ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்த சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் !
ரஷ்ய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான TASS மற்றும் RIA ஆகியவை ரஷ்ய அதிபர் மாளிகையில் பணியாற்றும் மூத்த ரஷ்ய அதிகாரி ஒருவர் முன்னாள் சிரியா அதிபர் பசர் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவிற்கு விமானத்தில் பத்திரமாக வந்து சேர்ந்ததாகவும் அவருக்கு அரசியல் அடைக்கலத்தை ரஷ்ய அரசு அளித்து இருப்பதாகவும் தெரிவித்ததாக செய்திகளை வெளியிட்டுள்ளன முன்னாள் சிறிய அதிபர் பஷர் அல் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விமானத்தில் செல்லும்போது அவர் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னதாக ரஷ்ய அரசு வெளியிட்டிருந்த தகவலின் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் கிளர்ச்சியாளர்களுடன் ரஷ்யாவின் தலைமையில் நடத்திய பேச்சு வார்த்தையில் ஆட்சியை அமைதியான முறையில் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் திடீரென நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன தற்போதைக்கு சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிரியாவின் 14 வருட உள்நாட்டு யுத்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது அந்நாட்டின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் மிக நெருங்கிய கூட்டாளியான ரஷ்யா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தை இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவில் துணை தூதுவர் டிமித்ரி போல்யான்ஸ்க்கி தனது telegram வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரம் மற்றும் சிரியாவில் கணிசமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அந்நாட்டின் மிகப்பெரிய கிளர்ச்சியாளர்கள் படையின் தலைவன் முகமத் அபுல் ஜோலானியும் அவன் தலைமையிலான ஹையத் அல் தஹ்ரீர் ஷாம் கிளர்ச்சியாளர்கள் குழுவும் தான் இனி சிரியாவின் அரசியலில் பெரும் பங்கு வகிப்பார்கள் என பரவலாக கருதப்படுகிறது இவன் முன்னால் அல்காய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்பதும் குறிப்பிடத்தக்கது இவன் தோற்றுவித்த அல் நுஸ்ரா இயக்கம் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தை விடவும் மிகக் கொடூரமானதாக கருதப்படுகிறது ஆறு மாத குழந்தைகளை கூட தலைகளை வெட்டிக் கொல்லும் கொடூர செயல்கள் புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா தோற்றுவித்த இந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் ஒரு பயங்கரவாத மத அடிப்படைவாத இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.