பிரிட்டன் தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய துறை அமைச்சர் லிஸ் கெண்டால் புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஊடகமான ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது ரஷ்யா இங்கிலாந்து மீது சைபர் தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராகி வருவதாகவும் அதற்கான திட்டங்களை தயாராக வைத்துள்ளதாகவும் ரஷ்யாவுடன் ராணுவ ரீதியான மோதல் மட்டுமின்றி ஒரு மறைமுக சைபர் யுத்தமும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அன்று ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்தின் ட்ரெவோர் பிலிப்ஸ் உடனான சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது உக்ரேன் மட்டுமின்றி உக்ரேனுடைய நட்பு நாடுகளிலும் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு ரஷ்யா தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் பயன்படுத்தி முயற்சி செய்யும். ஆகவே நாம் விழிப்புடன் இருப்பது அவசியம் எனவும், இந்த சைபர் ஹேக்கர்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் எனவும் ,கடந்த பல மாதங்களாக பிரிட்டன் அரசாங்கம் ரஷ்யாவால் இங்கிலாந்து மீது தொடுக்கப்படும் சைபர் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதி செய்வதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் லிஸ் கெண்டால் தெரிவித்துள்ளார்.
இது தவிர இங்கிலாந்து அரசில் பிரதமருக்கு அடுத்த அதிகாரத்தை கொண்ட சான்சலர் ஆஃப் டுச்சி ஆப் லான்காஸ்டர் பேட் மெக்ஃபாடன் விரைவில் நேட்டோ சைபர் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு ராணுவ யுத்தத்தை தவிர்த்த மறைமுக யுத்தத்தில் ரஷ்யாவால் ஏற்படும் ஆபத்துகளின் தன்மையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் கடந்த காலத்தில் ரஷ்யா இங்கிலாந்தின் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்திய உள்ளதாகவும் இனி வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல் நடத்துவதற்கு தயக்கம் காட்டாது எனவும்
இத்தகைய சைபர் தாக்குதல்கள் மூலமாக லட்சக்கணக்கான இங்கிலாந்து குடிமக்களுக்கான மின்சாரத்தை நிறுத்துவதற்கு ரஷ்யாவால் முடியும் எனவும் தற்போதைக்கு ரஷ்யா என்ன செய்கிறது என்பது பற்றி பெரிய அளவிற்கு ஒன்றும் தெரியவில்லை ஆனாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இங்கிலாந்து மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை முறியடித்து வருவதாகவும் உக்கிரனுக்கு ஆதரவு அளிப்பதால் ரஷ்யா அத்தகைய நாடுகளை குறிவைத்து வருவதாகவும் ஆனால் அதற்கு பயந்து விடாமல் தொடர்ந்து உக்கிரேனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.