நான்கே நாட்களில் கவிழ்ந்த சிரியாவின் அசாத் ஆட்சி !!

நான்கே நாட்களில் கவிழ்ந்த சிரியாவின் அசாத் ஆட்சி !

கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 13 ஆண்டு காலமாக சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வந்தது இந்த யுத்தம் கடந்த நான்கு நாட்களாக மிகவும் தீவிரமடைந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் சுமார் 24 வருடங்களாக சிரியாவின் அசைக்க முடியாத சக்தியாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் ஆதரவுடனும் உதவியுடனும் முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு எதிராக போராடி வந்த கிளர்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வடக்கு ஆப்பிரிக்கா நாடுகள் மற்றும் அரபு நாடுகளில் அதாவது அரபி மொழி ஆதிக்கம் கொண்ட நாடுகளில் அரபிய வசந்தம் என்ற தொடர் போராட்டங்கள் பல்வேறு நாடுகளில் உள்ள மன்னர் ஆட்சிகள் மற்றும் சர்வாதிகாரிகளின் ஆட்சிகளை எதிர்த்து நடைபெற்றன, துனிசியா அல்ஜீரியா ஓமன் சூடான் ஜோர்டான் ஏமன் எகிப்து சிரியா பஹ்ரைன் குவைத் லிபியா மொராக்கோ ஈராக் போன்ற நாடுகளில் நடைபெற்றன, துனிசியாவில் தான் முதலில் இந்தப் போராட்டங்கள் துவங்கின துணிசிய தலைநகர் துனிஸ் நகரில் “அஷ்ஷாப் யூரித் இஸ்காத் அன் நிஸாம்” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது இதன் பொருள் மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள் என்பதாகும் இந்தப் போராட்டங்களும் முழக்கங்களும் தொடர்ந்து அருகருகே உள்ள லிபியா எகிப்து சிரியா ஏமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் பரவியது இதில் ஓமன் குவைத் ஜோர்டான் அல்ஜீரியா லெபனான் ஈராக் மொராக்கோ சூடான் ஆகிய நாடுகளில் தெருமுனை போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன அதேபோன்று பாலஸ்தீனம், மேற்கு சகாரா, ஜிபூட்டி, மவுரிதானியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

முதல் முதலாக துனிசியாவின் சுமார் 24 வருடங்களாக பதவி வகித்த ஸினே எல் பென் அபிதின் அலி நாட்டை விட்டு எனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்கு தப்பிச்சென்றார், அவரைத் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு முறையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிட்டு 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேபோல சுமார் 42 ஆண்டுகளாக இந்தியாவின் அதிபராக இருந்த முவம்மர் கடாஃபி இந்தப் போராட்டங்களின் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் கிளர்ச்சியாளர்களால் தப்பி செல்லும் போது பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், அதேபோல ஏமன் நாட்டின் அலி அப்துல்லா சாலே 2011 முதல் 2012 வரை நடைபெற்ற ஏமன் புரட்சி போராட்டங்களின் விளைவாக 22 ஆண்டுகளாக தான் வகித்து வந்த அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் பின்னர் உள்நாட்டு யுத்தத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு தப்பிச் செல்லும்போது ஹூத்திகளால் கொலை செய்யப்பட்டார்.

இவர்களின் வரிசையில் தற்போது சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாதும் இணைந்துள்ளார் சிரியாவை பொறுத்தவரையில் கடந்த 1963 ஆம் ஆண்டு சிரியாவின் பாத் கட்சி புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தது பின்னர் 1966 ஆம் ஆண்டு சாலா ஜதீத் மற்றும் பஷர் அல் ஆசாத்தின் தந்தையின் ராணுவ தளபதியுமாக இருந்த ஹஃபேஸ் ஆசாத் ஆகிய இரண்டு பாத் கட்சி நிர்வாகிகளும் இணைந்து ஆட்சியை கவிழ்த்தனர், பின்னர் 1970 ஆம் ஆண்டு ஹஃபேஸ் ஆசாத் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார் 2000 ஆவது ஆண்டில் அவரது மரணத்தை தொடர்ந்து அன்று முதல் நேற்று வரை முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் சிரியாவை ஆட்சி செய்தால் இப்படி சிரியாவை பாத் கட்சி சுமார் 61 ஆண்டுகள் ஆண்டுள்ளது அதில் 54 ஆண்டுகள் ஆசாத் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

