கடந்த மாதம் முதல் இந்திய உளவுத்துறை அமைப்புகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் சமூகவலை தள பயன்பாட்டை அதிகப்படுத்தியுள்ளதை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்துள்ளன அதாவது சமூக வலைதளங்கள் மூலம் இந்திய காஷ்மீர் பகுதியில் இளைஞர்கள் இடையே பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை ஊக்குவித்து காஷ்மீர் மண்ணின் மைந்தர்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தும் முயற்சிகள் மீண்டும் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் மட்டும் இது தொடர்பான சுமார் 2000க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகளை இந்திய உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் இதனை கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய அளவில் சமூக வலைதள பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது காரணம் கடந்தாண்டி இதே காலகட்டத்தில் இது தொடர்பான வெறும் 89 பதிவுகளே பதிவிடப்பட்டுள்ளன இத்தகைய பதிவுகள் சமூக வலைதளங்களான முகநூல் telegram மற்றும் எக்ஸ் ஆகியவற்றிலும் மற்றும் டார்க் வெப் ஆகியவற்றிலும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் தொடர்பான பதிவுகள் பரவலாக பதிவிடப்பட்டு வருகின்றன.
காஷ்மீரில் உள்ளூர் மக்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைவது குறைந்து வரும் நிலையில் இத்தகைய சமூக வலைதள செயல்பாடுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு 113 காஷ்மீர் மக்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர் இது கடந்த 2023 ஆம் ஆண்டில் வெறும் 22 ஆக குறைந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை வெறுமனே நான்கு பேர் மட்டும் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளனர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடுக்கு பேட்டியளித்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் இத்தகைய செயல்பாடுகள் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் காஷ்மீர் இளைஞர்கள் இடையே ஹீரோவாக இருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்கான் வாணியை மிகப்பெரிய போராளியாக அடையாளம் காட்டிய சமூக வலைதள செயல்பாடுகளுக்கு ஒப்பானதாக கருதலாம் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது இத்தகைய சமூக வலைதள பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் காஷ்மீரில் இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதை அதிகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாகவும் இதன் காரணமாக 2024ஆம் ஆண்டில் பனிக்காலத்தில் மட்டுமல்ல 2025 வெயில் காலத்திலும் பிரச்சனைகளை அதிகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்வது இந்திய அரசின் நடவடிக்கைகளால் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் இத்தகைய முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது