அணு ஆயுத போருக்கு தயார் மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி !!

அமெரிக்க ராணுவத்தின் அணு ஆயுத கட்டளையகத்தின் மூத்த அதிகாரியான ரியர் அட்மிரல் தாமஸ் புகான்னன் சமீபத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள CSIS Center for Strategic & International Studies முலோபாய மற்றும் சர்வதேச படிப்புகள் மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அமெரிக்கா ஒரு அணு ஆயுத போருக்கான சூழலை விரும்பவில்லை என்ற போதிலும் அத்தகைய ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு முழு தயார் நிலையுடன் அமெரிக்க ராணுவத்தின் அணு ஆயுதப் படைகள் இருப்பதாக பேசியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் பேசும்போது இத்தகைய ஆபத்துகளை தவிர்ப்பது அல்லது குறைப்பது எங்களது நோக்கம் எனவும் ஆனால் அத்தகைய ஒரு அணு ஆயுதப் போர் சூழலை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி வந்தால் அமெரிக்கா அதற்கு ஏற்ற அல்லது அதற்கு விருப்பமான முறையில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தங்களை தாக்கும் நாட்டின் மீது அணு ஆயுத பிரயோகம் செய்வது மட்டுமின்றி அதாவது தங்களை தாக்கும் நாட்டின் மீது அனைத்து அணு ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் மேலும் அணு ஆயுதங்களை இதர எதிரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மேலும் சில அணு ஆயுதங்களை அதாவது குறிப்பிட்ட அளவிலான அணு ஆயுதங்களை பாதுகாப்பாக தயார் நிலையில் வைத்திருப்போம் எனவும் பேசியுள்ளார்.

மேல் குறிப்பிட்ட அனைத்து அணு ஆயுதங்களையும் பிரயோகிக்க மாட்டோம் என்னும் இந்த பேச்சு மூலமாக ரஷ்யா மட்டும் இன்றி தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் எதிரி நாடுகளையும் மறைமுகமாக அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல் பட்டியலில் வைத்துள்ளது வெளிப்பட்டுள்ளது அதாவது மேற்காசியாவில் ஈரான் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் சீனா மற்றும் வடகொரியா ஆகிய மூன்று நாடுகளையும் அமெரிக்கா தனது அணு ஆயுத தாக்குதல் பட்டியலில் வைத்துள்ளது இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்கா இத்தகைய ஒரு அணு ஆயுத போர் சூழலை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ஆனால் அத்தகைய ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு வலுவான ஒரு நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அணு ஆயுத போர் போன்ற சூழலுக்கும் தங்களது படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரியின் இந்த பேச்சு மூலமாக அணு ஆயுத போர் முறையில் அமெரிக்கா தனது வலுவான இடத்தை தக்க வைத்துக் கொள்வதன் நோக்கம் வெளிபட்டுள்ளதாகவும் இத்தகைய பேச்சுக்கள் சர்வதேச உறவுகளில் குறிப்பாக அமெரிக்கா ரஷ்யா இடையே பதட்டத்தை அதிகரிக்கும் எனவும் உலகளாவிய அளவில் அணு ஆயுத போட்டி மற்றும் பரவலை அதிகரிக்கும் எனவும் சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் ரியர் அட்மிரல் தாமஸ் புகான்னன் பேசும்போது புதிய அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கு அமெரிக்க ராணுவம் விசுவாசமாக இருப்பதாகவும் அமெரிக்க கடற்படையின் அணு ஆயுத தாக்குதல் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்க அணு ஆயுத ஏவுகணைகள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க விமானப்படையின் அணு ஆயுத தாக்குதல் குண்டு வீச்சு விமானங்கள் முழு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து உள்ளதாகவும் இதன் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்க அணு ஆயுத படைகளும் முழு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது கூடுதல் தகவலாகும்.