இருதரப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொண்ட சீனா மற்றும் அமெரிக்கா !!
சமீபத்தில் சீன அரசு அமெரிக்காவுக்கு தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பதிலாக மிக முக்கியமான கனிம உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திருந்தது இதற்கு இடையே
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசுகள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து உள்ளன,
இந்த ஒப்பந்தம் கடந்த 1979 ஆம் ஆண்டு அன்றைய சீன அதிபர் டெங் ஷியோப்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இடையே கையெழுத்தானது சீனாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு டெங் சியோப்பிங் எடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கு இடையில் கையெழுத்தானது சீனா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான மிக முக்கியமான இருதரப்பு ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் ஊக்கப்படுத்தி வருகிறது.
உலகின் மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்கா மற்றும் மிகவும் வேகமாக வளரும் நாடான சீனா ஆகிய இரு பெரும் பொருளாதார சக்திகளும் கடந்த 45 ஆண்டு காலமாக சுற்றுச்சூழல் எரிசக்தி காலநிலை மாற்றம் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கணிசமான அளவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்றுள்ளன அந்த வகையில் சமீபத்தில் சீனாவில் கட்டமைக்கப்பட்டுள்ள டாயா பே நியூட்ரினோ உலை ஆய்வுத் திட்டம் சமீபத்திய எடுத்துக்காட்டாகும்.
இது தவிர அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சீனாவின் புகழ்பெற்ற டியாஞ்சின் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக இணைந்து சிலிக்கானை விடவும் 10 மடங்கு ஆற்றல் மற்றும் செயல்திறன் மிகுந்த கிராபீனை அடிப்படையாகக் கொண்ட செமி கண்டக்டர்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.