ஆப்கானிஸ்தானில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படை !!

ஆப்கானிஸ்தானில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படை !!

செவ்வாய்க்கிழமை இரவு அன்று பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் நான்கு வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தெஹ்ரீக் ஐ தாலிபான் பாகிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குண்டு வீசி தாக்கி அழித்துள்ளது இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் விமானப்படை மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதாவது கிழக்கு பக்தி கா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்னாவ் மாவட்டத்தின் முர்கா மற்றும் லாமன் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன இதில் மேல் குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பில் ஊடகப் பிரிவான உமர் மீடியாவின் இயக்குனரும் அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவனுமான அக்தார் முகமது, மற்றொரு முக்கிய தளபதியான அபூ ஹம்சா மற்றும் முக்ளிஸ் யார் என அழைக்கப்படும் ஷேர் ஸாமன் ஆகியோர் பயன்படுத்திய முகாம்களும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான் அரசுடைய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது உண்மைதான் என உறுதி செய்துள்ளது ஆனால் அந்தத் தாக்குதலில் பல குழந்தைகள் உட்பட அப்பாவி சிவிலியன்கள் அதாவது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளது தற்போதைக்கு இந்த தாக்குதல் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்தோ அல்லது ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்தோ வெளியிடப்படவில்லை.

இந்த தாக்குதல்கள் பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதி தூதர் முகமது சாதிக் ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான் அரசின் இடைக்கால உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் முத்தாக்கி ஆகிய இருவரையும் கடந்த ஒரு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற ராஜாங்க இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரத்தில் சந்தித்த அதே நாளில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.