுட்பங்களை தங்களது வருங்கால அதிநவீன போர் விமானங்கள் போர்க்கப்பல்கள் நீர் மூழ்கி கப்பல்கள் டாங்கிகள் ஆகியவற்றை கட்டமைப்பதற்காக உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன, அந்த வகையில் முதலாவதாக ஜெர்மனி பின்னர் அமெரிக்கா பின்னர் ரஷ்யா அதைத்தொடர்ந்து சீனாவும் தற்போது இந்தியாவும் இத்தகைய ஆய்வில் வெற்றிகளை பெற்றுள்ளனர்.

அதில் குறிப்பிடும் படியாக ஏற்கனவே அமெரிக்கா இந்த உலோகங்களை பயன்படுத்தி F-22 எப் 22 Raptor, F -35 எப் 35 Joint Strike Fighter மற்றும் B-2 Spirit Bomber b2 ஸ்பிரிட் குண்டு வீச்சு விமானங்கள் போன்ற ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர் விமானங்களை உருவாக்கியுள்ளது அதேபோல ரஷ்யாவும் தனது ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகாய் 57 Su-57 Felon போர் விமானத்திலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது, சீனாவும் தனது ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது இந்தியாவின் கான்பூர் ஐஐடி அனலாக்ஷயா Analakshya MSCS Metamaterial Surface Cloaking System என்கிற இந்த ரேடார் அலைகளை தவிர்க்கும் தொழில்நுட்ப வசதி கொண்ட உலோகத்தை தயாரித்துள்ளது பொதுவாக இந்த மெட்டா மெட்டீரியல் உலோகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட உலோகங்களின் குணாதிசயங்களை கொண்டிருக்கும் மேலும் ஒலி, ஒளி, மின் காந்தம், இயந்திரவியல் வேதியியல் மற்றும் வெப்பம் ஆகியவற்றின் தன்மைகளை கொண்டிருக்கும், இந்த உலோகங்களை நானோ அளவில் பிளாஸ்டிக் உலோகங்கள் மற்றும் கரிம பொருட்களைக் கொண்டு 3d முப்பரிமாண முறையில் தயாரித்து பின்னர் அவற்றைக் கொண்டு பெரிய அளவிலான உலோக தகடுகள் அல்லது வேண்டிய வடிவத்தில் உலோகங்களை தயாரிப்பது தான் இந்த தொழில்நுட்பமாகும்.

இந்த தொழில்நுட்பம் மூலமாக இந்திய ராணுவம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்வதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை காரணம் இந்தத் தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்படும் எந்த ஒரு தளவாடம் ஆனாலும் அவற்றை ரேடர்களால் கண்டுபிடிக்க முடியாது அல்லது கண்டுபிடிப்பது மிக மிக மிக மிக கடினமாகும், குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் அதிலும் ரஷ்யா உக்ரைன் போரில் மிக சிறப்பாக செயல்திறன்களை வெளிபடுத்திய SAR Synthetic Aperture Radar என்ற முப்பரிமாண படங்களை உருவாக்கித் தரும் தொழில்நுட்பத்திற்கு எதிராக மிகச்சிறந்த தடுப்பாக அமையும்.

ஐஐடி கான்பூரை சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் வருங்கால அதி நவீன ராணுவ தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த தொழில்நுட்பம் எதிர்கால போர் மற்றும் கண்காணிப்பு தளவாடங்களுக்கு மிகவும் இன்றி அமையாததாக அமையும் குறிப்பாக ரேடர்களால் கண்டுபிடிக்க முடியாத அதிநவீன உளவு விமானங்களை கட்டமைப்பதற்கும், ஆயுத கண்டுபிடிப்பு ரேடர்களால் கண்டுபிடிக்க முடியாத டாங்கி போன்ற தளவாடங்களை உருவாக்குவதற்கும், ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் மற்றும் இந்தியாவின் லட்சிய திட்டமான ஐந்தாம் தலைமுறை திட்டத்திலும் இது நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த புதிய ரேடார் தவிர்ப்பு உலோகத்தின் அறிமுக விழாவில் தலைமை விருந்தினராக இந்திய விமானப்படையின் மூத்த மூன்று நட்சத்திர அந்தஸ்து அதிகாரிகளில் ஒருவரான மத்திய விமானப்படை கட்டளையாகத்தின் தளபதி ஏர் மார்ஷல் அஷூதோஷ் தீக்ஷித் AVSM VM VSM கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த புதிய தொழில்நுட்பத்தின் உருவாக்கம் இன்றைய காலகட்டத்தில் உலக ராணுவங்கள் குறிப்பாக இந்திய ராணுவம் மாறிவரும் போர் சூழலில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்வதற்கு பதிலாகும், இதனுடைய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும்,

இது வெறுமனே ஒரு பொருளை உருவாக்கியதற்கான பாராட்டு நிகழ்வு அல்ல மாறாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் விஞ்ஞானம் எந்த அளவுக்கு பங்களிக்க முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் எனவும் இத்தகைய ஒரு முழு திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப திறன் கொண்ட உலோகத்தை மிகக் குறைந்த நிதி உதவி மற்றும் சிறிய ஆதரவை வைத்துக்கொண்டு உருவாக்குவதில் ஐஐடி கான்பூர் கல்லூரியை சேர்ந்தவர்கள் காட்டிய உறுதிக்கு பாராட்டுக்கள் எனவும் வாழ்த்தினார், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற இந்திய தரைப்படை மூன்று நட்சத்திர அந்தஸ்து அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் செரிஷ் மாத்சன் PVSM SM VSM மற்றும் ஓய்வு பெற்ற மூன்று நட்சத்திர அந்தஸ்து அதிகாரியான ஏர் மார்ஷல் ராஜேஷ் குமார் PVSM AVSM VM ADC ஆகியோரும் கலந்து கொண்டது கூடுதல் தகவலாகும்.