உலகின் முதல் ராம்ஜெட் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணையை தயாரித்த இந்தியா !!

உலகின் முதல் ராம்ஜெட் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணையை தயாரித்த இந்தியா !!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் முன்னணி மற்றும் பிரதான ஆயுத ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு அமைப்பான DRDO Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதியில் அமைந்துள்ள ITR Integrated Test Range ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து திடை எரிபொருள் ராம்ஜெட் SFDR Solid Fuel Ducted Ramjet தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணையின் இறுதி கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இது இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப பயணத்தில் மற்றும் ஒரு பெரிய தொழில் நுட்ப சாதனையாகும்.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட மேல் குறிப்பிட்ட ராம்ஜெட் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ஏவு அமைப்பில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது மேலும் ராம்ஜ தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை சோதனையில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததாகவும் உந்து சக்தி மற்றும் பல்வேறு முக்கிய அமைப்புகள் மிக சிறப்பாக இயங்கியதாகவும் அந்த ஏவுகணை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்த பாதையில் இருந்து விலகாமல் மிகச் சிறப்பாக ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணித்து குறிப்பிட்ட வான் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஏவுகணை சோதனையை பல்வேறு டெலிமெட்ரி, ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் அமைப்புகளைக் கொண்டு கண்காணித்ததாகவும் இந்தக் குறிப்பிட்ட ஏவுகணை அமைப்பின் கடைசி சோதனை இதுதான் எனவும் இந்த சோதனையில் அதன் சிறப்பான செயல்பாடு இந்த ராம்ஜெட் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகளை படையில் இணைப்பதற்கு தயார் என்ற செய்தியை உணர்த்துவதாகவும் மேலும் உலகிலேயே இந்தியா தான் முதல் முறையாக இத்தகைய திடை எரிபொருள் ராம்ஜெட் தொழில்நுட்பம் கொண்ட வான் இலக்கு ஏவுகணைகளை தயாரித்து உள்ள முதல் நாடு என்று சிறப்பை இதன் மூலம் பெற்றுள்ளதாகவும் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தத் திட எரிபொருள் ராம்ஜெட் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகளால் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் வான் இலக்குகளையும் மிகவும் துல்லியமாக சூப்பர்சானிக் வேகத்தில் சென்று தாக்கி அழிக்க முடியும் இந்த ஏவுகணையை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் மற்றும் இமராத் ஆய்வகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரில் அமைந்துள்ள High Energy Materials Labaratory HEMRL ஆகியவை கூட்டாக உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தொழில்நுட்பத்தில் அதிநவீன உந்து சக்தி அளிக்கும் அமைப்பு உள்ளது மேலும் நாசில் இல்லாத பூஸ்டர் அமைப்பு மற்றும் வெளிப்படுத்தும் உந்து திறனை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் அமைப்பு ஆகியவை உள்ளன இவை காரணமாக இந்த தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகள் மிக அதிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இலக்கை நோக்கி அதிக வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றவை ஆகும் மேலும் இந்த வகை ஏவுகணைகள் பறக்கும் போதே காற்றில் இருந்து ஆக்சிஜனை மட்டும் எடுத்து பயன்படுத்தி பறக்கும் ஆற்றல் பெற்றவை என்பது கூடுதல் தகவலாகும்.

கடந்த மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜி சதீஷ் ரெட்டி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது திட எரிபொருள் ராம்ஜெட் தொழில்நுட்பம் நீண்ட தூர வான் தாக்குதல் ஏவுகணைகளை உருவாக்குவதில் இந்தியாவை முன்னிருத்தும் எனவும் இத்தகைய தொழில்நுட்பம் முழுமையாக தயாரிக்கப்பட்டவுடன் உலகிலேயே இத்தகைய தொழில்நுட்பம் கொண்ட வான் தாக்குதல் ஏவுகணையை SFDR Air to Air Missile தயாரித்த முதல் நாடாக இந்தியா இருக்கும் எனவும் கூறினார், அவரது கூற்றுப்படி பார்க்கையில் இது சுதேசி ஆயுதமான Astra Mk3 அஸ்திரா மார்க்-3 என கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.