ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் ஆயுத தயாரிப்பில் ஈடுபட இந்திய நிறுவனங்கள் விருப்பம் எஸ்டோனிய அமைச்சர் !!

ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் ஆயுத தயாரிப்பில் ஈடுபட இந்திய நிறுவனங்கள் விருப்பம் எஸ்டோனிய அமைச்சர் !!

வடக்கு ஐரோப்பாவில் உள்ள பால்டிக் கடல் பிரதேச நாடான எஸ்டோனியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹானோ பெவ்க்கூர் சமீபத்தில் வியான் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்டோனியா நாட்டில் ஆயுத தயாரிப்பை துவங்குவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார் ஏற்கனவே இந்தியா உலகின் முன்னணி ஆயுத தயாரிப்பு நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

வியான் செய்தி நிறுவனத்தின் சித்தாந்த் சிபலுக்கு அளித்த நேர்காணலில் எஸ் ஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ஹானோ பெவ்க்கூர் இது தோட்டாக்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களுக்கான குண்டுகளின் தயாரிப்பு தொடர்பானது மட்டுமல்ல மேலும் பீரங்கிகள் கவச வாகனங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு தொடர்பானதாகும் இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் தீவிரமாக உள்ளது மிக விரைவாக இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்வதற்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் இந்தியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் அளித்த அவர் இந்தியா மற்றும் எஸ்டோனியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பாக கடந்த ஆண்டில் மிகச் சிறந்த முறையில் இருதரப்பு ஒத்துழைப்புகள் இருந்ததாகவும் மேலும் இதனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியா மற்றும் எஸ்டோனியா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது எனவும்

தற்போது எஸ்டோனியாவில் புதிய பாதுகாப்பு தயாரிப்பு தொழில் பூங்காவை அமைக்க உள்ளோம் இது எஸ்டோனியாவின் பாதுகாப்பு தொழில்துறைக்கு மிகவும் முக்கியமான திட்டம் எனவும் இந்தத் திட்டத்தில் சில பெரிய இந்திய ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்டோனியாவுக்கு வந்து முதலீடு செய்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பாக 155 மில்லி மீட்டர் பீரங்கி குண்டுகளை எஸ்டோனியாவில் தயாரிப்பதற்கு இந்திய நிறுவனங்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருவதாகவும் தற்போதைக்கு எந்தெந்த இந்திய நிறுவனங்கள் என்பதை தான் பொதுவெளியில் அறிவிக்க முடியாது அதே நேரத்தில் எந்த இந்திய நிறுவனங்கள் 155 மில்லி மீட்டர் பீரங்கி குண்டுகளை தயாரிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் இங்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் எது என்பது உங்களுக்கு தெரிய வரும் எனவும் குறிப்பிட்டார்.

இது தவிர கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகளை எஸ்டோனியாவில் முதலீடு செய்த தயாரிப்பதற்கும் இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் இது தொடர்பான இரு தரப்பு ஒத்துழைப்பு மிகவும் தீவிரமாக உள்ளதாகவும் மிக விரைவாக இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய நிறுவனங்களை பார்வையிட்டு அதன் மூலம் இந்திய பாதுகாப்பு தொழில்துறைக்கு முதலீடு செய்வதற்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கும் அதிகரிப்பதற்கும் எஸ்டோனியா மிகச்சிறந்த தேர்வு என்னும் செய்தியை உணர்த்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேல் குறிப்பிட்டபடி இந்தியாவில் 155 மில்லி மீட்டர் பீரங்கி குண்டுகளை இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை பாதுகாப்பு தொழில்துறை நிறுவனமான Munitions India Limited நிறுவனமும் இந்திய தனியார் துறையை சேர்ந்த பாதுகாப்பு தொழில் நிறுவனங்களான Kalyani Group கல்யாணி குழுமம், ADSTL Adani Defence Systems & Technologies Ltd அதானி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப லிமிடெட், பாரத் ஃபோர்ஜ், Economic Ex0losives Ltd, SMPP Ltd, Premier Explosives ஆகியவை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

எஸ்டோனியாவை பொறுத்தவரையில் ரஷ்யாவுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்ளும் நேட்டோ உறுப்பு நாடாகும், எஸ்டோனியா ரஷ்யாவை தனது தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுகிறது எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் பேசும்போது கடந்த 75 ஆண்டு காலமாக நேட்டோ கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஆகவே தான் தற்போது பாதுகாப்பு தொழில்துறையில் எஸ்டோனியா அதிக அளவில் முதலீடு செய்வதாகவும் இது போல முதலீடு செய்வதற்கு பிற நேட்டோ நாடுகளை அதிக அளவில் ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளில் தொடர்ச்சியாக தங்களது பொருளாதாரத்தில் இரண்டு சதவிகிதத்தை ராணுவத்தில் முதலீடு செய்யும் வெகு சில நாடுகளில் எஸ்டோனியாவும் ஒன்றாகும் இந்த ஆண்டு தனது பொருளாதாரத்தில் அதாவது ஜிடிபி யில் 3.4 சதவிகிதத்தை ராணுவத்தில் எஸ்டோனியா அரசு முதலீடு செய்துள்ளது தனது பொருளாதாரத்திற்கு ஏற்ப அதிக அளவில் ராணுவ பட்ஜெட் கொண்ட நேட்டோ நாடுகளில் எஸ்டோனியாவும் ஒன்றாகும், நேட்டோ ராணுவ கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு உறுப்பு நாடும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது பொருளாதாரத்தில் அதாவது ஜிடிபி யில் இரண்டு சதவிகிதத்தை குறைந்த பட்சம் ராணுவத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும் அதை எஸ்டோனியா மிகவும் சிறப்பாக கடைப்பிடித்து வருகிறது, போலந்து 4% உடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 3.5% உடன் 2ஆம் இடத்திலும், கிரீஸ் 3-3.5% உடன் 3ஆம் இடத்திலும், எஸ்டோனியா 4ஆவது இடத்திலும் உள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்.