ரஷ்யாவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் !!

ரஷ்யாவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் !

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி ரஷ்யாவின் கலினின்கிராட் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படையில் அதனுடைய ஏழாவது Project – 11356 திட்டம் – 11356 என்று அறியப்படும் தல்வார் ரகத்தை சேர்ந்த INS TUSHIL ஐ என் எஸ் துஷில் ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர்க்கப்பல் பால்டிக் கடலோரம் அமைந்துள்ள யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் நடைபெற்றது.

இந்த கப்பலின் பெயரான துஷில் என்பதன் பொருள் பாதுகாப்பு கவசம் ஆகும் மேலும் இந்தக் கப்பலின் சின்னமாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது அபேதியா கவசமாகும் இதன் தமிழ் பொருள் துளைக்க முடியாத கவசம் என்பதாகும். இந்த ஐ என் எஸ் துஷில் (F-70) என்ற அடையாளம் எண்ணை கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் இந்த விழாவில் பேசும்போது ஒவ்வொரு தல்வார் ரக கப்பல்களிலும் இந்திய தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் இந்த ஐஎன்எஸ் துஷில் கப்பலிலும் இந்திய தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய தல்வார் ரக போர்க்கப்பல்களை போல் அல்லாமல் துஷில் கப்பல் சற்றே வித்தியாசமானதாகும் காரணம் இதில் அதிக அளவில் இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், சோனார் அமைப்புகள், மேற்பரப்பு கண்காணிப்பு ரேடார், நீருக்கடியில் பயன்படுத்தப்படும் ராக்கெட் வெடிகுண்டுகள், தகவல் தொடர்பு அமைப்புகள் என 33 சதவிகிதம் அளவிற்கு இந்திய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றை பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், கெல்ட்ரான், நோவா ஒருங்கிணைந்த அமைப்புகள், எல்கோம் மறைன், ஜான்சன் கண்ட்ரோல்ஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக் கப்பலின் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால் இதனுடைய எஞ்சின்கள் உக்கரையின் தயாரிப்பாகும் முதலில் இந்தக் கப்பலும் இதன் துணை கப்பலும் ரஷ்ய கடற்படைக்காக குறிப்பாக அதன் கருங்கடல் படை பிரிவுக்காக தயாரிக்கப்பட்டு வந்தனர் ஆனால் கிரேமியா விவகாரத்திற்குப் பிறகு உக்கரை ரஷ்யாவிற்கு எதிராக விதித்த தடைகள் காரணமாக இந்த கப்பல்களின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன ஆகவே ரஷ்யா இந்த இரண்டு கப்பல்களையும் இந்தியாவிற்கு அளிப்பதற்கு முன் வந்தது அந்த வகையில் இந்தியா இந்த இரண்டு கப்பல்களையும் பெற்றுக் கொண்டு மிகுந்த நீண்ட நாட்களாக உக்கிரையின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இரண்டு கப்பல்களுக்கான இன்ஜின்களின் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

2020ன் பிற்பகுதி அல்லது 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்ரைன் நாட்டின் ஸோர்யா மாஷ்ப்ரோயெக்த் ZORYA MASHPROEKT நிறுவனம் இந்த என்ஜின்களை ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் அமைந்துள்ள யாந்தர் கப்பல் கட்டுமான தளத்திற்கு டெலிவரி செய்தது, ஒவ்வொரு இஞ்சினும் சுமார் 44 ஆயிரம் குதிரை சக்தி திறன்களை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை ஆகும் அதேபோல இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு வரும் இரண்டு தல்வார் ரக போர்க்கப்பல்களுக்கும் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான என்ஜின்கள் கியர்பாக்ஸ் மற்றும் அதிநவீன டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகள் வாங்கப்பட்டுள்ளது கூடுதல் தகவலாகும்.

இந்தக் கப்பலின் எடை சுமார் 4000 டன்கள் ஆகும், இதனுடைய நீளம் 125 மீட்டர் அகலம் 15 மீட்டர் நீருக்கடியில் இருக்கும் பகுதி 4.5 மீட்டர் ஆகும். இந்தக் கப்பலால் 30 நாட் வேகத்தில் பயணிக்க முடியும் அதாவது மணிக்கு 56 கிலோமீட்டர் வேகம் ஆகும் இந்தக் கப்பலால் மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் சுமார் 8980 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் அதுவே முழு வேகத்தில் அதாவது மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் 3000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் இதனால் இரண்டு ஹெலிகாப்டர்களை சுமக்க முடியும் அதாவது ஒரு Ka-28 மற்றும் ஒரு Ka-31 அல்லது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெட் த்ருவ் மார்க் 3 ஹெலிகாப்டர்களை சுமக்க முடியும்.

இந்தப் போர்க்கப்பலில் 24 ஷ்தில்-1 Shtil-1 இடைத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள், 8 இக்லா 1இ Igla – 1E குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள், எட்டு பிரமாஸ் தரை மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவுகுழாய்கள், ஒரு 100 மில்லி மீட்டர் A-190E பீரங்கி, இரண்டு AK-630 குறுந்தூர தற்காப்பு கனரக இயந்திரத்துப்பாக்கிகள், ஒரு RBU – 6000 நீர் மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் இரண்டு 533 மில்லி மீட்டர் நீரடிகணை ஏவுகுழாய்கள் உள்ளன, மின்னணு போர் முறைக்கு ஒரு TK-25E-5 EWS,

ஒரு PK-10 ship-borne decoy launching system, நான்கு KT-216 decoy launchers ஆகிய அமைப்புகள் உள்ளன.

மேலும் ரேடார் மற்றும் சென்சார் அமைப்புகளை பொருத்தவரையில் ஒரு 3Ts-25E Garpun-B மேல்பரப்பு தேடுதல் ரேடார், ஒரு MR-212/201-1 வழிகாட்டி ரேடார், ஒரு Kelvin Hughes Nucleus-2 6000A பனி, எண்ணெய் படலம் கண்டுபிடித்தல் மற்றும் மோதல் தடுப்பு முன்னெச்சரிக்கை ரேடார், ஒரு Ladoga-ME-11356 ரேடார், ஒரு Fregat M2EM  முப்பரிமாண வட்ட வடிவிலான ஸ்கேனிங் ரேடார், ஒரு Ratep JSC 5P-10E Puma தாக்குதல் கட்டுப்பாட்டு ரேடார், ஒரு 3R14N-11356 தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு MR-90 Orekh ஒரேக் இலக்கு கண்டறியும் ரேடார் மற்றும் ஒரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் HUMSA Hull Mounted Sonar Array அதாவது கப்பலில் முன் பகுதியில் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட சோனார் அமைப்பு ஆகியவை உள்ளன என்பது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்..