இந்திய மற்றும் கம்போடிய தரைப்படைகள் இடையே வரலாற்றிலேயே முதல்முறையாக கூட்டு ராணுவ பயிற்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதாவது டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள இந்திய தரைப்படையின் வெளிநாட்டு பயிற்சி மையத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றன வருகிற 8-ஆம் தேதி நிறைவடையும் இந்த பயிற்சிகள் என இந்திய தரைப்படையில் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையிலும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CINBAX Cambodia India Bilateral Army Exercise 2024 என பெயர் இடப்பட்டுள்ள இந்த பயிற்சிகளில் கம்போடிய தரைப்படை சார்பில் 20 பேர் கொண்ட குழுவினரும் இந்திய தரப்பறை சார்பில் ஒரு காலாட்படை பிரிகேடை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி Joint Table Top Exercise என்ற ரகமாகும் அதாவது கூட்டாக ஒரு குறிப்பிட்ட சூழலை முன்வைத்து அது தொடர்பாக விவாதம் மேற்கொண்டு சிறப்பான செயல் திட்டம், நடவடிக்கைகளையும் மேலும் உளவு கண்காணிப்பு செயல்திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த பயிற்சிகளின் முதல் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு நடவடிக்கைகளில் பயங்கரவாத எதற்கு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நோக்கம் மற்றும் தயார் நிலை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும், இரண்டாவது கட்டத்தில் மேற்குறிப்பிட்டபடி விவாதங்களை நடத்தி செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் மூன்றாவது கட்டத்தில் திட்டங்களை கூட்டாக இறுதிச் செய்ய வேண்டும் இதன் மூலம் இரு தரப்பினரும் ஒரு குறிப்பிட்ட சூழலை அடிப்படையாகக் கொண்ட செயல்திட்டங்களை சிறப்பாக வகுக்கும் திறன்கள் வளர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் கம்போடிய இருதரப்பு உறவுகளை பொறுத்தவரையில் அது மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தது பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போல கம்போடியாவும் உத்தமக நாடாக இருந்தாலும் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் அங்கு மிகவும் அதிகமாக உள்ளது இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் மிகுந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கம்போடியாவும் உள்ளடங்கும். அதேபோல வலுவான மொழி சார் இணைப்பும் உள்ளது இந்தியாவின் சமஸ்கிருத மொழி மற்றும் கம்போடியாவின் தேசிய மொழியான கெமெர் மொழி ஆகியவை சுமார் 3000 ஒரே வார்த்தைகளை பங்கிட்டு கொள்கின்றன.
15 வது நூற்றாண்டில் இந்தியா மற்றும் கம்போடியா உறவுகள் அங்கு கெமெர் பேரரசு வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்தும் அதற்குப் பிறகு ஐரோப்பிய காலணி ஆதிக்க நாடுகள் திணித்த அடிமைத்தனத்தை தொடர்ந்தும் பின்னடைவை சந்தித்தது, இந்த நிலையில் இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது அதேபோல கம்போடியா 1952 ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது இதனைத் தொடர்ந்து உடனடியாக இரு நாடுகளும் தூதரக உறவுகளை துவங்கின, கம்போடியாவால் இந்தியா மிகச் சிறந்த நட்பு நாடாகவும் தங்களுக்கான சிறந்த உத்வேகமாகவும் பார்க்கப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேரு மற்றும் கம்போடியாவின் முதல் பிரதமரான அரசர் நோரோதோம் சிஹானூக் இடையான சிறப்பான தனிப்பட்ட உறவுகள் 1954 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் இந்தியா மற்றும் கம்போடியா இடையே சிறப்பான இரு தரப்பு உறவுகளுக்கு வழிவகுத்தது இருவரும் அனுஷ்கா கொள்கையை உலகளவில் பரப்புவதில் இணைந்து செயல்பட்டனர்.
பின்னர் கம்போடிய சர்வாதிகாரி போல் பாட் தலைமையிலான கெம்புச்சிய கம்யூனிச கட்சி நடத்திய சர்வாதிகார ஆட்சியின் கீழ் இந்தியா மற்றும் கம்போடியா இடையேயான உறவுகள் பெரும் பின்னடைவை சந்தித்தன இந்த காலகட்டத்தை கெமர் ரூஜ் என அழைக்கின்றனர், வியட்னாமுக்கு எதிராக சீனா இவர்களை கம்போடியாவில் வளர்த்து விட்டது இவர்களுக்கு வடகொரியாவும் ஆதரவளித்தது பின்னர் வியட்நாம் படையெடுப்பில் இவர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கெம்புச்சிய மக்கள் குடியரசு ஆட்சி அமைக்கப்பட்டு ஹெங் சாம்ரின் பிரதமர் ஆனார் அப்போது மீண்டும் 1981 ஆம் ஆண்டு இந்தியா கம்போடியா தூதரக உறவுகள் துவங்கப்பட்டது.
அதேபோல கலாச்சார ரீதியாக கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் எனும் இந்து மற்றும் புத்த கோயிலின் தொல்பொருள் ஆய்வு அகழ்வாராய்ச்சி மற்றும் புணர் நிர்மாண பணிகளில் உதவுவதற்காக கம்போடிய அரசின் கோரிக்கை அடிப்படையில் தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவை இந்தியா 1986 ஆம் ஆண்டு அனுப்பி வைத்தது அதேபோல எண்பதுகளில் வெவ்வேறு கம்போடிய அரசியல் குழுக்கள் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டது 1980 பாரி சமாதான ஒப்பந்தத்தில் கம்போடியாவில் அமைதி ஏற்படுத்துவதில் இந்தியா காட்டிய அதீத உறுதி மற்றும் 1991 ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா காட்டிய தீவிரம் ஆகியவை கம்போடிய அரசால் நன்றி உணர்வுடன் என்றும் நினைவு கூரப்படுகிறது.
அதேபோல கடந்த 1993 ஆம் ஆண்டு கம்போடியாவில் தேர்தல் நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அமைதி காப்பப்படையில் இந்திய ராணுவமும் இந்திய காவல் துறையின் பெரும் பங்கு வகித்தன இவர்களின் பங்களிப்பு காரணமாக 1993ஆம் ஆண்டு நடைபெற்ற கம்போடிய தேர்தல் மூலம் அங்கு ஜனநாயகம் மலர்ந்து பெரும் வெற்றி கிடைத்தது என்றும் இந்தியாவில் Act East Policy எனப்படும் தென்கிழக்கு ஆசியாவை நோக்கிய திட்டத்தில் கம்போடியா மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் கம்போடியா இடையே பாதுகாப்பு துறை, மனிதவளத்துறை, சமூக நலத்துறை, கல்வி, பொருளாதாரம், நிதி, தொழில் மற்றும் வணிகம், மருத்துவம் மற்றும் சுகாதார துறை, உணவு, வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், வேதி பொருட்கள், ஆடை அணிகலன்கள், லெதர் போன்ற துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன அதேபோல கடந்த 2000 ஆவது ஆண்டில் மிகாங்- கங்கை ஒத்துழைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது இதில் இந்தியாவுடன், கம்போடியா உட்பட மிகாங் நதி பாயும் ஐந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்னாம் உள்ளது கூடுதல் சிறப்புமிக்க தகவல் ஆகும்.