அர்மேனியாவுக்கு எதிராக இந்திய ஆயுதங்களை வாங்குவதற்கு கோரிக்கை விடுத்த அசர்பைஜான் நிராகரித்த இந்திய அரசு !
அர்மேனியா மற்றும் அசர்பைஜான் இடையேயான நகார்னோ கராபக் பிரச்சனை காரணமாக போர் மூண்டுள்ளது மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தங்களது நட்பு நாடுகளிடமிருந்து அதிக அளவு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றன அந்த வகையில் அசர்பைஜான் இஸ்ரேல் துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது அதே போல அர்மேனியாவும் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது.
இதில் அர்மேனியா இந்தியாவிடம் இருந்து கணிசமான அளவில் பீரங்கிகள், ஏவுகணைகள், பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், ரேடார் அமைப்புகள் ஆகியவற்றை வாங்கியுள்ளது இது தவிர தனது விமான படையில் உள்ள போர் விமானங்களை நவீனப்படுத்துவது மற்றும் அவற்றில் இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கிய அஸ்திரா வான் தாக்குதல் ஏவுகணைகளை இணைப்பது போன்றவற்றுக்கான ஒப்பந்தங்களையும் இந்தியாவுடன் செய்து கொள்ள மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
அர்மேனியாவை பொறுத்தவரையில் சர்வதேச அளவில் மற்றும் புவிசார் அரசியலில் இந்தியாவின் தீவிர நட்பு நாடாக உள்ளது குறிப்பாக காஷ்மீர் விவாகரத்தில் இந்தியாவிற்கு தீவிரமான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையிலும் சர்வதேச அரங்கிலும் அருமையான அரசு அளித்து வருகிறது, இந்தியாவைப் பொறுத்த வரையில் அர்மேனியா மிகச்சிறந்த மற்றும் நிலையான பாதுகாப்பு மற்றும் அரசியல் கூட்டாளி ஆகும், இந்தியாவைப் போல பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுடனும் அர்மேனியாவுக்கு நல்ல உறவுகள் உள்ளது இதன் காரணமாக கிரீஸ் அரசு தனது பழைய சோவியத் ரஷ்ய ஆயுதங்களை அர்மேனியாவிற்கு அனுப்பி வைக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
இந்தியா பிரான்ஸ் கிரீஸ் ஆகிய மூன்று நாடுகளும் அர்மேனியாவுக்கு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை உதவிகளை செய்து வருகின்றன அர்மேனிய ராணுவத்தின் திறன்களை அதிகரிப்பதற்கு பல்வேறு உதவிகளையும் அளித்துள்ளன குறிப்பாக இந்தியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் துருக்கிக்கு எதிராக அர்மேனியாவிற்கு தீவிர ஆதரவு அளித்து வருகின்றன இத்தகைய செயல்பாடுகள் அஸர்ப்பை ஜான் நாட்டிற்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் இதனை ஈடுகட்டுவதற்கு அசர்பைஜான் வேறொரு நட்பு நாடு மூலமாக அதாவது இந்தியாவுக்கும் அசர்பைஜானுக்கும் நட்பு நாடாக உள்ள ஒரு நாட்டின் மூலம் இந்தியா ஒரு நீண்ட நாள் ஆயுத இறக்குமதியாளரை தேடினால் அதற்கு அசர்பைஜான் சிறந்த தேர்வு எனவும் அர்மேனியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இணையாக இந்தியாவுடன் அசர்பை ஜானும் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும் தூதுவிட்டுள்ளது ஆனால் இந்தியா இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த விவகாரத்தை பொருத்தவரையில் அசர் பைஜான் அரசு இந்தியாவை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
அஸர்பைஜானை பொறுத்தவரையில் தெற்கு காக்கஸ் பகுதியில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகும் அதே நேரத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் எதிரியான துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மிக ஆழமான புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு துறை உறவுகளை கொண்டுள்ளது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானும் அசர்வேஜானும் துருக்கியும் தங்களது முத்தரப்பு ஒத்துழைப்புகளை அதிகப்படுத்தி வருகின்றன அதேபோல ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அசர்பைஜான் அரசு நிலைப்பாட்டை எடுத்துள்ளது
இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் துருக்கி அசர்பை ஜான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டனர் இந்தியாவுடன் ஆன உறவை பொருத்தவரையில் பொருளாதார உறவுகள் மட்டும் சீராக உள்ளது அரசியல் மற்றும் பாதுகாப்பு துறை உறவுகள் மோசமாக உள்ளது ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்திய அரசு அசர்பைஜான் உடைய கோரிக்கையை நிராகரித்திருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.