ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் !
இஸ்ரேலின் பிரபல ஊடகமான டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்தியில் இஸ்ரேலிய விமானப்படை ஈரான் உடைய அணு ஆராய்ச்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாகவும் அது தொடர்பான தயார் நடவடிக்கைகளை இஸ்ரேல் விமானப்படை தீவிரப் படுத்தி உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையை பொறுத்தவரையில் ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியவற்றின் தோல்விகளும் சிரியாவில் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் வெளியேறியதையும் ஈரான் தாக்குவதற்கு புதிய வாய்ப்புகளாக பார்க்கின்றனர்.
தற்போது சிரிய ராணுவத்தின் வசம் இருந்த 85 சதவீதத்திற்கும் அதிகமான வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலிய ராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக சிரியா மீது இஸ்ரேலிய விமானப்படையின் போர் விமானங்கள் பறந்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது காரணம் தற்போது சிரியாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு சவால் அளிக்கும் எவ்வித வான் பாதுகாப்பு தளபாடங்களும் வலுவாக இல்லை என்பதாகும் இதே நிலைதான் ஈராக்கிலும் நிலவுகிறது இதன் காரணமாக இஸ்ரேல் விமானப்படை சிரியா மற்றும் ஈராக் வழியாக ஈரான் வான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முடியும்.
அதேபோல இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது ஈரான் உடைய பலம் மிகவும் குறைந்துள்ளது குறிப்பாக ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது ஆகவே மேலும் தனது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கு ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு தீவிரமான முயற்சிகளை எடுக்கும் என நம்புகின்றனர் இதன் காரணமாகவே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இஸ்ரேல் ஈரான் உடைய அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி திட்டங்களை அழிப்பதற்கும் முடக்குவதற்கும் தயாராகி வருவதாக கருதப்படுகிறது.
ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் மற்றொரு பக்கம் அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அதாவது ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பரிசீலனை செய்து வருகிறார் மட்டுமின்றி இஸ்ரேலே நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை ஊக்குவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.