யுரேனிய செறிவூட்டல் திறன்களை அதிகப்படுத்தும் ஈரான் !
கடந்த சனிக்கிழமை அன்று ஈரான் நாட்டின் அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் முஹம்மது இஸ்லாமி தாங்கள் நாட்டின் யுரேனிய செறிவூட்டல் திறன்களை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஈரான் தலைநகர் டெக்ரானில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் அதாவது டெகரான் அருகே உள்ள ஃபோர்தோவ் யுரேனிய செறிவூட்டல் மையத்தில் சர்வதேச அணுசக்தி ஆணையம் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது இஸ்லாமி இதை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும் போது பொதுவாகவே அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு நாடானாலும் தங்களது செறிவூட்டல் திறன்களை பல மடங்கு அதிகப்படுத்தும் போது அதனுடைய கண்காணிப்பு நடைமுறைகளிலும் மாற்றங்களை கொண்டு வருவது இயல்பான ஒன்றுதான் எனவும் தங்கள் அரசு செறிவூட்டல் திறன்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து இனி சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் ஆய்வு நடவடிக்கைகளும் இயற்கையாகவே அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது தங்கள் நாட்டின் அணுசக்தி செயல்பாடுகள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது எனவும் தற்போது மூன்று யுரேனிய செறிவூட்டல் மையங்கள் ஈரானில் உள்ளதாகவும் இதனை ஐந்து ஆக அதிகரிக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது இதைத்தொடர்ந்து சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் சார்ந்த ஆய்வு நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என சற்று விளக்கமாக எடுத்துரைத்தார் ஈரான் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச அணுசக்தி ஆணையம் ஈரானுடைய அணுசக்தி ஆராய்ச்சி நடவடிக்கைகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதைச் சுட்டிக்காட்டி ஈரான் அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் முஹம்மது இஸ்லாமி பேசும் போது சர்வதேச அணுசக்தி ஆணையம் அணுசக்தி ஆராய்ச்சி பாதுகாப்பு விதிமுறைகள் ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத பரவல் தடைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஈரானுடைய தேசிய அணுசக்தி ஆராய்ச்சி நடவடிக்கைகளை பல ஆண்டு காலமாக கண்காணித்து வருவதாக கூறியது கூடுதல் தகவல் ஆகும்.