இந்திய கடற்படையின் எதிர்காலம் 10 ஆண்டுகளில் 96 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் – இந்திய கடற்படை தலைமை தளபதி !!

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி சமீபத்தில் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் தலைமையகத்தில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு இந்திய கடற்படை சார்ந்த விவகாரங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பேசினார் அப்போது இந்திய கடற்படையின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் மட்டுமே 4 முக்கிய தளபாடங்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளதாகவும் அவற்றில் இரண்டு போர்க்கப்பல்களும் ஒரு நீர்மூழ்கி கப்பலும் உள்ளடங்கும் எனவும் அதாவது உள்நாட்டிலேயே வடிவமைத்த தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய அதிநவீன இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த விசாகப்பட்டினம் ரக நாசகாரி போர்க்கப்பல்களில் கடைசியான INS SURAT (D-69) ஐ என் எஸ் சூரத், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீலகிரி வகை என்ற இந்திய வரலாற்றிலேயே மிகவும் அதிநவீனமான ஃப்ரிகேட் ரக கப்பல்களில் முதலாவதான INS NILGIRI ஐ என் எஸ் நீலகிரி போர்க்கப்பல் மற்றும் கல்வரி ரக டீசல் எலக்ட்ரிக்கல் நிர்மூழ்கி கப்பல்களில் கடைசியும் ஆறாவதுமான INS VAGSHEER (S-26) ஐ என் எஸ் வாக்ஷீர் ஆகியவை ஆகும்.

அதேபோல கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்கனவே இந்திய கடற்படையில் ரஷ்யாவில் கட்டப்பட்டு சேவையில் உள்ள ஆறு தல்வார் ரக போர் கப்பல்களின் தொடர்ச்சியாக மீண்டும் இந்தியா ரஷ்யாவுடன் நான்கு இந்தியாவில் தல்வார் எனவும் ரஷ்யாவில் க்ரிவாக் எனவும் அழைக்கப்படும் ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர்க்கப்பல்களுக்காக ஒப்பந்தம் செய்து கொண்டது அதன்படி முதல் இரண்டு கப்பல்களான INS TUSHIL துஷீல் மற்றும் INS TAMALA தமாலா ரஷ்யாவின் யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் மீதமுள்ள INS TRIPUT த்ரிபுத் மற்றும் பெயரிடப்படாத மற்றுமொரு கப்பல் என இரண்டு கப்பல்களும் இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான தளத்தால் கட்டப்பட்டு வருவதாகவும்

ரஷ்யாவில் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டு வரும் அதி நவீன ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர்க்கப்பல்களில் முதலாவதும் தற்போது கடல் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதுமான INS TUSHIL ஐ என் எஸ் துஷீல் இந்த மாதம் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் இரண்டாவது கப்பலான INS TAMALA ஐ என் எஸ் தமாலா அடுத்த ஆண்டு முதல் காலண்டில் அதாவது முதல் மூன்று மாதங்களில் இந்தியா கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டு வரும் INS TRIPUT ஐ என் எஸ் த்ரிபுத் கப்பல் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் எனவும் கடைசி கப்பல் 2027 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 96 வெவ்வேறு வகையான போர்க்கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை படையில் இணைக்க உள்ளதாகவும் அவற்றில் ஏற்கனவே 62 வெவ்வேறு வகையான போர் கப்பல்களும் ஒரு நீர்மூழ்கி கப்பலும் தற்போது கட்டுமான பணிகளில் உள்ளதாகவும் தற்போது முதல் அடுத்த ஆண்டு வரை ஒவ்வொரு மாதமும் ஒரு கப்பல் இந்திய கடற்படையில் தொடர்ந்து வரிசையாக இணைக்கப்படும் எனவும்

SSN – Ship Submersible Nuclear என்ற அணுசக்தியால் இயங்கும் அதிவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை பொறுத்தவரையில் இந்திய கடற்படைக்காக இத்தகைய ஆறு நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் முதல் கட்டமாக இத்தகைய இரண்டு நீர் மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான ஒப்புதலை இந்திய அரசு அளித்துள்ளதாகவும் முதலாவது நீர்மூழ்கி கப்பல் வருகிற 2036 – 37 காலகட்டத்தில் இந்திய கடற்படையில் இணையும் அடுத்த கப்பல் மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய கடற்படையில் இணையும் என எதிர்பார்ப்பதாகவும் மீதமுள்ள நான்கு கப்பல்களும் அடுத்தடுத்த இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டு இந்திய கடற்படையில் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இரண்டாவது அதிநவீன SSBN – ship submersible ballistic nuclear என்றழைக்கப்படும் அணுசக்தியால் இயங்கக்கூடிய அணு ஆயுத தாக்குதல் நிர்மூழ்கி கப்பலான INS ARIGHAT ஐ என் எஸ் அரிகாத் கப்பலை குறிப்பிட்டு நிலம் கடல் ஆகாயம் என மூன்று மார்க்கமாக அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இந்தியாவின் முப்பரிமான அணு ஆயுத தாக்குதல் கட்டமைப்பில் மேல் குறிப்பிட்ட நீர்மூழ்கி கப்பல் இணைக்கப்பட்டுள்ளதாகவும்

அதிகரித்து வரும் சீன கடற்படையின் பலம் மற்றும் அதிகரித்து வரும் சீன கடற்பைடயின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீன கடற்படையின் செயல்பாடுகள் ஆகியவை காரணமாக இந்த ஆண்டு அணுசக்தியால் இயங்கும் அதுவேக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் திட்டத்திற்கான ஒப்புதலை இந்திய அரசு அளித்ததாகவும் சுதந்திர இந்தியாவின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான இது 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இந்திய தயாரிப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் எனவும் அவர் கூடுதல் சிறப்பு மிக்க தகவலை தெரிவித்தார்.