6000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் கண்டுபிடிக்கும் நான்கு பில்லியன் டாலர் மதிப்பிலான ரேடாரை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் இந்தியா !!
ரஷ்யாவிடம் இருந்து சுமார் 6000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக கண்டுபிடிக்கும் நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பிரம்மாண்ட முன்னெச்சரிக்கை ரேடார் அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் இது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன சமீபத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக சென்றபோது அங்கு அவர் நடத்திய பேச்சு வார்த்தைகளில் இந்த ஒப்பந்தமும் முக்கிய இடம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Voronezh Radar Systen வோரோநேஸ் ரேடார் அமைப்பு சுமார் 6000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள 500க்கும் அதிகமான இலக்குகளை ஒரே நேரத்தில் அடையாளம் காணும் திறன் கொண்டது இது மிகுந்த தொலைவுகளுக்கு கண்காணிக்கும் திறன் கொண்ட அமைப்பு ஆகையால் மிகத் தொலைதூரத்தில் ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வகையான ஏவுகணைகளையும் முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு ஏற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் இந்த ரேடார் இந்தியாவிற்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் கண்காணிப்பு மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை பல மடங்கு அதிகரிப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்திய மதிப்பில் ஏறத்தாழ 34000 கோடி ரூபாய் மதிப்பிலான இது நேரடியாக வானில் செங்குத்தாக எட்டாயிரம் கிலோ மீட்டர்கள் மற்றும் பூமியில் கிடை மட்டத்தில் 6000 கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு hemispherical அரைக்கோள வடிவில் கண்காணிப்பு வளையத்தை கொண்டிருக்கும் இதனால் பலிஸ்டிக் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், போர் விமானங்கள், குரூஸ் ஏவுகணைகள், ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் விண்வெளியில் பூமிக்கு மிக அருகே தாழ்வாக பறக்கும் செயற்கைக்கோள்கள் உட்பட எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் தற்காப்பு அமைப்பிற்கும் மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
இந்த ரேடார் அமைப்பு சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான கண்காணிப்பு திறன்களை பல மடங்கு வலுப்படுத்தும் இந்த ரேடார் அமைப்புகளில் மூன்று வகைகள் உள்ளது அவற்றில் எதை இந்தியா வாங்க உள்ளது என்பது பற்றி எந்த தகவல்களும் தற்போது இல்லை ரஷ்யாவின் அல்மாஸ் ஆண்டே நிறுவனம்தான் இந்த ரேடார்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட இத்தகைய முதல் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முழு ராணுவ செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது தற்போது ரஷ்யாவில் இத்தகைய எட்டு ரேடார் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதும் பழைய ரேடார் அமைப்புகளை இந்த புதிய அதிநவீன ரேடார் அமைப்புகளை கொண்டு மாற்றி அமைக்கவும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.