முன்னாள் சிரியா அதிபர் ஆசாத் வெளியேறிய பிறகு முதல் முறையாக பேட்டியளித்த கிளர்ச்சியாளர்களின் தலைவன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கான செய்தி !!
நேற்று சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் 24 ஆண்டுகளாக தான் வகித்து வந்த அதிபர் பொறுப்பை துறந்து விட்டு ஆட்சி அதிகாரத்தையும் திறந்து விட்டு சிரியாவை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தனது குடும்பத்தினருடன் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார் இதன் மூலம் 14 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதிபர் ஆசாத்திற்கு எதிராக போரிட்ட பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் வெற்றி பெற்றுள்ளன ஆனாலும் இந்த கிளர்ச்சி குழுக்கள் எதிர்காலத்தில் லிபியாவை போன்று ஏமனை போன்று உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய தான HTS குழுவின் தலைவன் முகமத் அல் அபு ஜோலானி சிரியாவின் தலைநகர் தமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த உமாயத் பள்ளிவாசலுக்கு சென்று தனது ஆதரவாளர்கள் இடையே பேசினார் தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்கும் தனது அமைப்பு பெற்ற வெற்றியை கொண்டாடுவதற்கும் தன்னை இஸ்லாமியராக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜோலானி உம்மாயத் பள்ளிவாசலை தேர்வு செய்துள்ளது தகுந்ததே ஆகும்.
தனது ஆதரவாளர்கள் இடையே பேசும்போது சிரியாவை சுத்திகரிக்கப் போகிறோம் இனி சிரியாவில் ஈரானுக்கு இடமில்லை ஈரானுடைய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா மற்றும் இதர இயக்கங்களுக்கும் இடமில்லை புதிய சிரியா அனைவருக்கும் ஆனது இந்த சிரியாவிற்காக பாடுபட்ட தியாகம் செய்த சகோதரர்கள் சகோதரிகள் விதவைகள் குழந்தைகள் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் மேலும் தனது முதல் ஊடக சந்திப்பை வேறு எந்த ஊடகத்திற்கும் அளிக்காமல் அமெரிக்காவின் CNN ஊடகத்திற்கு அளித்துள்ளான்.
இதற்குக் காரணம் அமெரிக்காவிற்கும் மேற்குலகத்திற்கும் தனது குரல் கேட்க வேண்டும் என்பதாக ஜொலானி சிந்தித்து இருக்கலாம் என கருதப்படுகிறது இந்த முன்னாள் அல்காய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான ஜோலானி மேற்குறிப்பிட்ட இயக்கங்களின் பயங்கரவாதிகளின் கொடூரமான செயல்பாடுகளால் அவர்களிடமிருந்து தான் பிரிந்து விட்டதாகவும் தற்போது மத ஒற்றுமையை தான் வலியுறுத்துவதாகவும் அதனை நிலைநாட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளான்.
இந்தப் பேட்டி அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சிரியா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் அபூ ஜொலானியின் பேட்டியை தான் அறிந்து கொண்டதாகவும் இந்த விஷயங்களை கேட்கும் போது சந்தோஷமாக நம்பிக்கையாக உள்ளதாகவும் ஆனால் அபுஜலானியின் செயல்பாடுகளை தான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் தனது வார்த்தைகளுக்கு ஏற்ப தனது செயல்களும் இருப்பதை ஜொலானி உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அபு அல் முகமது ஜோலானி தன்னை இப்படி மத ஒற்றுமையை மத பிளவுவாதத்தை இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வெறுப்பவனாக காட்டிக் கொண்டாலும் அவனை உன்னிப்பாக கவனித்து வரும் பல சர்வதேச புவிசார் அரசியல் மற்றும் ராணுவ நிபுணர்கள் அவனது கருத்துக்களை சந்தேகிக்கின்றனர் காரணம் இவன் மிகக் கொடூரமான பயங்கரவாதியாக ஒரு காலத்தில் இருந்தவன் மேலும் தற்போது சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் மிக பெரும் பங்கு வகித்த இவனது இயக்கமான அல் நுஸ்ரா சிறு குழந்தைகளை கூட தலையை துண்டித்து கொன்ற குற்றங்களை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் தற்போதும் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளால் இவனது இயக்கம் பயங்கரவாத இயக்கமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானுக்கு அளித்த செய்தியை பொறுத்தவரையில் அபூ ஜோலானி இனி சிரியாவில் ஈரானுடைய நிழல் யுத்தமும் ஆதிக்கமும் எடுபடாது அவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் சிரியாவை ஈரானுக்கு விட்டுப் போட்டதாகவும் ஈரானுடைய பேராசை காண விளைநிலமாக சிரியாவை ஆசாத் மாற்றியதாகவும் தற்போது கிடைத்துள்ள வெற்றி ஒரு இஸ்லாமிய நாட்டின் வெற்றிய எனவும் குறிப்பிட்டுள்ளான்.