மிக விரைவில் உக்ரைன் போரில் களமிறங்க உள்ள வடகொரிய வீரர்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் !!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் மிக விரைவில் ரஷ்யாவில் உள்ள வடகொரிய ராணுவ வீரர்கள் உக்கிரன் போரில் களமிறங்க உள்ளதாகவும் தற்போது சுமார் 10,000 வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ளதாகவும் இவர்கள் ரஷ்ய படையணிகளில் இணைக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

அதாவது பிஜி நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்றிருந்த அவர் அங்கு செய்தியாளர்கள் இடையே வடகொரியா ராணுவ வீரர்கள் எந்தெந்த பணிகளுக்கு பயிற்சி பெற்றிருக்கிறார்களோ அந்தப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதாவது அதன் அடிப்படையில் ரஷ்ய ராணுவ படை பிரிவுகளில் இணைக்கப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் அவர்கள் உக்ரைன் போரில் களமிறங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் அதே நேரத்தில் தற்போது வரையிலும் வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்கிரன் போரில் களமிறங்கி உள்ளதாக எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை எனவும் தற்போது வரையில் அவர்கள் உக்கரைன் போரில் களமிறக்கப்படவில்லை என நம்புவதாகவும் கூறியுள்ளது கூடுதல் தகவலாகும்.

தென் கொரியா அரசு முதன் முதலில் இந்த தகவலை வெளியிட்டு இருந்தது தற்போது வடகொரியா ரஷ்யாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததற்கு கைமாறாக ரஷ்யா வடகொரியாவிற்கு பெட்ரோலிய பொருட்கள் பொருளாதார உதவிகள் மற்றும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ உதவிகளை அளித்திருப்பதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது இதற்கிடையே உக்கிரேனும் தங்களது படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்பதற்கு வடகொரிய வீரர்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை ரஷ்யா களமிறக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.