1966 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக்கு பிறகு சிரிய ராணுவத்திலும் பாத் கட்சிக்குள்ளும் சிரியாவின் அலாவைத் ஷியா இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகரித்தது ராணுவத்தில் 90 சதவிகித அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களாக நியமிக்கப்பட்டனர் சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள சுனி முஸ்லிம்கள் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் 2011 ஆம் ஆண்டு போராட்டங்கள் உள்நாட்டு யுத்தமாக வெடித்த நிலையில் பெரும்பான்மையான சுனி இஸ்லாமியர்கள் ஆசாத் தலைமையிலான அரசை எதிர்த்துப் போராடி வந்தனர் இவர்களுக்கு இஸ்ரேல் துருக்கி அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வந்தன, இதற்கிடையே அல் காய் தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கங்களின் ஆதிக்கமும் சிரியாவில் அதிகரித்தது 2011 ஆம் ஆண்டு ஆசாத்தின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா சிரிய உள்நாட்டு யுத்தத்தில் இணைந்தது அதற்கு முந்தைய ஆண்டு அமெரிக்காவும் அதன் தலைமையிலான மேற்கத்திய நாடுகளும் சில அரபு நாடுகளும் இந்த உள்நாட்டு யுத்தத்தில் இணைந்திருந்தன.

இப்படி ஒன்பது ஆண்டுகளாக மிகத் தீவிரமாக ரஷ்யா முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தை காப்பாற்றி வந்தது அவரது ஆட்சி தற்போது வரை நீடித்ததற்கு காரணமே ரஷ்யாவின் உதவியாகும் அதிலும் குறிப்பாக 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு இழந்து போன பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் பகுதிகளை ரஷ்யாவின் உதவியோடு அதிபர் பஷர் அல் ஆசாத் கைப்பற்றினார், ஆனால் அவரது துரதிர்ஷ்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா முழுவதுமாக உக்ரைன் போரில் கவனம் செலுத்தி வரும் நிலையில் சிரியாவில் அதிபர் ஆசாத்தை காப்பாற்றுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்ய முடியவில்லை எனினும் ஈரான் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் கேட்டுக்கொண்டால் நேரடியாக களமிறங்க தயார் என அறிவித்திருந்தது, அதே நேரத்தில் கிளர்ச்சி படை குழுக்கள் அதிவேகத்தில் வெற்றிகளை குவித்ததும் ரஷ்யாவும் ஈரானும் சுதாரித்துக் கொண்டன.

ஈரான் தனது படைகளை சிரியாவில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது ரஷ்யா தனது தூதரகத்தை மூடியது அதிபர் ஆசாத்தும் மிக நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் களைத்துப் போய் இருந்ததாக கூறப்படுகிறது இனியும் அவர் இந்த யுத்தத்தை தொடர்வதற்கு விரும்பவில்லை எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன அதே நேரத்தில் அவருக்கு ஆதரவான ராணுவ படைகள் அனைத்தும் தங்களது ஆயுதங்களையும் சீருடைகளையும் காவல் நிலைகளையும் அப்படியே இருந்த வண்ணமாக விட்டு விட்டு ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளுக்கு சென்று விட்டனர் இதைத்தொடர்ந்து ஆசாத் ரஷ்யா உதவியுடன் சிரியாவை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்தார்.

