மூன்றாவது உலகப்போர் துவங்கி விட்டதாக கருதுகிறேன் – முன்னாள் உக்ரைன் ராணுவ தளபதி !!

முன்னாள் உக்ரைன் தலைமை ராணுவ தளபதியும் இங்கிலாந்துக்கான இந்நாள் உக்ரைன் தூதுவருமான ஜெனரல் வலெரி சலூஸ்னி சமீபத்தில் நடைபெற்ற உக்ரைன்ஸ்கா பிராவ்தா எனும் புகழ்பெற்ற உக்ரைனிய பத்திரிக்கை ஊடகத்தின் UP100 விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் இந்த 2024 ஆம் ஆண்டில் மூன்றாவது உலகப்போர் துவங்கி விட்டதாக நாம் கருதுவதற்கான அனைத்து காரணிகளும் உள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த இரண்டு ஆண்டு காலமாக உக்கிரேன் உடன் ரஷ்யா நடத்தி வரும் போரில் தற்போது வடகொரிய இராணுவத்தினர் கலந்து கொள்வது மற்றும் பிற ரஷ்ய நட்பு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அளித்து ஆதரிப்பதை சுட்டி காட்டி ரஷ்யாவின் சர்வாதிகார நட்பு நாடுகளும் கலந்து கொண்டுள்ளது போரின் தன்மையை அடியோடு மாற்றி உள்ளதாகவும் மேலும் இந்தப் போரை பல தரப்பு போராக மாற்றியுள்ளதாகவும் அந்த நிகழ்வில் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசும் போது தற்போது போர்க்களம் முன்னணியில் வடகொரிய ராணுவத்தினர் உக்கிரன் படைகளுக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே ஈரான் தயாரிப்பு ஷாஹித் தற்கொலை தாக்குதல் ஆளில்லா வானூர்திகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதேபோல சீன தயாரிப்பு உபகரணங்களும் ஆயுதங்களும் இந்த போரில் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய அளவில் நேரடி உதவி புரிவதாகவும்

ஆகவே உக்கரைனுடைய நட்பு நாடுகள் தற்போது வாய்ப்பு இருக்கும்போதே இந்தப் போர் உக்ரைன் எல்லையை தாண்டி வேறு நாடுகளை நோக்கி பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தற்போது உக்கிரேன் எல்லைக்குள்ளாகவே இந்த போரை நிறுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் எங்களது நட்பு நாடுகள் இதை புரிந்து கொள்ளவில்லை எனவும் பேசியுள்ளார்.

மேலும் கூடுதலாக அவர் பேசும் போது ஒவ்வொரு நாளும் உக்கிரேனுக்கான எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் உக்ரைன் தனியாக பல நாடுகளை எதிர்த்து போரிட்டு வருவதாகவும் இந்தப் போரில் அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உக்கிரேன் தாக்குப் பிடித்து வருவதாகவும் ஆனால் நீண்ட காலப் போக்கில் மிகப்பெரிய அளவில் உதவி இல்லாமல் உக்கிரன் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் எனவும் ஜெனரல் வலேரி சலூஸ்னி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்