சமீபத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சி ஒன்றில் டாடா குழுமத்தின் டாட்டா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் எனப்படும் பாதுகாப்பு தொழில் துறை நிறுவனம் மொராக்கோ தரைப்படைக்காக தான் தயாரித்து உள்ள மாற்றி அமைக்கப்பட்ட WhAP 8×8 கவச வாகனத்தை காட்சிப்படுத்தி உள்ளது இது மொராக்கோ தரைப்படையின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்ட வடிவமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்திய தரைப்படைக்கு தயாரிக்கப்பட்ட WhAP 8×8 கவச வாகனங்களில் கதவு பகுதி சிறியதாக உள்ளது ஒப்பீட்டளவில் மொராக்கோ தரைப்படைக்காக தயாரிக்கப்படும் கவச வாகனங்களில் வீரர்கள் விரைவாக உள்நுழையவும் வெளியேறவும் உதவும் வகையில் பெரிய வாசல்களும் பெரிய கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இருக்கை வசதியை பொறுத்தவரையில் இந்திய வடிவத்தில் வீரர்கள் விரைவாக நகர உதவும் வகையிலும் வீரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும் வகையிலும் வாகனத்தின் நடுப்பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன இதில் வீரர்கள் முகத்தோடு முகம் பார்க்க முடியாது. அதே நேரத்தில் மொராக்கோ வடிவத்தில் வீரர்கள் வாகனத்தின் வலது மற்றும் இடது புறத்தில் இருக்கும் படி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன இதன் மூலம் வீரர்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள முடியும் இதன் காரணமாக வீரர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பும் சிறப்பாக இருக்கும்.
அதேபோல வாகனத்தின் ஸ்டியரிங்கை பொறுத்த வரையில் இந்திய வடிவத்தில் அது வலது புறம் அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் மொராக்கோ வடிவத்தில் இது இடது புறம் அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவைப் போல் வலதுபுரத்தில் மொறக்கோவில் வாகனம் ஓட்டுவதில்லை மாறாக இடது புறத்தில் வாகன ஒட்டி இருப்பார் அதை அடிப்படையாக வைத்து மொராக்கோ தரைப்படையின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மொராக்கோ தரைப்படையின் கோரிக்கைக்கு ஏற்ப டாட்டா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் குறைந்த காலகட்டத்தில் இத்தகைய மாற்றங்களை செய்து கொடுத்துள்ளதன் மூலமாக வாடிக்கையாளர்களின் தேவையை சந்திப்பதில் டாட்டா நிறுவனம் காட்டும் வேகம் மற்றும் கவனம் ஆகியவை வெளிப்பட்டுள்ளது மொராக்கோ தரைப்படையின் தேவைக்கு ஏற்ப இந்த வாகனத்தில் சிறப்பான முறையில் கட்டமைப்பு மற்றும் செயல்திறன் சார்ந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு மிக்க தகவலாகும்