பிரிட்டன் நாட்டின் கூட்டுப் படைகள் துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராப் மார்கோவான் சமீபத்தில் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்பு ஆஜராகி பேசும் போது ரஷ்ய இராணுவத்தை எதிர்த்து இங்கிலாந்து ராணுவம் போரிட தயார் எனவும் இன்று இரவே அப்படி போரிடுவதற்கு உத்தரவு பெற்றால் பிரிட்டன் ராணுவம் போரிடும் எனவும் ரஷ்யா கிழக்கு ஐரோப்பா மீது படையெடுத்தால் பிரிட்டன் ராணுவம் வேடிக்கை பார்க்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் பாராளுமன்ற பாதுகாப்பு கமிட்டியில் உறுப்பினர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்ய தரப்பில் இருந்து ஏதேனும் மிகப்பெரிய பிரச்சனை கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்டால் நேட்டோவின் கிழக்கு எல்லையை பாதுகாக்கும் பொருட்டு எத்தனை பிரிட்டன் பிரிகேடுகள் ரஷ்யாவுடனான நேட்டோவின் கிழக்கு எல்லையை சென்றடையும் எனக் கேட்டபோது பிரிட்டன் உடைய படைகள் உடனடியாக நகர்த்தப்படும் எனவும் ஏற்கனவே கிழக்குப் பகுதியில் உள்ள எஸ்ட்டோனியா நாட்டில் ஆயிரம் பிரிட்டன் வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும்
இது தவிர பிரிட்டன் தரைப்படையின் நான்காவது ப்ரிகேடின் ஆயிரக்கணக்கான வீரர்கள் முழு போர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு ஐரோப்பா குறிப்பாக அந்தப் பகுதியை சேர்ந்த ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளூம் எஸ்டோனியா நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் உறுதி செய்வதிலும் இங்கிலாந்து உறுதியாக உள்ளதாகவும் லெஃப்டினன்ட் ஜெனரல் ராப் மார்கோவான் பாராளுமன்ற பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் சர் ராப் மார்கோவான் பிரிட்டன் நாட்டின் ராயல் மறைன் படை அதிகாரி ஆவார் இவர் ராயல் மறைன் படையின் முன்னாள் தளபதி ஆவார் அதற்குப் பிறகு தற்போது ஒட்டுமொத்த இங்கிலாந்து ராணுவத்தின் கூட்டுப்படை துணை தளபதியாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டு நிலவரப்படி இங்கிலாந்து தரைப்படையில் 74296 முழு நேர வீரர்கள், 25934 ரிசர்வ் வீரர்கள் 4244 கூர்கா வீரர்கள் 4612 இதர வீரர்கள் என ஒட்டுமொத்தமாக 109086 வீரர்களும், இங்கிலாந்து விமானப்படையில் 31,025 முழு நேர வீரர்கள் 3028 ரிசர்வ வீரர்கள் என 34053 வீரர்களும் உள்ளனர், இங்கிலாந்து கடற்படையில் 31906 முழு நேர வீரர்கள் 3309 ரிசர்வ் வீரர்கள் என 35215 வீரர்களும் உள்ளனர். பனிப்போர் காலம் முதல் குறிப்பாக 1990கள் முதல் இங்கிலாந்து ராணுவத்தின் படைபலம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது தற்போது மிகப்பெரிய அளவில் ஐரோப்பாவில் பதட்டம் மிகவும் சூழலில் கூட இங்கிலாந்தின் படை பலம் மிகவும் குறைவாகவே உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.