முதலில் அவர் சென்ற விமானம் ஹோம்ஸ் நகர் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது எனினும் தற்போது ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகங்கள் முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஷ்யா அரசியல் அடைக்கலம் வழங்கி உள்ளதாகவும் அவர்கள் ரஷ்யா வந்தடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளதாக பல்வேறு மேற்கத்திய செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டு உள்ளன, தற்போது பல மேற்கத்திய நாடுகள் ஆசாத்தின் வீழ்ச்சியை வரவேற்று அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் உள்நாட்டு யுத்தத்தில் மூன்று முதல் ஆறு லட்சம் பேர் வரை கொல்லப்படுவதற்கு காரணமானவர் எனவும் 60 லட்சம் பேர் வரை தங்கள் உடமைகளையும் வீடுகளையும் விட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிரியாவின் எதிர்காலத்தை பொறுத்தவரையில் ஆசாத் அலாவைத் ஷியா இஸ்லாமியர்கள் குழுவை சேர்ந்தவராவார் இவர்கள் சிரியாவில் இனி பெரும்பான்மையான சுனி இஸ்லாமியர்களால் ஒடுக்கப்படும் அபாயங்கள் எழும்பியுள்ளனர் இவர்களைத் தவிர குர்துக்களும், ட்ரூஸ் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது, தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாத சிந்தனை உள்ளவர்கள் ஆவர் இவர்களில் மிக முக்கிய பங்கு வகித்த அபூ முகமது அல் ஜோலானி 2003 ஆம் ஆண்டு ஈராக் போரில் சதாம் உசேனுக்கு ஆதரவாக போராட சென்றவர் பின்னர் அல்காய்தா இயக்கத்திலும் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்திலும் இணைந்தவர் எட்டு ஆண்டுகள் அமெரிக்க சிறைகளில் வசித்தவர் இவரது தலைக்கு அமெரிக்கா பத்து மில்லியன் டாலர்கள் விலை வைத்திருந்ததும் இவரை மிக முக்கியமான சர்வதேச பயங்கரவாதி என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவரது பிரிவு சிரியாவின் கணிசமான சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறது இந்தப் பகுதியில் துருக்கியின் லிரா நாணயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இவர்களைப் பொறுத்தவரையில் துருக்கி அரசின் தீவிர ஆதரவு இவர்களுக்கு உண்டு அதேபோல ஆசாத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு இஸ்ரேல் ஆயுத உதவிகளை அளித்துள்ளதாக கூறப்படுகிறது, அமெரிக்கா அல் தான்ப் பகுதியை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இப்படி இன்று சிரியாவின் நிலை முற்றிலுமாக சீரழிக்கப்பட்டு இருக்கிறது.

லிபியாவை போன்று ஏமனைப் போன்று சிரியாவும் இனி பல குழுக்கள் ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றுவதற்கு போராடும் யுத்தம் நடத்தும் நாடாக மாறும் இனி ஒரு ஒரு நாளும் இந்த நாடுகள் சமாதானத்தை அடைவது சாத்தியமல்ல ஒரு ஒன்றுபட்ட அரசை அடைவதும் சாத்தியமல்ல ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு மதப்பிரிவும் இனி இங்கு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது அன்றாட காட்சியாக மாறும், சர்வதேச அரசியலைப் பொறுத்தவரையில் இது ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் மிக மிகப் பெரிய பின்னடைவாகும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் அரசியலும் பாதுகாப்பு சூழலும் நிரந்தர மாற்றமடைந்துள்ளன. இஸ்ரேலை பொறுத்தவரையில் அதனுடைய வடகிழக்கு எல்லையில் வலுவான சிரியா இருப்பது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகும் இஸ்ரேலுக்கு இனி அந்த தொந்தரவில்லை எனினும் பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் ஆபத்து இஸ்ரேலுக்கு வலுவாக உள்ளது, அதேபோல சிரியாயினி பயங்கரவாதிகளின் புகலிடமாகவும் மாறும் மேல் குறிப்பிட்ட பாதுகாப்பு சூழல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக இனியும் பல லட்சம் சிரிய மக்கள் அகதிகளாகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் மிகவும் தொன்மையான நாடுகளில் சிரியாவும் ஒன்றாகும் உலகின் முதல் நாகரீகமாக கருதப்பட்ட மெசபட்டோமிய நாகரிகத்தில் இருந்து உருவானது தான் அசிரியா ஆகும், இதுவே உலகின் முதல் பேரரசாகவும் அதாவது அசிரியப் பேரரசாக உருவெடுத்தது, அதாவது சுமார் 3 ஆயிரத்து 900 வருடங்கள் பழமையானதாகும், இதுவே இன்றைய நவீன உலக சிரியாவாகும், சிரியாவின் தலைநகர் தமஸ்கஸ் நகரம் உலகின் மிகத் தொடர்ச்சியாக மக்கள் வசிக்கும் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது அதாவது சுமார் ஐந்தாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நகரமாக கருதப்படுகிறது, இவ்வளவு நீண்ட நெடிய வரலாறு கொண்ட சிரியா இனி உலகின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பின் தங்கிய வறுமை மிகுந்த சுகாதாரமற்ற அமைதியற்ற பகுதியாக மாறும் என்பது கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.