இந்தியா மற்றும் வியட்நாம் தரைப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சிகள் ஐந்தாவது முறையாக இந்த ஆண்டு நடைபெற்றன இந்த பயிற்சிகள் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மற்றும் சன்டிமந்திர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன, இந்த பயிற்சிகள் கடந்த மாதம் நான்காம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றன இந்தியா வியட்நாம் தரைப்படைகள் இடையே நடைபெறும் இந்த பயிற்சிகளுக்கு VINBAX – Vietnam India Bilateral Army Exercise இந்தியா வியட்நாம் இருதரப்பு தரைப்படை பயிற்சிகள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்த பயிற்சிகள் ஐந்தாவது முறையாக நடைபெற்றவை ஆகும், கடந்த ஆண்டு நான்காவது முறையாக நடைபெற்ற VINBAX 2023 வியட்நாமில் நடைபெற்றன இந்த இருதரப்பு கூட்டு பயிற்சிகள் இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு உறவுகளில் முக்கியம் முன்னேற்றமாகவும் இந்தியாவில் எட்டாம் இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் செயல்பாட்டாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் இந்த கூட்டு பயிற்சிகள் ஒரு சிறப்பை பெற்றுள்ளன அதாவது முதல்முறையாக இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளின் தரைப்படைகள் மற்றும் விமான படைகள் பங்கு பெறுகின்றன இந்திய தரப்பில் 47 பேர் அடங்கிய பொறியியல் படைப்பு பிரிவினரும் மேலும் வேறு பல படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களும் விமானப்படை வீரர்களும் பங்கு பெறுகின்றனர், இதே எண்ணிக்கையிலான வியட்நாம் தரைப்படை மற்றும் விமான படை வீரர்கள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த பயிற்சிகளில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு படையில் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறியியல் மற்றும் மருத்துவப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியா மற்றும் வியட்நாம் தரை படைகளின் பொறியியல் மற்றும் மருத்துவக் படை பிரிவினர் இந்தியா மற்றும் வியட்நாம் படை வீரர்கள் நன்றாக இணைந்து தங்களது திறன்களை பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொண்டனர்.
மேலும் இந்த பயிற்சிகளின் ஒரு பகுதியாக இரண்டு நாட்டு வீரர்களும் தங்களது படைக்கலன்களை காட்சிப்படுத்தினர் அதேபோன்று மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி காண்பித்தனர் அதைத்தொடர்ந்து 48 மணி நேர சரிபார்த்தல் பயிற்சிகளையும் மேற்கொண்டனர் முந்தைய VINBAX இருதரப்பு பயிற்சிகளை விடவும் இம்முறை இந்த பயிற்சி பெரிய அளவில் நடத்தப்பட்டதாகவும் இருதரப்பு வீரர்களும் தங்களது அனுபவங்கள் மற்றும் சிறப்பான செயல் திறன்கள் மற்றும் நடவடிக்கைகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டதாகவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்