நேற்று முன்தினம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் 47வது அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார் இதைத் தொடர்ந்து அவரது நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் யார் யார் நியமிக்கப்படுவார்கள் என்பது பற்றிய விவாதங்கள் தற்போது அமெரிக்கா முழுவதும் துவங்கி உள்ளது இது உலகம் முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வகையில் விவேக் ராமசாமி, தூள்சி கபார்ட், ராபர்ட் கென்னடி ஜூனியர், இலான் மஸ்க் ஆகியோரின் பெயர்கள் முன்னணி இடத்தை பிடித்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறையும் உலகின் முன்னணி உளவுத்துறைகளில் ஒன்றான CIA Central Intelligence Agency சி ஐ ஏ வின் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கரான கஷ் பட்டேல் என பரவலாக அறியப்படும் கஷ்யப் பட்டேல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இவர் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சியின் நிர்வாகி ஆவார் மேலும் அதிபர் ட்ரம்பின் முந்தைய ஆட்சியில் மிக முக்கியமான பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை பதவிகளை வகித்துள்ளார் மேலும் இவர் அதிபர் ட்ரம்பின் மிகவும் தீவிரமான ஆதரவாளராக கருதப்படுகிறார் அதிபர் ட்ரம்புடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பலமுறை முன்னணியில் நின்று அதிபர் ட்ரம்புக்காக ஆதரவு திரட்டி உள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி அதிபர் ட்ரம்புடைய மிக நெருக்கமான அரசியல் கூட்டாளிகள் பலர் கஷ்யப் பட்டேலின் பெயரை அமெரிக்க உளவுத்துறையின் தலைமை பொறுப்புக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸின் மேலவையான செனட் அவையின் ஒப்புதல் தேவைப்படுகிறது ஒருவேளை செனட் அவையின் ஒப்புதல் இதற்கு கிடைக்காவிட்டால் கஷ்யப் பட்டேலுக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முந்தைய ஆட்சியில் கஷ்யப் பட்டேல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பாராளுமன்ற உளவுத்துறை கமிட்டி ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்தார் மேலும் அமெரிக்கா சார்ந்த பாதுகாப்பு விவகாரங்களில் இவரது சிந்தனைகள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை மிகவும் கவர்ந்ததாக கூறப்படுகிறது எனினும் மூத்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கஷ்யப் பட்டேலை விரும்பவில்லை காரணம் அவர் அதிபர் டொனால்ட் ட்ரம்பை கவர்வதற்கு மட்டுமே முயல்வதாக அவர்கள் கருதினர் கஷ்யப் பட்டேல் கடந்த ஆண்டு ஒரு நேர்காணலின்போது தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிபர் ட்ரம்பின் எதிரிகளை தேடி வருவதாக மிரட்டல் விடுத்து விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்