அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் தலைமை பொறுப்பான பொதுச் செயலாளர் பதவிக்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய பொறுப்புநேட்டோ ராணுவ கமிட்டி தலைவர் பதவி ஆகும். இந்த பொறுப்பில் உள்ளவர் தான் முன்னாள் நெதர்லாந்து ராணுவ தலைமை தளபதி அட்மிரல் ராப் பாவ்ர் இவர் தற்போது நேட்டோவின் ஒட்டுமொத்த ராணுவ விவகாரங்களுக்கும் பொறுப்பானவர் ஆவார். சமீபத்தில் இவர் பெல்ஜியம் தலைநகர் பிரேசல்ஸ் நகரில் நடைபெற்ற EPC European Policy Centre ஐரோப்பிய கொள்கை மைய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ரஷ்யா ஐரோப்பா மீது படையெடுக்கும் பட்சத்தில் முதல் தாக்குதலை நேட்டோ நடத்த வேண்டும் அதாவது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு முன்பதாகவே சுதாரித்துக் கொண்டு ரஷ்யாவின் ஏவுகணை அமைப்புகளை அழிக்க வேண்டும் எனவும் அதற்கான திட்டங்களை செயல்பாடுகளை செயல் திறன்களை வகுக்கவும் வளர்க்கவும் வேண்டும் எனவும் இத்தகைய முதல் தாக்குதல் திறன்கள் மற்றும் தற்காப்பு திறன்களில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் எனவும் ரஷ்யா நம் மீது தாக்குதல் நடத்தும் வரை காத்திருக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது மேற்கத்திய தொழில்துறையும் ரஷ்யா உடனான ஒரு போர் சூழலுக்கு தங்களை பக்குவப்படுத்தி தகவமைத்துக் கொள்ள வேண்டும் காரணம் ஒரு போர் ஏற்படும்போது அனைத்து விதமான திறன்களும் எதிரிகளால் நம் மீது உபயோகிக்கப்படும் நாளுக்கு நாள் மேற்கத்திய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் தொழில் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் சீனாவும் ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆன தங்களது சப்ளை திறன்களை பயன்படுத்தி நம்மை முடக்கி விடாமல் இருப்பதற்கான தற்சார்பு திறன்களை நமது தொழில்துறை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் எனவும்,
முன்பு நாம் ரஷ்யாவின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான கேஸ்ப்ராம் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக நினைத்திருந்தோம் ஆனால் உண்மையில் நமது ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் உடனானது இது சீனாவுக்கும் பொருந்தும் நமது ஒப்பந்தங்கள் சீன நிறுவனங்கள் உடனானது அல்ல மாறாக சீன அதிபர் உடனானவை ஆகும் மேற்கத்திய நாடுகளுக்கான 60% அரியவகை கனிமங்கள் சீனாவில் தோண்டி எடுக்கப்படுபவை மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட 90% அரியவகை கனிமங்கள் சீனாவில் இருந்து வருபவை ஆகும் எனவும் இது தவிர சீனாவில் இருந்து பல்வேறு பொருட்கள் குறிப்பாக மருந்து பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதி பொருட்கள் வருகின்றன எனவும்
ஒரு போர் ஏற்படும் பட்சத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா இவற்றின் சப்ளைகளை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் சீன கம்யூனிஸ அரசாங்கம் இதனை பயன்படுத்தாது என நாம் நினைத்தால் அது மிகப் பெரிய முட்டாள்தனம் எனவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சார்ந்த வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர்கள் பணிகரீதியாக அவர்கள் எடுக்க முடிவுகள் அவர்களின் நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதை உணர வேண்டும் எனவும் ஆகவே மேற்கத்திய தொழில்துறை தங்களது சப்ளை செயின்கள் எதிரி நாடுகளால் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் காரணம் ராணுவம் சண்டைகளை வென்றாலும் ஒட்டுமொத்த போரிலும் வெற்றியை நிர்ணயிப்பது பொருளாதாரம் தான் எனவும் ஆகவே அனைத்து இன்றியமையாத பொருட்களின் சப்ளைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதே மிகப்பெரிய தற்காப்பு தான் எனவும் கூறியுள்ளார்